Latest Updates
-
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
இந்த காரணம்தான் உங்களுக்கு சர்க்கரை நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறதாம்…!
உங்களுடைய உணவு பழக்கம் மட்டும் அல்லாமல் தூக்கமும் உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
போதிய தூக்கம் இல்லாமல் இருப்பது பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால் போதிய தூக்கம் இல்லாமல் இருப்பது குளுக்கோஸை ஒழுங்குபடுத்துவதற்கும் வளர்சிதை மாற்றுவதற்கும் உங்கள் உடலின் திறனைப் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உயர் இரத்த சர்க்கரை அளவை அனுபவிக்கும் பெரும்பாலான மக்கள் பொதுவாக இரவு சரியாக தூங்காதவர்கள் என்று தெரிவித்துள்ளது. உங்களுடைய உணவு பழக்கம் மட்டும் அல்லாமல் தூக்கமும் உங்கள் உடல் ஆரோக்கியத்தோடு தொடர்புள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நல்ல தூக்கம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதுக்காக்கிறது. உங்கள் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும்போது, உங்கள் சிறுநீரகங்கள் சிறுநீர் கழிப்பதன் மூலம் அதை அகற்ற முயற்சி செய்கின்றன. எனவே, நீங்கள் இரவில் சிறுநீர் கழிக்க பல முறை எழுந்தால், இது உயர் இரத்த சர்க்கரை அளவின் அறிகுறியாகவும் இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இக்கட்டுரையில் தூக்கமின்மை எப்படி நீரிழிவு நோயை ஏற்படுத்துகிறது என்ற ஆய்வு பற்றி காணலாம்.

ஆய்வு
ஒரு ஆய்வில், ஆரோக்கியமான பெரியவர்கள் இரவில் நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். ஆறு நாட்கள் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. ஆறு நாட்களுக்குப் பிறகு, இந்த நபர்களின் குளுக்கோஸ் சகிப்புத்தன்மை அளவு (குளுக்கோஸை உடைக்கும் திறன்) அளவிடப்பட்டது. அவர்களின் குளுக்கோஸ் சகிப்புத்தன்மை அளவு முன்பை விட 40 சதவீதம் குறைவாக இருந்தது கண்டறியப்பட்டது. நிரிழிவு நோய் வயதானவர்களுக்கு வருவதற்கு பொதுவான காரணமாக இது அமைகிறது. கூடுதலாக, தூக்கமின்மை உள்ளவர்களுக்கு அதிக கார்போஹைட்ரேட் காலை உணவு வழங்கப்பட்டபோது, அவர்களின் குளுக்கோஸ் அளவு கணிசமாக உயர்ந்தது.

அது ஏன் நடக்கிறது?
ஒரு நபர் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது, நரம்பு மண்டலத்தின் செயல்பாடு குறைகிறது. மூளை குறைவான குளுக்கோஸைப் பயன்படுத்துகிறது. மேலும், வளர்ச்சி ஹார்மோனின் அதிகரிப்பு மற்றும் கார்டிசோலை செயல்படுத்தும் ஹார்மோன் குறைதல் போன்ற மாற்றங்களும் நிகழ்கின்றன. அதனால்தான் உடலின் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு போதுமான அளவு ஆழ்ந்த தூக்கம் மிகவும் முக்கியமானது.

சோதனை
மற்றொரு பரிசோதனையில், ஆராய்ச்சியாளர்கள் மக்களின் தூக்க நிலைகளை ஆராய்ந்தார்கள். அதில், ஆழ்ந்த தூக்கத்திற்குள் நுழைவதைத் தடுக்க விஞ்ஞானிகள் மக்களின் தூக்கத்தை சீர்குலைத்தனர். ஆனால் அவர்களை முழுமையாக எழுப்பாமல், நன்றாக தூங்கவும் விடாமல் செய்தனர். இந்த இரவு தூக்கத்திற்குப் பிறகு, இந்த மக்களின் இன்சுலின் உணர்திறன் மற்றும் குளுக்கோஸ் அளவு 25 சதவீதம் குறைந்தது. எடை அதிகரிப்பதற்கும் நீரிழிவு நோய்க்கான ஆபத்துக்கும் தூக்கமின்மையே காரணம் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

உணவைப் போல தூக்கமும் முக்கியம்
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தூக்கத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால், அவர்களின் வழக்கத்தில் ஒரு சிறிய மாற்றம் கூட ஆற்றல் மற்றும் சோர்வு போன்றவற்றை உருவாக்கும். நீங்கள் எவ்வளவு சோர்வாக உணர்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்கள் உடல் இயங்கம் குறைகிறது மற்றும் இன்சுலின் குறைபாடுகளை உருவாக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே, நீரிழிவு நோயாளிகளுக்கு உணவைப் போலவே சரியான தூக்கமும் மிக முக்கியம்.

எவ்வளவு தூக்கம் தேவை?
ஒரு நபர் ஒருநாளைக்கு குறைந்தது 6 மணி நேரமாவது தூங்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றன. ஆனால், ஒருவருக்கு எவ்வளவு தூக்கம் தேவை என்பது அவர்களின் உடல்நிலை பொருத்தும், வயதை பொருத்தும் மாறுபாடும். ஒருவரின் தூக்கத் தேவை மரபணு ரீதியாக நிர்ணயிக்கப்பட்டு மாறுபடும். சராசரியாக, ஒரு நாளைக்கு 7 மணி நேரம் தூக்கினால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.



Click it and Unblock the Notifications