நவராத்திரி ஸ்பெஷலாக ட்ரெண்டில் வந்திருக்கும் வெஸ்டர்ன் உடைகள்

Posted By: Suganthi R
Subscribe to Boldsky

வருகின்ற துர்கா பூஜைக்காக மக்கள் நிறைய புதிய ட்ரெண்ட்டான ஆடைகளை எடுப்பதற்கு திட்டமிட்டு இருப்பீர்கள். பொதுவாக பாரம்பரிய உடைகளைத் தான் பூஜைக்கு அணிவர். ஆனால் எல்லா நாட்களும் அந்த உடைகள் உங்களுக்கு செளகரியமாக இருக்காது. எனவே தான் வெஸ்டர்ன் ஆடைகள் உங்களுக்கு செளகரியமாக இருப்பதோடு ஒரு அழகான கிளாசிக் லுக்கை வீசிச் செல்லும்.

இப்பொழுது இந்த ட்ரெண்டி ஆன வெஸ்டர்ன் ஆடைகளுக்கு கடைகளுக்கு செல்ல வேண்டிய அவசியமும் கிடையாது. ஆன்லைனிலயே அழ அழகான ஆடைகள் கிடைக்கின்றன.

சரி வாங்க இப்போ வருகின்ற துர்கா பூஜைக்கு தேவையான சில ட்ரெண்ட்டான வெஸ்டர்ன் ஸ்டைல் ஆடைகளை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கோல்டு ஷோல்டர்ஸ்

கோல்டு ஷோல்டர்ஸ்

இந்த ட்ரெண்ட் உலகம் முழுவதும் புகழ் பெற்ற ஒன்றாகும். இந்த கோல்டு ஷோல்டர் ட்ரெண்ட்டில் பெண்கள் டாப்ஸ், ப்ளெவ்ஸ், குர்தா போன்ற வித விதமான ஆடைகள் கிடைக்கின்றன. எல்லா வடிவமைப்பு ஆடைகளையும் வாங்கி துர்கா பூஜையின் 5 நாள் திருவிழாவுக்கும் போட்டு அசத்தலாம். இதில் ஒரு ஆடையமைப்பே உங்களை ட்ரெண்ட்டான உலகத்திற்கு இழுத்து செல்லும்.

 ஒன் ஷோல்டர்

ஒன் ஷோல்டர்

இந்த ட்ரெண்ட் ஒரு செக்ஸியான லுக்கை கொடுக்கும். இதில் நிறைய வித்தியாசமான ஒன் ஷோல்டர் டாப்ஸ், ப்ளெவ்ஸ் இருக்கின்றன. இன்னும் ஏன் வைட் பண்றீங்க காலியாகுவதற்குள் சீக்கிரமாக வாங்கிக் கோங்க.

 ஸ்ட்ரிப்டு பாட்டம்ஸ்

ஸ்ட்ரிப்டு பாட்டம்ஸ்

கோடுகள் போட்ட ஆடையமைப்பு பழைய ட்ரெண்ட்டாக இருந்தாலும் ஸ்ட்ரிப்டு பாட்டம்ஸ் தற்போது பேஷன் உலகில் ஒரு கலக்கு கலக்கிக் கொண்டிருக்கிறது. எனவே இந்த துர்கா பூஜைக்கு இந்த ட்ரெண்ட் அழகாக இருக்கும். பூஜை முடிந்த பிறகு இதை உங்கள் அலுவலகத்திற்கும் அணிந்து சென்று பேஷனில் புரட்சியை உண்டுபண்ணுங்க.

எந்த வகையான கோடுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு சில டிப்ஸ்

செங்குத்தான கோடுகள் உங்களை ஒல்லியாகவும் உயரமாகவும் காட்டும்

கிடைமட்ட கோடுகள் உங்களை அகலமாகவும் அதே நேரத்தில் உயரம் கம்மியாகவும் காட்டும்.

