Latest Updates
-
இந்தியாவின் முதல் IAS அதிகாரி யார்? அவருடைய பெயர் என்ன தெரியுமா? அவரு யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிருவீங்க -
2 முருங்கைக்காயை இருந்தா.. இப்படி ஒருவாட்டி பிரியாணி செஞ்சு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
4-ல் 3 இந்திய பெண்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு: உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்க சிம்பிளான 6 டிப்ஸ் இதோ! -
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க..
மழை நீரால் உங்கள் சருமத்தை எப்படி சுருக்கமின்றி பொலிவாக்கலாம் என தெரியுமா?
மழை நீர் சுத்தமானது. அது அழுக்குகளை களைந்து சருமத்தை சுத்தமாக்கும். அஅதனை உபயோகித்து உங்கள் சரும அழகை அதிகரிக்கச் செய்யலாம். அதோடு சருமத்தை பாதுகாக்க குள்ர்கால குறிப்புகள்!
குளிர் மற்றும் மழைக்காலத்தில் உங்கள் சருமத்தை அதிகப்படியாக பாதுகாக்க வேண்டும். அந்த சமயங்களில்தான் சருமம் அதிக வறட்சியை சந்திக்கிறது.
காரணம் போதிய அளவு நாம் நீர் அருந்த மாட்டோம். வியர்வை சுரப்பிகள் இயங்காது. இதனால் சருமத்தில் இறந்த செல்கள் தேங்கி, புதிய செல்களின் உருவாக்கும் குறைந்து சுருக்கம், சருமத்தை கீறினால் வெள்ளையாக கோடு ஆகியவை ஏற்படுகிறது.

குளிர்காலம் அப்படித்தான் இருக்குமென அப்படியே விட்டால் சுருக்கம் எற்படும். பின் எளிதில் சுருக்கங்கள் மறையாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
உங்கள் சருமத்தை குளிர்காலத்தில் காப்பாற்ற இந்த குறிப்புகளை பயன்படுத்துங்கள்.

மழை நீர் மற்றும் தேன் :
தேவையானவை :
மழை நீர் 1 கப்.
தேன் - 1 ஸ்பூன்
செய்முறை :
மழை நீரில் தேனை கரையும் வரை கலந்திடுங்கள். பின்னர் அதனை முகம் மற்றும் கைகளில் தேய்த்து அரை மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கழுவினால் சருமம் மினுமினுக்கும்.

தேவையானவை :
முல்தானி மட்டி - 1 கப்
கற்பூரம்- 1 ஸ்பூன்
ரோஸ் வாட்டர் - கலக்க தேவையானது.

செய்முறை :
முல்தானிமட்டியில் கற்பூரத்தை பொடி செய்து சேர்த்துங்கள். அதில் தேவையான அளவு ரோஸ் வாட்டரை கலந்து முகம் மற்றும் கழுத்தில் தேய்க்கவும்.
காய்ந்தம் கழுவுங்கள். முகப்பரு, கரும்புள்ளி ஆகியவை மறைந்துவிடும். சுருக்கங்கள் மறைந்து சருமம் மறையும். ஈரப்பதம் தேவையான அளவு இருக்கும்.

தேவையானவை :
முல்தானி மட்டி - 1 கப்
சந்தனப் பொடி - 2 ஸ்பூன்
துளசி இலை - 10 இலைகள்
கிராம்பு எண்ணெய்- 1 துளி
ரோஸ் வாட்டர் - கலக்க தேவையான அளவு

செய்முறை :
இவை எல்லாவற்றையும் கலந்து முகத்தில் போடவும். இது சருமத்திலுள்ள அழுக்குகளை சுத்தப்படுத்தும். அதோடு சருமப் பொலிவை தரும்.

தேவையானவை :
முல்தானி மட்டி - 1 கப்
வேப்பிலை பேஸ்ட் - 2 ஸ்பூன்
கிராம்பு எண்ணெய் - 2 துளி

செய்முறை :
இந்த எல்லாபொருட்களையும் ஒன்றோடொன்று கலந்து முகத்தில் தடவவும். முகப்பருக்கள், கருமை, மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து முகம் ஜொலிக்கும்.



Click it and Unblock the Notifications
