தினமும் ஒரு துண்டு தக்காளியை முகத்தில் தேய்ப்பதால் பெறும் நன்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய காலத்தில் அழகின் மீது அக்கறை கொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது. அதிலும் பெரும்பாலானோர் இயற்கை வழிகளைத் தான் தேடுகின்றனர். எப்படி வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டே அழகாக மாறுவது என்று தான் பலரும் யோசிக்கின்றனர்.

அத்தகையவர்களுக்காக வீட்டின் சமையலறையில் உள்ள ஓர் பொருள் தான் தக்காளி. இந்த தக்காளியில் உள்ள அமிலத்தன்மை மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளால் சரும ஆரோக்கியம் மேம்படுத்தப்பட்டு, பல்வேறு பிரச்சனைகளில் இருந்து உடனடி தீர்வு கிடைக்கும்.

சரி, இப்போது அந்த தக்காளியை தினமும் முகத்தில் தேய்த்து ஊற வைத்து கழுவி வந்தால் பெறும் நன்மைகள் என்னவென்றும், தக்காளியை வேறு எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்றும் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகப்பரு

முகப்பரு

பருக்களால் அதிகம் கஷ்டப்படுபவர்கள் இச்செயலை செய்து வந்தால், முகப்பரு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம். இதற்கு அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி தான் காரணம்.

சருமத்துளைகள் சுருங்கும்

சருமத்துளைகள் சுருங்கும்

சிலருக்கு முகத்தில் மேடு பள்ளங்கள் அதிகம் இருக்கும். இது ஒருவரின் முகத்தை மிகவும் அசிங்கமாக வெளிக்காட்டும். இதனைத் தவிர்க்க, தினமும் தக்காளியை துண்டாக்கி முகத்தில் தேய்த்து 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதனால் விரிவடைந்த சருமத் துளைகள் சுருங்கும்.

சரும கருமை அகலும்

சரும கருமை அகலும்

வெயிலில் அதிகம் சுற்றி முகம் கருமையடைந்துள்ளதா? அப்படியெனில் தினமும் இரவில் படுக்கும் முன் தக்காளி துண்டைக் கொண்டு முகத்தை தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

பொலிவான முகம்

பொலிவான முகம்

முகம் பொலிவிழந்து காணப்படுகிறதா? முகப்பொலிவை அதிகரிக்க தக்காளியை துண்டாக்கி தேனில் நனைத்து, முகத்தில் தேய்த்து விடுங்கள். பின் 10 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவுங்கள். பின் பாருங்கள் முகம் பொலிவுடன் காணப்படும்.

எண்ணெய் பசை நீங்கும்

எண்ணெய் பசை நீங்கும்

முகத்தில் எண்ணெய் அதிகம் வழிந்தால், அதனைத் தவிர்க்க தக்காளியை தினமும் முகத்தில் தேய்த்து 15 நிமிடம் ஊற வைத்து கழுவுங்கள். இதனால் நல்ல பலன் கிடைப்பதை நீங்களே காணலாம்.

தக்காளி ஃபேஸ் வாஷ்

தக்காளி ஃபேஸ் வாஷ்

தினமும் மாலையில் வீட்டிற்கு வந்ததும் முகத்தைக் கழுவும் போது சோப்பைப் பயன்படுத்தாமல், 1 டேபிள் ஸ்பூன் தக்காளி ஜூஸ் உடன், சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் முழுமையாக வெளியேறும்.

தக்காளி ஃபேஸ் பேக்

தக்காளி ஃபேஸ் பேக்

தக்காளியைக் கொண்டு ஃபேஸ் பேக் போட நினைத்தால், தக்காளி சாற்றுடன், சிறிது தயிர், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 1 முறை போட்டு வந்தால், முகத்தின் அழகு மேம்பட்டு இருப்பதைக் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Benefits Of Rubbing Tomato On Face Everyday

Here are some beauty benefits of rubbing tomato on face. Read on to know more.
Story first published: Wednesday, June 1, 2016, 13:31 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter