சருமத்தில் உள்ள நீங்கா கருமையை எளிதில் போக்க வேண்டுமா? அப்ப இத ட்ரை பண்ணுங்க...

Posted By:
Subscribe to Boldsky

அழகு என்று வரும் போது பலரும் தங்கள் முகத்திற்கு மட்டும் தான் அதிக பராமரிப்புக்களைக் கொடுத்து வருவார்கள். ஆனால் அழகு என்பது தலை முதல் கால் வரை என்பதை மறவாதீர்கள். அதிலும் பலருக்கும் நடிகர், நடிகைகளைப் போன்று வெள்ளையாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும்.

How To Make Citric Whitening Body Scrub

அதற்காக பல க்ரீம்களை வாங்கியும் பயன்படுத்துவோம். இதனால் சருமத்தின் நிறமும் தற்காலிகமாக அதிகரித்து காணப்படும். இப்படி கண்டதை சருமத்திற்கு பயன்படுத்தினால், சரும ஆரோக்கியம் தான் பாதிக்கப்படும். ஆனால் சருமத்தில் உள்ள நீங்கா கருமையைப் போக்க இயற்கை வழிகளைப் பின்பற்றினால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சரும செல்களும் ஆரோக்கியமாக இருக்கும்.

இங்கு சருமத்தில் உள்ள நீங்கா கருமையைப் போக்க உதவும் ஓர் அற்புதமான பாடி ஸ்கரப் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றி, வெள்ளையாக மாறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேவையான பொருட்கள்:

தேவையான பொருட்கள்:

1.

ஆரஞ்சு பழம் - 2 துண்டுகள்

2.

2.

எலுமிச்சை பழம் - 2 துண்டுகள்

3.

3.

கல் உப்பு - 1/2 கப்

4.

4.

ஆலிவ் ஆயில் - 1/2 கப்

செய்முறை:

செய்முறை:

மிக்ஸியில் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு துண்டுகளைப் போட்டு, அத்துடன் கல் உப்பு மற்றும் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். இப்போது பாடி ஸ்கரப் ரெடி!

பயன்படுத்தும் முறை #1

பயன்படுத்தும் முறை #1

குளியலறைக்கு சென்று உடல் முழுவதும் இந்த கலவையைத் தடவி, வட்ட சுழற்சியில் 5 நிமிடம் மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும்.

பயன்படுத்தும் முறை #2

பயன்படுத்தும் முறை #2

பின் சோப்பு பயன்படுத்தி, நீரால் உடலை நன்கு கழுவி, உலர்த்த வேண்டும்.

நன்மை

நன்மை

இப்படி உடல் முழுவதும் ஸ்கரப் செய்யும் போது, அதில் உள்ள உட்பொருட்களின் சக்தியால் சருமத்தில் உள்ள கருமைகள் முழுமையாக நீங்கி, சருமம் வெள்ளையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How To Make Citric Whitening Body Scrub

Want to know how to make a citric whitening body scrub? Read on to know more...
Story first published: Saturday, January 7, 2017, 12:45 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter