For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்க முகம் ஃபிரெஷ்ஷா, பளிச்சுன்னு இருக்க இந்த ஃபேஸ் ப்ளீச் பயன்படுத்துங்க!

By Viswa
|

நாம் அனைவருமே அழகாகவும், முகப் பொலிவுடனும் தான் இருக்க வேண்டும் என ஆசைப்படுவோம். அதற்காக தினசரி தொலைக்காட்சியில் பார்க்கும் அனைத்து விளம்பரங்களையும் கண்டு நமக்கு ஏற்றதாக இது இருக்கும் என பல இரசாயன க்ரீம்களை வாங்கி உபயோகப்படுத்தியதால், முகப்பொலிவு கிடைத்திருக்குமோ இல்லையோ, ஏமாற்றம் அடைந்து போய் முகத்தில் சலிப்பு மட்டும் மிஞ்சியிருக்கும். முகம் பிரகாசிக்கவும், பொலிவு பெறவும் வேண்டும் என்றால் இயற்கை முறையிலான வழிமுறைகள் தான் சரியான தீர்வளிக்கும்.

முகத்தில் உள்ள மாசு, மரு நீங்க, சருமம் மிருதுவாக, பளிச்சிட வேண்டும் என்றால் ப்ளீச் செய்ய வேண்டியது அவசியம். அதற்காக நீங்கள் திரும்பவும் இரசாயன பொருட்களை நாடி செல்ல தேவை இல்லை. பிரிட்டிஷில் உள்ள ஒரு சரும நலன் ஃபவுண்டேஷன் நடத்திய ஆய்வில், இரசாயன பொருட்கள் மூலம் ப்ளீச் செய்வதன் மூலம் முறையான தீர்வு பெற இயலாது. 1௦௦ சதவீதம் இயற்கை முறையிலான ப்ளீச் மட்டுமே முகத்திற்கு பொலிவு தரும் என கூறியிருகின்றனர். நீங்களே உங்களது வீட்டில் இருந்தவாறு இயற்கையான பொருட்களைக் கொண்டு ப்ளீச் செய்துக் கொள்ள நிறைய வழிகள் இருக்கின்றன.

இது குறித்து தோல் மருத்துவர்கள் கூறுவது, ஒவ்வொருவரின் சருமம் ஒவ்வொரு வகையானது இதில் இரசாயன கலப்பு உள்ள க்ரீம்களால் சரியான தீர்வளிக்க முடியாது மற்றும் சில சருமங்களில் இரசாயன கலப்பு கொண்ட க்ரீம் உபயோகப்படுத்துவதனால் சரும எரிச்சலும், பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறியிருக்கின்றனர். இனி, உங்கள் முகம் பொலிவடையவும், பிரகாசிக்கவும் உதவும் இயற்கை முறையிலான ப்ளீச்களை எப்படி பயன்படுத்துவது என காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முதல் ப்ளீச் வகை

முதல் ப்ளீச் வகை

கொழுப்பு எடுக்கப்படாத சுத்தமான பசும்பால் ஒரு கப் எடுத்துக் கொள்ளுங்கள். அதை கொதிக்க வைத்து பின் குளிர விடவும். இவ்வாறு செய்யும் போது பாலின் மேல் பகுதியில் தேங்கும் பாலாடையை ஒரு கிண்ணத்தில் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பின் அதில் சிறிதளவு மஞ்சள் தூளை சேர்த்து நன்கு கலக்கவும். நன்கு முகம் கழுவிய பின்பு, நீங்கள் தயார் செய்து வைத்துள்ள ப்ளீச் க்ரீமை முகத்தில் தடவி சுழற்சி முறையில் விரல்களை கொண்டு முகத்தில் தேய்க்கவும். பின்பு பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள். இந்த ப்ளீச் முறையை தினந்தோறும் நீங்கள் செய்து வந்தால், முகம் பொலிவடையும்.

இரண்டாம் ப்ளீச் வகை

இரண்டாம் ப்ளீச் வகை

சிறிதளவு மஞ்சள் தூளை எடுத்துக் கொள்ளுங்கள், அதில் சில துளி எலுமிச்சை ஜூஸை மற்றும் பன்னீரை சேர்க்கவும். இந்த மூலப்பொருட்களை நன்கு கலக்கி முகத்தில் தடவவும். நன்கு காய்ந்த பின்பு தூய நீரில் முகம் கழுவுங்கள். இவ்வாறு செய்வதனால் முகத்தில் உள்ள மாசு மரு நீங்கும்.

மூன்றாம் வகை

மூன்றாம் வகை

இரண்டு தேக்கரண்டி பால் மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை ஜூஸை நன்கு கலந்து கொள்ளவும்; நன்கு கலக்கிய பின்பு ஒரு பேஸ்ட் போல திரவம் கிடைக்கும். அதை உங்கள் முகத்தில் அப்பளை செய்யுங்கள். பின் நன்கு காயும் வரை விட்டுவிட்டு, தெளிவான நீரில் முகம் கழுவுங்கள். இது முகம் பொலிவடைய உதவும்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை

ஆலிவ் எண்ணெய் மற்றும் சர்க்கரை

இந்த வகை ப்ளீச் பொதுவாக வீட்டில் இருக்கும் பெண்கள் பயன்படுத்தும் முறை. சர்க்கரையை ஆலிவ் எண்ணெயோடு கலந்து முகத்தில் அப்பளை செய்து வந்தால் முகம் மாசு மருவின்றி இருக்கும்.

ஆரஞ்சு தோல் மற்றும் பாலாடை

ஆரஞ்சு தோல் மற்றும் பாலாடை

எந்த வகையான சிட்ரஸ் பழங்களும், காய்கறிகளும் முகத்திற்கு நன்மை விளைவிப்பவையே ஆகும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சருமத்திற்கு நன்மை தரும். ஆரஞ்சு தோலை வெயிலில் நன்கு காயவைத்து பின் நன்கு அரைத்து பவுடர் ஆக்கிக்கொள்ளவும். இப்போது அந்த பவுடரை பாலாடையோடு கலந்து முகம் மற்றும் கழுத்து பகுதிகளில் அப்பளை செய்யுங்கள். பத்து நிமிடம் கழித்து முகம் கழுவுங்கள். முகம் பிரகாசிக்க இந்த ப்ளீச் வகை உதவும்.

தக்காளி கூழ் மற்றும் எலுமிச்சை ஜூஸ்

தக்காளி கூழ் மற்றும் எலுமிச்சை ஜூஸ்

ஒரு தக்காளியை நன்கு பிழிந்து அதனோடு கொஞ்சம் எலுமிச்சை ஜூஸை கலந்துக் கொள்ளவும். இந்த நீர் போன்ற ப்ளீச்சை முகத்தில் அப்பளை செய்து சிறிது நேரம் கழித்து முகம் காய்ந்த பின்பு குளிர்ந்த நீரில் முகம் கழுவவும். இந்த ப்ளீச் உங்கள் முகத்தின் சருமத்திற்கு உடனடி தீர்வளிக்கும் வல்லமை கொண்டது. இதில் இருக்கும் அசிடிக் பொருட்கள் நல்ல பலன் தரும்.

எலுமிச்சை, வெள்ளரி மற்றும் கடலை மாவு

எலுமிச்சை, வெள்ளரி மற்றும் கடலை மாவு

சில வெள்ளரி துண்டுகளை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின் அதில் எலுமிச்சை ஜூஸை கலந்துக் கொள்ளவும். இந்த கலவையோடு கொஞ்சம் கடலை மாவை சேர்த்து முகத்தில் மாஸ்க் போல அப்பளை செய்யவும். இது வீட்டில் உள்ள பெண்கள் பொதுவாக பயன்படுத்தும் சிறந்த பயன் தரும் ப்ளீச் வகை ஆகும்.

பப்பாளி மற்றும் பால்

பப்பாளி மற்றும் பால்

சின்ன சின்ன பப்பாளி துண்டுகளை எடுத்து நன்கு மென்மையான பேஸ்ட் ஆகும் வரை அரைத்துக் கொள்ளவும். அதோடு ஒன்று அல்லது இரண்டு தேக்கரண்டி பாலை சேர்க்கவும். இவை இரண்டையும் நன்கு கலந்த பின்பு, முகத்தில் அப்பளை செய்யவும். பின் 15 நிமிடம் கழிந்து முகம் கழுவுங்கள். இது நல்ல பயன் தரும் ப்ளீச் வகை ஆகும்.

முன்னெச்சரிக்கைகள்

முன்னெச்சரிக்கைகள்

* ப்ளீச் செய்யும் முன்னரே ஒரு முறை நன்கு முகம்கழுவ வேண்டும்.

* ப்ளீச் அப்பளை செய்யும் போது, கழுத்து மற்றும் கை பகுதிகளிலும் அப்பளை செய்ய மறக்க வேண்டாம்.

* வேறு க்ரீம்களை உபயோகப்படுத்திய உடனேயே இந்த ப்ளீச் வகைகளை உபயோகப்படுத்த வேண்டாம்.

* உபயோகப்படுத்திய உடனே ரிசல்ட்டை எதிர்பார்க்க வேண்டாம். இயற்கை ப்ளீச் வகைகளை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் தான் பயன் தரும்.

* அனைத்து வகை சருமங்களுக்கு இந்த வகை ப்ளீச் வகைகள் பலன் தராது.

இவை அனைத்தும் பயன் தருபவை தான் எனினும். உபயோகப்படுத்தும் முன்பு உங்கள் தோல் மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக் கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Natural Face Bleach Made At Home

Do you wanna glowing skin at home itself.you can use these natural face bleach made at home.
Story first published: Tuesday, February 17, 2015, 17:29 [IST]
Desktop Bottom Promotion