ஏழே நாட்களில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க சில எளிய வழிகள்!

Posted By:
Subscribe to Boldsky

பருக்களால் தழும்புகள் ஏற்படுவதற்கு நம்மிடம் உள்ள ஒரு கெட்ட பழக்கம் தான் காரணம். அது வேறொன்றும் இல்லை, பருக்கள் வந்ததும் அதனை கிள்ளுவது தான். இப்படி கிள்ளுவதால், பருக்கள் போகும் போது தழும்புகளை உண்டாக்குகின்றன.

இவ்வாறு ஏற்படும் தழும்புகள், முக அழகையே கெடுத்துவிடும். இதனைத் தவிர்க்க பருக்களை கிள்ளுவதை நிறுத்துவதோடு, வந்த தழும்புகளை மறைய வைக்க ஒருசில எளிய இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் ஏழே நாட்களில் மறையச் செய்யலாம்.

இங்கு ஏழே நாட்களில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க உதவும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றி நன்மைப் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கற்றாழை ஜெல் க்ரீம்

கற்றாழை ஜெல் க்ரீம்

3 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 7-8 துளிகள் துளசி எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரில் துடைத்து, பின் இந்த க்ரீம்மை தடவ வேண்டும். இந்த முறையை தினமும் இரவில் படுக்கும் முன் பயன்படுத்தி வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் விரைவில் மறையும்.

வைட்டமின் சி பவுடர்

வைட்டமின் சி பவுடர்

சருமத்தில் உள்ள தழும்புகளை வைட்டமின் சி நிறைந்த பொருட்கள் எளிதில் மறையச் செய்யும். அதற்கு வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, தினமும் இரவில் படுக்கும் முன் 1 டேபிள் ஸ்பூன் பொடியில் 1/4 கப் தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

க்ரீன் டீ மாஸ்க்

க்ரீன் டீ மாஸ்க்

க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. எனவே ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி, 1 டீஸ்பூன் தேன் மற்றும் க்ரீன் டீ சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தினமும் செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் மறைந்திருப்பதைக் காணலாம்.

எலுமிச்சை-முட்டை மாஸ்க்

எலுமிச்சை-முட்டை மாஸ்க்

இந்த முறையின் மூலமும் பருக்களினால் ஏற்பட்ட தழும்புகளை விரைவில் போக்கலாம். அதற்கு ஒரு ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முதலில் முகத்தை ஈரமான துணியால் துடைத்துவிட்டு, பின் இக்கலவையை முகத்தில் தடவி 5 நிமிடம் உலர வைத்து, பின் மீண்டும் அதன் மேல் தடவி உலர வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.

புதினா

புதினா

2 டேபிள் ஸ்பூன் புதினா பேஸ்ட்டை, 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் சேர்த்து, அதோடு 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து, ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் இரண்டு முறை அந்த கலவையை முகத்தில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதன் மூலமும் பருக்களால் வந்த தழும்புகளைப் போக்கலாம்.

அன்னாசி-பப்பாளி மாஸ்க்

அன்னாசி-பப்பாளி மாஸ்க்

அன்னாசி மற்றம் பப்பாளியில் நொதிப்பொருட்கள் அதிகம் உள்ளது. எனவே இந்த இரண்டு பழங்களையும் சிறிது எடுத்து ஒன்றாக அரைத்து, அத்துடன் சிறிது தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவி, பின் கற்றாழை ஜெல்லைத் தடவ வேண்டும்.

ஓட்ஸ்-பேக்கிங் சோடா ஸ்கரப்

ஓட்ஸ்-பேக்கிங் சோடா ஸ்கரப்

3 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் குளிர்ந்த பால், 1/2 டீஸ்பூன் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 2 நிமிடம் மென்மையாக வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து, பின் 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்வதால் பருக்களால் வந்த தழும்புகள் மட்டுமின்றி, சருமத்தின் மென்மையும், அழகும் அதிகரிக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Top Ways to Remove Acne Scars Fast in 7 Days

Are those stubborn acne scars on your face embarrassing you? Do you wish to get rid of the scars in a week? Here are top ways to remove acne scars fast in 7 days. Read on to know more...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter