ஒட்டிய கன்னம் உப்புவதற்கு பார்லி ரெசிபி ட்ரை பண்ணியிருக்கீங்களா?

Written By:
Subscribe to Boldsky

கன்னங்கள் குண்டாக இருந்தால் அழகு கொஞ்சம் கூடுதலாக தெரியும் என்பது உண்மைதான்.

கொஞ்சம் கன்னம் மட்டும் உப்பி இருந்தால் இன்னும் கொஞ்சம் அழகாய் இருப்போமே என பலர் தங்களை கண்ணாடியில் பார்த்து புலம்புவார்கள்.

நன்றாகத்தான் சாப்பிடுகிறேன். தூங்குகிறேன். ஆனால் என்ன செய்தும் கன்னம் குண்டாகவில்லையே என கவலைப் படுபவரா நீங்கள்? இங்கே சொன்ன டிப்ஸ் அத்தனையும் நிச்சயம் பலனளிக்கும். முயற்சித்து பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பலூன் ஊதுங்கள் :

பலூன் ஊதுங்கள் :

தினமும் ஒரு பலூனை எடுத்து ஊதுங்கள். முடியும் வரை ஊதிவிட்டு காற்றை வெளிவிடாமல் அப்படியே ஊதிய நிலையில் 1 நிமிடம் இருங்கள்.

பின்னர் மெதுவாக காற்றை வெளி விடவும். தினமும் 5-6 முறை செய்து பாருங்கள். கன்னம் உப்பும்.

ஆப்பிள் :

ஆப்பிள் :

ஆப்பிளை நன்றாக பேஸ்ட் போல அரைத்து கன்னப் பகுதி முழுவதும் தடவுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தினமும் இப்படி செய்தால் கன்னங்கள் போஷாக்கு பெற்று குண்டாகும்.

 வெண்ணெய் :

வெண்ணெய் :

வெண்ணெய் சிறிது எடுத்து அதில் சர்க்கரை கலந்து கன்னத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். 20 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். ஒட்டிய கன்னங்கள் நாளடைவில் உப்ப ஆரம்பிக்கும்.

ஒரு கப் பால் :

ஒரு கப் பால் :

தினமும் ஒரு கப் பாலில் 1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் வெண்ணெய் மற்றும் அரை ஸ்பூன் ஓட்ஸ் கலந்து குடித்து வந்தால் கன்னங்கள் ஊட்டம் பெற்று குண்டாகும்.

 ஆப்பிள், கேரட் ஜூஸ் :

ஆப்பிள், கேரட் ஜூஸ் :

சில துண்டு ஆப்பிள் மற்றும் கேரட் சேர்த்து ஜூஸாக்கி தினமும் குடித்து வந்தால் கன்னங்கள் குண்டாகி மினுமினுப்பை பெறும்.

பார்லி ரெசிபி :

பார்லி ரெசிபி :

தேவையானவை :

பால் - 1 ஸ்பூன்

பார்லி தூள் - 1 டீ ஸ்பூன்

வெண்ணெய் - 1 டீ ஸ்பூன்

மேலே சொன்னவற்றை ஒன்றாக அடித்து கலந்தால் க்ரீம் போன்று நுரை வரும். அந்த க்ரீம் எடுத்து கன்னங்களில் பூசுங்கள். 30 நிமிடம் கழித்து முகத்தை கழுவவும். கன்னம் மென்மையாகவும் பூசியபடியும் இருக்கும்.

 ஆலிவ் எண்ணெய் :

ஆலிவ் எண்ணெய் :

ஆலிவ் எண்ணெய் உடலை சற்று பூசச் செய்யும் நல்ல கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளது. இதனை தினமும் உணவில் சேர்த்து வாருங்கள்.

அதோடு ஆலிவ் எண்ணெய் ஒரு ஸ்பூன் எடுத்து வெதுவெதுப்பான நீரில் கலந்து , அதனுடன் தேன் சில துளி கலந்து கொப்பளித்து வாருங்கள். நல்ல பலன் தெரியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to get chubby cheeks

Use these tips at regular basis to get chubby cheeks
Story first published: Monday, October 3, 2016, 13:00 [IST]
Subscribe Newsletter