ஒரு நாளைக்கு எத்தனை முறை முகம் கழுவுவது நல்லது எனத் தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

அழகு பராமரிப்பு என்று வரும் போது நிபுணர்கள் முதலில் பரிந்துரைப்பது பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை அதிகம் உண்பதோடு, ஜூஸ், தண்ணீர் போன்றவற்றையும் அதிகம் பருக வேண்டும் என்று தான்.

சொல்லப்போனால் நீர்ம பானங்களை அதிகம் பருகுவதால் சருமத் துளைகள் திறக்கப்பட்டு, வியர்வை வழியே அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, சரும அழகு மேம்பட்டு காணப்படும்.

அதோடு நீங்கள் அடிக்கடி முகத்தைக் கழுவும் பழக்கம் கொண்டிருந்தால், உங்கள் சருமத்திற்கு உருப்படியான ஒன்றை செய்கிறீர்கள் என்று அர்த்தம். ஆனால் அதற்கும் ஒரு அளவு உள்ளது. ஒரு நாளில் அளவுக்கு அதிகமாக முகத்தை கழுவினால், சருமம் தான் பாதிக்கப்படும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வறட்சியான சருமம்

வறட்சியான சருமம்

வறட்சியான சருமத்தைக் கொண்டவர்கள் ஒரு நாளைக்கு நான்கு முறை முகத்தைக் கழுவுவது தவறான ஒன்று. இத்தகைய சருமத்தினர் பகலில் ஒரு நாளைக்கு ஒருமுறை தான் முகத்தைக் கழுவ வேண்டும்.

எண்ணெய் பசை சருமம்

எண்ணெய் பசை சருமம்

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் ஒரு நாளைக்கு அதிகப்பட்சமாக 3 முறை முகத்தைக் கழுவுவதன் மூலம், சரும ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.

பருக்கள்

பருக்கள்

ஒருவேளை உங்களுக்கு பருக்கள் அதிகம் இருப்பின், ஒரு நாளைக்கு குறைந்தது 4 முறை முகத்தைக் கழுவ வேண்டும். அதுவும் சோப்பு எதுவும் பயன்படுத்தாமல் வெறும் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

விதிமுறைகள்

விதிமுறைகள்

இங்கு முகத்தைக் கழுவுவதற்கான ஒருசில விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதிலும் கோடையில் அதிகம் வியர்ப்பதால், பலரும் எந்நேரமும் முகத்தைக் கழுவியவாறே இருப்பார்கள். எனவே ஒவ்வொருவரும் தங்கள் சரும ஆரோக்கியத்தைப் பாதுகாக்க, அந்த விதிமுறைகள் என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

காலை

காலை

காலையில் எழுந்ததும் முகத்தைக் கழுவிவிட்டு தான், எந்த வேலையையும் செய்வோம். வேண்டுமானால் இந்நேரத்தில் முகத்தைக் கழுவும் போது மைல்டு சோப்பைப் பயன்படுத்திக் கழுவலாம். இதனால் முகத்தில் உள்ள அழுக்குகள் வெளியேற்றப்பட்டு, முகம் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

மதியம்

மதியம்

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், மதிய வேளையில் கட்டாயம் முகத்தைக் கழுவ வேண்டும். அதிலும் எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும் ஃபேஸ் வாஷ் என்னவென்று நிபுணர்களிடம் கேட்டு பயன்படுத்த வேண்டும். இல்லையெனில், குளிர்ந்த நீரில் மட்டும் முகத்தைக் கழுவலாம். இதனால் சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேற்றப்படும்.

மாலை

மாலை

அலுவலகம் முடிந்து வீட்டிற்கு வந்ததும் குளிப்பது மிகவும் நல்லது. இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேற்றப்படும். ஆனால் கோடையில் மாலை வேளையில் முகத்தைக் கழுவுவதுடன், பழங்கள் அல்லது காய்கறிகளால் ஆன ஃபேஸ் பேக் போடுவது, உங்களை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும்.

டிப்ஸ் 1

டிப்ஸ் 1

ஒவ்வொரு முறை முகத்தைக் கழுவும் போதும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முழுமையாக வெளியேற்றப்பட்டுவிடும்.

டிப்ஸ் 2

டிப்ஸ் 2

முகத்தில் அதிக அளவில் எண்ணெய் வழிந்தால், ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதற்கு பதிலாக, டோனரைக் கொண்டு முகத்தை துடைத்து எடுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் முகம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.

டிப்ஸ் 3

டிப்ஸ் 3

சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், வெதுவெதுப்பான நீரில் பால் சேர்க்கப்பட்ட ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தைக் கழுவுவது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How Many Times Should You Wash Your Face In A Day

How many times should you wash your face in the day? Ask the experts and they will tell you the truth as to how often you should wash your beautiful skin.
Story first published: Wednesday, March 30, 2016, 12:43 [IST]