பல சரும பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கேரட் ஃபேஸ் மாஸ்க்...!

Posted By:
Subscribe to Boldsky

கேரட் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டும் நல்லதல்ல, அழகை அதிகரிக்கவும் பயன்படும். இதற்கு கேரட்டில் வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகமாக உள்ளது. எனவே தினமும் ஒரு கேரட்டை சாப்பிட்டு வருவதோடு, அவற்றைக் கொண்டு ஃபேஸ் மாஸ்க் போட்டு வந்தால், அதனால் சருமத்தில் ஏற்படும் பல பிரச்சனைகள் அகலும்.

இங்கு எந்த மாதிரியான சரும பிரச்சனைக்கு கேரட்டைக் கொண்டு எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போடுவதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து விடுமுறை நாட்களில் பின்பற்றி வந்தால், நிச்சயம், நீங்கள் சந்திக்கும் பல சரும பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு கிடைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெள்ளையான சருமம்

வெள்ளையான சருமம்

15 நாட்களில் சருமத்தின் நிறம் அதிகரிக்க வேண்டுமானால், கேரட் மாஸ்க் போடுங்கள். அதுவும் 1 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட்டுடன், 1 டீஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் ரோஸ் வாட்டர், 1 டீஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி 15 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால், நிச்சயம் உங்கள் சரும நிறம் அதிகரித்திருப்பதைக் காணலாம்.

சுருக்கங்கள்

சுருக்கங்கள்

1 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட், 1 டேபிள் ஸ்பூன் பால், 1 டீஸ்பூன் அரிசி மாவு, 1 சிட்டிகை மஞ்சள் தூள் மற்றும் 1 டீஸ்பூன் தேன் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, ஒரு நாள் விட்டு ஒரு நாள் என ஒரு மாதம் செய்து வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும்.

ஒருவித கருமையான புள்ளிகள்

ஒருவித கருமையான புள்ளிகள்

1 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட்டுடன், 1 டீஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ, முகத்தில் உள்ள ஒருவித கருமையான புள்ளிகள் மறையும். குறிப்பாக இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை என 4 வாரம் பின்பற்றி வந்தால், அந்த புள்ளிகள் மறைந்திருப்பதைக் காணலாம்.

பொலிவிழந்த சருமம்

பொலிவிழந்த சருமம்

1 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட்டுன், 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி, 1 டேபிள் ஸ்பூன் துருவிய ஆப்பிள் சேர்த்து கலந்து, முகத்தில தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகத்தின் பொலிவு அதிகரிக்கும்.

முக வீக்கம்

முக வீக்கம்

சிலருக்கு காலையில் தூங்கி எழுந்ததால் முகம் வீங்கி காணப்படும். இதைத் தடுக்க 1 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட், 1 டீஸ்பூன் பீட்ரூட், 1 டீஸ்ழுன் துருவிய உருளைக்கிழங்கு, 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி அவ்வப்போது செய்து வந்தால், இந்த வீக்கம் ஏற்படுவதைத் தடுக்கலாம்.

எண்ணெய் பசை

எண்ணெய் பசை

சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையை நீக்க, 3 டேபிள் ஸ்பூன் கேரட் ஜூஸை எடுத்துக் கொண்டு, அத்துடன் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, காட்டன் பயன்படுத்தி இக்கலவையை தினமும் காலை மற்றும் மாலையில் முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ, முகத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கும்.

வறட்சியான சருமம்

வறட்சியான சருமம்

வறட்சியான சருமம் இருப்பவர்கள், 1 டேபிள் ஸ்பூன் துருவிய கேரட்டுடன், 1 டீஸ்பூன் மில்க் க்ரீம் அல்லது பால் மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ, சருமத்தின் ஈரப்பசை வழங்கப்பட்டு, சரும வறட்சி நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Different Carrot Face Masks To Solve All Your Beauty Problems

Use carrot face masks to make your skin glowing and younger. Here is how to use carrot mask for healthy skin. Read on to know beauty uses of carrots and how to use carrots for face.
Story first published: Saturday, January 23, 2016, 12:15 [IST]
Subscribe Newsletter