Latest Updates
-
தமிழ்நாட்டின் மிகச்சிறிய மாவட்டம் எது தெரியுமா? நிச்சயமா நீங்க நினைக்கிற மாவட்டம் இல்ல -
கிராமத்து ஸ்டைல் புளிச்ச கீரை பருப்பு கடையல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
மும்பை ரோட்டுக்கடை தவா புலாவ் ரெசிபி - இந்த ஸ்டைலில் செஞ்சு பாருங்க - டேஸ்ட் வேற லெவலில் இருக்கும் -
சென்னையில் காய்ச்சல் அதிகரிப்பு: காய்ச்சல் வந்தா உடனே என்ன பண்ணனும்? டாக்டர் சொல்லும் முக்கிய அறிவுரைகள்! -
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
இந்த பழக்கங்கள் உங்களுக்கே தெரியாமல் இரகசியமாக உங்க இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்குமாம் தெரியுமா?
கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவு உடல் பருமனுக்கு காரணமாகிறது. உணவின் தரம் மற்றும் ஆரோக்கியம் இரத்த சர்க்கரை அளவை கணிசமாக பாதிக்கிறது.
உடல் மற்றும் உணர்ச்சி மன அழுத்தம் உடலை பாதிக்கலாம். அதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு உட்பட உடலின் முக்கிய அமைப்புகளில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் மன அழுத்தம் பற்றி நம்மில் பலருக்கு தெரியாது. அனைத்து வகையான மன அழுத்தங்களாலும் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம். பெரும்பாலும் 35 வயதை கடந்தவர்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. சர்க்கரை நோய் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அவற்றில் உங்கள் வாழ்க்கை முறை மாற்றம், மன அழுத்தம் மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்க்கரை நோயாளிகள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவது முக்கியம். இல்லையெனில், இது உயிருக்கு ஆபத்தான பல உடல்நல சிக்கலை ஏற்படுத்தலாம்.

உங்கள் ஆரோக்கியத்தில் மன அழுத்தமும் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் மன அழுத்தத்திற்கு ஏற்ப இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் நீங்கள் கவனிக்க வேண்டியது முக்கியம். நீங்கள் பின்பற்றும் தவறான பழக்கம் உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகாரிக்கும். அவை என்னென்ன பழக்கங்கள் என்று இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்.

செயற்கை இனிப்புகள்
நீரிழிவு நோயை கட்டுப்படுத்த, நாம் சர்க்கரைக்கு மாற்றாகப் எதை பயன்படுத்துகிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், சிலர் குறைவான சர்க்கரையைச் சாப்பிடுவதால், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தலாம் என்றும் பல நீரிழிவு நோயாளிகள் வழக்கமான சர்க்கரைக்கு மாற்றாக செயற்கை இனிப்புகளை உட்கொள்ளலாம் என்றும் நினைக்கிறார்கள். இது முற்றிலும் தவறானது. இது உங்கள் இரத்த சர்க்கரையின் அளவை அதிகரிக்கும்.

தூக்கம் இல்லாமை
நாம் தூக்கத்தை அலட்சியப்படுத்துகிறோம். ஆனால், தூக்கம் நம் ஆரோக்கியத்தோடு சம்பந்தப்பட்டதாக இருக்கிறது. குறைவான நேரம் மட்டுமே தூங்குவது உங்கள் உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். தூக்கமின்மை இன்சுலின் சரியாகப் பயன்படுத்தும் உடலின் திறனைத் தொந்தரவு செய்கிறது. எனவே, தினமும் சரியான நேரம் தூங்காமல் இருப்பது, உங்கள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும். மேலும், பல உடல்நல பிரச்சனைகளையும் ஏற்படுத்தலாம்.

காலை உணவை தவிர்ப்பது
இரவில் வெகுநேரம் கழித்து உறங்கச் செல்வது, காலையில் வெகுநேரமாக எழுந்து, அலுவலகத்திற்குத் தயாராகும் வேலைகளில் விரைந்து செல்வது என்பது நம் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. தற்போதுள்ள பிஸியான காலகட்டத்தில் பெரும்பாலான மக்கள் காலை உணவைத் தவிர்த்து வருகிறார்கள். காலை உணவு நம் நாளை சுறுசுறுப்பாக மாற்ற உதவும். உங்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் ஆரோக்கியமான உணவை உட்கொள்ள வேண்டும். காலையில் எழுந்த ஒரு மணி நேரத்திற்குள் ஏதாவது சாப்பிடுவது முக்கியம்.

உடற்பயிற்சிகள் இல்லாமை
உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு விறுவிறுப்பான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல், ஓட்டம் மற்றும் ஜாகிங் போன்ற உடல் செயல்பாடுகளின் அவசியம். டைப் 2 நீரிழிவு நோயைத் தவிர்க்க, வாழ்க்கை முறை மாற்றத்தின் ஒரு பகுதியாக, வாரந்தோறும் 150 நிமிட உடல் செயல்பாடுகளை அமெரிக்க நீரிழிவு சங்கம் பரிந்துரைக்கிறது. உடற்பயிற்சி மிதமான முதல் தீவிரமானது வரை நீங்கள் செய்யலாம் மேலும், இது உங்கள் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

உணவில் நார்ச்சத்து குறைவு
கொழுப்புகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவு உடல் பருமனுக்கு காரணமாகிறது. உணவின் தரம் மற்றும் ஆரோக்கியம் இரத்த சர்க்கரை அளவை கணிசமாக பாதிக்கிறது. காய்கறிகள், விதைகள், நட்ஸ்கள், முழு தானியங்கள், மெலிந்த இறைச்சி, பழங்கள் போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகள் வகை 2 நீரிழிவு நோயிலிருந்து பாதுகாப்பதாக பல ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.

புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல்
புகைபிடித்தல் மற்றும் மது அருந்துதல் ஆகிய இரண்டு தீங்கு விளைவிக்கும் பழக்கவழக்கங்களும் மனித ஆரோக்கியத்தில் அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறது. சிகரெட் புகைத்தல் மற்றும் அதிக மது அருந்துதல் ஆகியவை இளைஞர்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். மேலும், இது புற்றுநோயையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

தவறான மருந்துகள்
மருந்துகளின் தவறான அளவு இரத்த சர்க்கரையின் அளவை மாற்றி நீரிழிவு நோயை உண்டாக்கும். அந்த உடல்நலச் சிக்கலுக்கு நீங்கள் தற்போது எடுத்துக்கொண்டிருக்கும் மருந்துகளுடன் உங்கள் மருத்துவரிடம் உள்ள மற்ற உடல்நிலைகள் குறித்தும் தெரிவிக்க வேண்டியது மிகவும் அவசியம். சில சமயங்களில் மருந்துகள் ஒன்றோடொன்று கலந்து எதிர்வினையாற்றுகின்றன. இது உங்கள் சர்க்கரை அளவை அதிகரித்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

ஹார்மோன் மாற்றங்கள்
ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் இரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்யும். பெண்களில், மாதவிடாய் சுழற்சி இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கலாம். ஈஸ்ட்ரோஜன் நேரடியாக இன்சுலின் உணர்திறனை பாதிக்கிறது. அதாவது உங்கள் ஈஸ்ட்ரோஜன் அளவுகள் குறைவாக இருந்தால், நீங்கள் அதிக இன்சுலின் எதிர்ப்பு சக்தியை அடைவீர்கள். எனவே மாதவிடாய் காலத்தில் பெண்களின் உடலில் இரத்தச் சர்க்கரையின் சமநிலையின்மை ஏற்படும்.



Click it and Unblock the Notifications
