For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மூக்கில் முள் போன்று உள்ள கரும்புள்ளிகளை போக்குவது எப்படி?

மூக்கில் உள்ள கரும்புள்ளிகளை போக்குவது எப்படி என்பது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது

By Lakshmi
|

முகத்தின் அழகை குறைத்துக்காட்டுவதில் கரும்புள்ளிகளுக்கு முக்கிய பங்கு உண்டு. இந்த கரும்புள்ளிகள் முக்கியமாக எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களுக்கு வரும். இது கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் முள்ளு முள்ளாக இருக்கும். இதனை போக்க சில வீட்டு வைத்தியங்களை இந்த பகுதியில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பட்டை மற்றும் தேன்:

பட்டை மற்றும் தேன்:

பட்டை மற்றும் தேன் இதற்கு மிகச்சிறந்த தீர்வாகும். 1 டேபிள் ஸ்பூன் பட்டை பொடியுடன் தேனை கலந்து பேஸ்ட் போல செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடங்களில் இரவில் அப்ளை செய்து காலையில் மிதமான சூடுள்ள நீரில் கழுவி விட வேண்டும்.

ஒட்ஸ் மற்றும் தேன் :

ஒட்ஸ் மற்றும் தேன் :

ஓட்ஸ் பொடி ஒரு டேபிள் ஸ்பூன், சம அளவு தேன் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

கிரீன் டீ

கிரீன் டீ

கிரீன் டீ இலையை நீரில் கலந்து, கரும்புள்ளி உள்ள இடத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதனை தினமும் 2 முறை செய்து வந்தால், சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும்.

உப்பு மற்றும் கடலை மாவு

உப்பு மற்றும் கடலை மாவு

1 டேபிள் ஸ்பூன் உப்பை 1/2 கப் நீரில் கலந்து நன்கு கரைந்த பின், கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி நன்கு உலர்ந்த பின், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி

முல்தானி மெட்டி பொடியுடன் ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் செய்து, கரும்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, நன்கு உலர்ந்த பின் நீரில் கழுவ வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how remove blackheads in nose

how remove blackheads in nose
Story first published: Monday, August 21, 2017, 19:06 [IST]
Desktop Bottom Promotion