உங்களது உடல் வடிவமைப்பை பார்த்து கோடுகளை தேர்ந்தெடுப்பது நல்லது.

பேஸ்டல் கலர்டு டாப்ஸ்

பேஸ்டல் கலர்டு டாப்ஸ்

பேஸ்டல் கலர்டு வயது வித்தியாசம் இல்லாமல் இரு பாலினத்திற்குமே சிறப்பாக இருக்கும். தற்போது இதில் நிறைய வித்தியாசமான கலர்களுடன் புது ட்ரெண்ட் உருவாகியுள்ளது. எனவே இந்த அரிய வாய்ப்பை நழுவ விடாமல் உங்களுக்கு பிடித்த பேஸ்டல் பிங்க், க்ரீன், மஞ்சள் மற்றும் நிறைய வண்ணங்களில் ஒன்றை செலக்ட் பண்ணி அழகு பாருங்கள்.

பேச்டு டெனிம்ஸ்

பேச்டு டெனிம்ஸ்

உங்கள் தெருவோர துர்கா பூஜை நிகழ்ச்சிகளுக்கு இந்த பேச்டு டெனிம்ஸ் ட்ரெண்ட் நல்ல கூல் லுக்கை கொடுக்கும். இது பார்ப்பதற்கு ரெம்ப கலர்புல்லாக மற்றும் கூலாக இருக்கும். இதனுடன் கேஷூவல் டீ மற்றும் ஒயிட் ஸ்னீக்கர்ஸ்ம் போட்டு நீங்கள் நடந்து சென்றால் அங்கு நீங்க தான் அழகு.

குளோட்ஸ்

குளோட்ஸ்

இதுவரை நீங்கள் குளோட்ஸ் ட்ரெண்ட் வாங்கவே இல்லையா. இந்த வருடம் ஒரு பெரிய புகழ் பெற்ற ஆடை என்றால் இந்த குளோட்ஸ் ட்ரெண்ட் தான்.

குளோட்ஸ்யை உங்கள் குர்தா மற்றும் மற்ற பாட்டம்ஸ்க்கு டாப்பாக அணியலாம். இதுவரை இந்த ட்ரெண்டி ஆடையை நீங்க வாங்க வில்லை என்றால் உங்களுக்கு அதிர்ஷ்டம் இல்லை எனலாம். இந்த அதிர்ஷ்டத்தை நழுவ விட்டு விடாதீர்கள்.

லோ பேக்ஸ்

லோ பேக்ஸ்

இதுவரை லோ பேக்ஸ் ப்ளெவ்ஸ் தான் உங்கள் புடவைகளுக்கு அணிந்து இருப்பீர்கள். இந்த வருடத்தில் இருந்து லோ பேக் டாப்ஸ், டிரஸ் மற்றும் டீஸ் போன்றவைகளும் வரிசையில் நிற்கின்றன. இது உங்களை ரெம்ப ஹாட் ஆக காட்டுவதோடு கூலாகவும் குறுகிய கழுத்து டன் உயரமான பின்னழகுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ட்ரெண்ட்டிலும் துர்கா பூஜையில் வலம் வர மறந்து விடாதீர்கள்.

 பிளகிங் கிரிஸ் கிராஸ் கழுத்தமைப்பு

பிளகிங் கிரிஸ் கிராஸ் கழுத்தமைப்பு

இந்த ட்ரெண்ட்டும் உங்கள் துணிச்சலுக்கான ஒரு சவால் தான். இந்த ட்ரெண்ட் உங்களுக்கு ரெம்ப ஹாட் லுக் தருவதோடு எல்லா பெண்களாலும் அணியக் கூடியதாகவும் உள்ளது. இது ஒரு செக்ஸியஸ்ட் ட்ரெண்ட் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

DURGA PUJA SPECIAL: Must-Buy Western Style Trends

DURGA PUJA SPECIAL: Must-Buy Western Style Trends