2 நாட்களில் முகப்பரு, கரும்புள்ளி, சரும கருமை போன்ற பிரச்சனைகளைத் தடுக்கும் ஃபேஸ் பேக்குகள்!

Posted By:
Subscribe to Boldsky

தற்போது சரும பிரச்சனைகளான முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் வெயிலால் கருமையான சருமத்தால் பலரும் அவஸ்தைப்பட்டு வருகின்றனர். இப்பிரச்சனைகளைப் போக்க க்ரீம்கள் பலவற்றை வாங்கி பயன்படுத்தியும் இருப்பார்கள். இருந்தாலும், எந்த ஒரு மாற்றமும் தெரிந்திருக்காது. சரும பிரச்சனைகளுக்கு இயற்கை வழிகளை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை.

Homemade Face Packs For Dark Spots From Acne & Sun Damage

ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை பல்வேறு சரும பிரச்சனைகளைப் போக்கும் சில எளிய ஃபேஸ் பேக்குகளைக் கொடுத்துள்ளது. அவற்றை தினமும் சருமத்திற்கு பயன்படுத்தி வந்தால், நிச்சயம் சருமத்தில் உள்ள முகப்பரு, கரும்புள்ளி பிரச்சனைகளை விரைவில் போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளரிக்காய் பேக்

வெள்ளரிக்காய் பேக்

வெள்ளரிக்காயை அரைத்து, முகத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் வெள்ளரிக்காயில் உள்ள ப்ளீச்சிங் தன்மையால், சருமத்தில் இருக்கும் கருமைகள் மறைய ஆரம்பித்து, சரும பொலிவு அதிகரிக்கும்.

தேன் மற்றும் எலுமிச்சை பேக்

தேன் மற்றும் எலுமிச்சை பேக்

வெயிலில் சுற்றி கருமையான சருமத்தை மீண்டும் பிரகாசமாக்க, எலுமிச்சை சாற்றில் தேன் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, சருமம் மென்மையாக இருக்கும்.

பால் மற்றும் சந்தனம் பேக்

பால் மற்றும் சந்தனம் பேக்

பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. இது கருமையான தழும்புகள் மற்றும் சரும கருமையைப் போக்கும். சந்தனமோ சருமத்தின் பொலிவை அதிகரிக்கும். இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 15-30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் பேக்

முல்தானி மெட்டி மற்றும் ரோஸ் வாட்டர் பேக்

முல்தானி மெட்டி பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி உலர்ந்ததும் கழுவ வேண்டும். இதனால் முகப்பரு முதல் கரும்புள்ளிகள் வரை அனைத்தும் நீங்கும்.

தக்காளி மற்றும் தயிர் பேக்

தக்காளி மற்றும் தயிர் பேக்

தக்காளியில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. தயிரில் லாக்டிக் அமிலம் உள்ளது. இந்த இரண்டையும் ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 15-20 நிமிடம் கழித்து கழுவ, சருமத்தில் உள்ள தழும்புகள் மறைந்து, சருமம் பிரகாசமாக மின்னும்.

கற்றாழை மற்றும் லாவெண்டர் பேக்

கற்றாழை மற்றும் லாவெண்டர் பேக்

கற்றாழை ஜெல்லில் சிறிது லாவெண்டர் எண்ணெய் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 30 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இதனால் சரும கருமை, தழும்புகள் போன்றவை மறைய ஆரம்பிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Homemade Face Packs For Dark Spots From Acne & Sun Damage

Here are some homemade face packs for dark spots that appear due to acne and sun damage.
Story first published: Tuesday, January 10, 2017, 13:00 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter