Just In
- 8 min ago
உங்க காலில் இந்த அறிகுறிகள் இருந்தா...அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கணைய புற்றுநோயோட அறிகுறியாம்!
- 4 hrs ago
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு வரவிற்கு மேல் அதிகமாக செலவு செய்ய நேரிடும்..
- 14 hrs ago
பிட்சா தோசை
- 14 hrs ago
உங்க முடி நீளமா கருகருனு அடர்த்தியா வளர எலுமிச்சை சாறை இந்த 5 வழிகளில் யூஸ் பண்ணா போதுமாம்!
Don't Miss
- News
ஞானவாபி மசூதி - சிவலிங்க வழக்கு.. இன்று விசாரணை செய்யும் உச்ச நீதிமன்றம்.. பின்னணி என்ன?
- Finance
இன்றைய தங்கம் விலை எப்படியிருக்கு.. சென்னையில் என்ன நிலவரம்?
- Sports
மோடி மைதானத்திற்கு கிடைத்தது மோட்சம்.. ஒரு வழியாக ஆசை நிறைவேற போகுது.. பிசிசிஐ தந்த அப்பேட்
- Movies
ஜூனியர் என்டிஆர் பிறந்தநாள் ஸ்பெஷல்.. அனிருத் பண்ண தரமான சம்பவம்.. NTR 30 அறிவிப்பு வந்துடுச்சு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் சாதனம் வாங்க சரியான நேரம்- அமேசானில் வழங்கப்படும் அதிரடி தள்ளுபடி!
- Automobiles
டொயோட்டா ஃபார்ச்சூனருக்கு சவால்... இந்தியாவில் பலரும் காத்து கிடந்த கார் அறிமுகம்... விலை எவ்ளோனு தெரியுமா?
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சர்க்கரை நோய் இருக்கா? அப்ப இந்த காய்கறிகளை அடிக்கடி சாப்பிடுங்க... சரியாயிடும்...
சர்க்கரை நோய் ஒரு பொதுவான மற்றும் நாள்பட்ட ஆரோக்கிய நிலை. இன்று உலக மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதிக்கும் அதிகமானோர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்பிரச்சனை ஒருவரின் அன்றாட வாழ்க்கை முறையை பாதிக்கிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உண்ணும் உணவுகளில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அதே வேளையில் சரியான நேரத்தில் உணவுகளை தவறாமல் உண்டு, மருத்துவர் பரிந்துரைத்த மருந்துகளை தவறாமல் எடுக்க வேண்டும்.
சர்க்கரை நோய் உள்ள பலருக்கும் எந்த மாதிரியான பழங்களை மட்டுமின்றி, காய்கறிகளை சாப்பிட வேண்டும் என்பது தெரிவதில்லை. சர்க்கரை நோயாளிகள் அதிக கார்போஹைட்ரேட், உயர் கலோரிகள் மற்றும் ஸ்டார்ச் அதிகம் உள்ள காய்கறிகளைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவில் காய்கறிகளை கட்டாயம் சேர்க்க வேண்டும். ஏனெனில் அவற்றின் மூலம் சர்க்கரை நோயை நிர்வகிக்கத் தேவையான நுண் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் கிடைக்கும். இப்போது சர்க்கரை நோயாளிகள் எந்த காய்கறிகளை சாப்பிடுவது நல்லது என்பதைக் காண்போம்.

ப்ராக்கோலி
ப்ராக்கோலி சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது. ஏனெனில் இதில் நார்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி போன்றவை அதிகம் உள்ளன. ப்ராக்கோலியில் சல்பர் நிறைந்த சல்போரபேன் அதிகம் உள்ளது. இது இரத்த சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது.

வெண்டைக்காய்
வெண்டைக்காய் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க பெரிதும் உதவி புரியும். வெண்டைக்காயை வெட்டும் போது அதிலிருந்து வெளிவரும் கூழ் திரவம் இரத்த குளுக்கோஸ் அளவை சீராக்க உதவுகிறது. அதுவும் வெண்டைக்காயை இரண்டாக வெட்டி ஒரு டம்ளர் நீரில் ஊற வைத்து, காலையில் எழுந்து குடித்து வர சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தலாம்.

கேரட்
கேரட்டில் பீட்டா கரோட்டீன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. இது உடலில் இன்சுலின் அளவைக் குறைக்க உதவுகிறது. அதோடு, இதில் உள்ள வைட்டமின் ஏ நோயெதிர்ப்பு மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது.

பீன்ஸ்
பீன்ஸ் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற மற்றொரு ஆரோக்கியமான காய்கறி. இதில் இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், வைட்டமின் ஏ, ஃபோலேட் மற்றும் மக்னீசியம் அதிகம் உள்ளது. பீன்ஸில் நார்ச்சத்து மற்றும் புரோட்டீனைத் தவிர, கிளைசீமிக் இன்டெக்ஸ் அளவும் குறைவு.

முட்டைக்கோஸ்
சர்க்கரை நோயாளிகளின் உணவில் சேர்க்க வேண்டிய மற்றொரு காய்கறி முட்டைக்கோஸ். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் கே, மாங்கனீசு, நார்ச்சத்து மற்றும் வைட்டமின் பி6 போன்றவை அதிகம் உள்ளது. மேலும் முட்டைக்கோஸ் இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது மற்றும் கணையம் சரியாக செயல்படுவதை உறுதி செய்கிறது. கணையம் இன்சுலின் எனப்படும் முக்கிய நொதியை வெளியிடுகிறது, இது உடலில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது.

காலிஃப்ளவர்
காலிஃப்ளவரும் கார்போஹைட்ரேட் குறைவாக இருக்கும் காய்கறி. இதை உட்கொள்வதன் மூலம் ஒரு நாளைக்கு வேண்டிய வைட்டமின் சி கிடைக்கும். அதோடு இதில் இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் நார்ச்சத்து போன்றவை அதிகம் உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவும்.

வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் கார்போஹைட்ரேட் குறைவான சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறியாகும். இதை உண்பதன் மூலம் இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தலாம். மேலும் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்துடன், வைட்டமின் கே, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி அளவும் வளமான அளவில் உள்ளது.

தக்காளி
தக்காளி சர்க்கரை நோயாளிகளுக்கான மற்றொரு அற்புதமான காய்கறி. இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதோடு, வைட்டமின் ஏ, பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து போன்றவையும் வளமான அளவில் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் தக்காளிளை தினமும் கட்டாயம் சேர்க்க வேண்டும்.

பீட்ரூட்
பீட்ரூட் இனிப்பாக இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த காய்கறியை சாப்பிடலாமா கூடாதா என்ற கேள்வி இருக்கும். ஆனால் பீட்ரூட்டில் பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. இது உடலின் ஆற்றலை சீராக பராமரிக்க உதவி புரிநது, சர்க்கரை நோய் தொடர்பான களைப்பைக் குறைக்க உதவுவதால், பீட்ரூட் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறியாகும். அதோடு பீட்ரூட் இரத்த சர்க்கரை அளவு மற்றும் இரத்த அழுத்த அளவை சீராக்கும் திறன் கொண்டது.

பாகற்காய்
பாகற்காயில் பாலிபெப்டைடு-பி உள்ளது. இது இரத்த குளுக்கோஸ் அளவை இயற்கையாகவே குறைக்க உதவுகிறது. அதுவும் சர்க்கரை நோயாளிகள் பாகற்காய் ஜூஸ் குடிப்பது இன்னும் நல்லது.

சர்க்கரைவள்ளிக் கிழங்கு
சர்க்கரைவள்ளிக் கிழங்கில் அந்தோசையனின்கள் உள்ளன. இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற அற்புதமான உணவுப்பொருள்.

பசலைக்கீரை
பசலைக்கீரையும் சர்க்கரை நோயாளிகளுக்கான அற்புதமான காய்கறி. இதில் மக்னீசியம், ஃபோலேட் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், இது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தினமும் பசலைக்கீரை சாப்பிடுபவர்களுக்கு சர்க்கரை நோயின் அபாயம் 20 சதவீதம் குறைவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

கேல்
கேல் என்பதும் ஒரு வகையான கீரை. இதில் இரும்புச்சத்து, பொட்டாசியம் மற்றும் அத்தியாவசிய வைட்டமின்களான பி6, கே போன்றவை அதிகம் உள்ளன. மேலும் இதில் கலோரிகள் குறைவு மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம். கேல் கீரையை சர்க்கரை நோயாளிகள் அதிகம் சேர்த்து வந்தால் கட்டுப்படுத்தலாம்.

கத்திரிக்காய்
கத்திரிக்காய் ஒரு கார்போஹைட்ரேட் மற்றும் கலோரி குறைவான சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறி. இந்த காயை அதிகம் உணவில் சேர்த்து வந்தால், இன்சுலின் உற்பத்தியை சீராக்கி இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதைத் தடுக்கும்.

சுரைக்காய்
சுரைக்காய் சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற காய்கறி. அதுவும் சுரைக்காய் ஜூஸை காலையில் எழுந்ததும் குடித்தால் சர்க்கரை நோயை சரியாக நிர்வகிக்கலாம். சுரைக்காயில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால், இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க வழிவகை செய்கிறது.