கருமையாக இருக்கும் முழங்காலை வெள்ளையாக்க சில சிம்பிளான டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

உடலில் கருமையாக இருக்கும் இடங்களில் ஒன்று தான் முழங்கால். அத்தகைய முழங்கால் கருப்பாக இருப்பதற்கு முழங்காலை சரியாக பராமரிக்காமல் இருப்பது தான் காரணம். முகத்தை பராமரிப்பது போலவே பராமரித்தால், முழங்காலும் அழகாக மென்மையாக பளிச்சென்று இருக்கும். அதிலும் வீட்டில் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு வாரம் 1-2 முறை முழங்காலை ஸ்கரப் செய்தால், நிச்சயம் அழகான முழங்காலைப் பெறலாம்.

குறிப்பாக முழங்கால் வெள்ளையாக இருக்க வேண்டுமென்று பெண்கள் தான் அதிகம் ஆவலுடன் இருப்பார்கள். ஏனெனில் அவர்கள் குட்டையான ஆடையை அணியும் போது முழங்கால் மட்டும் கருமையாக இருந்தால் அசிங்கமாக இருக்கும். ஆகவே பெண்களே உங்கள் முழங்காலில் உள்ள கருமையைப் போக்க கீழே கொடுக்கப்பட்டுள்ளதை முயற்சித்துப் பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்காயம் மற்றும் பூண்டு

வெங்காயம் மற்றும் பூண்டு

உண்மையிலேயே அனைவருக்கும் இந்த முறை பயத்தை ஏற்படுத்தும். ஏனெனில் இவை இரண்டுமே காரமாக இருக்கும். இவற்றைப் பயன்படுத்தினால் எரிச்சல் ஏற்பட்டு, வேறு ஏதேனும் பிரச்சனைகள் ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் தான். ஆனால் உண்மையிலேயே இவை நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். அதற்கு 1 வெங்காயம் மற்றும் 1 பூண்டு எடுத்துக் கொண்டு, அரைத்து அதனை முழங்காலில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும்.

பிறகு கிளிசரினை எலுமிச்சை சாறு மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதனை முழங்காலில் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தை விரைவில் காணலாம்.

தயிர் மற்றும் பாதாம்

தயிர் மற்றும் பாதாம்

8-10 பாதாமை அரைத்து பொடி செய்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து பேஸ்ட் செய்து, முழங்காலில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் அவ்விடத்தில் சிறிது தண்ணீர் தெளித்து, வட்ட வடிவில் தேய்த்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, அதனைக் கொண்டு தினமும் இரவில் மசாஜ் செய்து வர வேண்டும். இதனாலும் முழங்காலில் உள்ள கருமையைப் போக்கலாம்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடியில் 2 டேபிள் ஸ்பூன் பிரஷ் க்ரீம் சேர்த்து கலந்து, வேண்டுமானால் அதில் சிறிது தேன் சேர்த்து கலந்து, முழங்காலில் தடவி 2 நிமிடம் ஊற வைத்து, பின் முழங்காலை சிறிது நேரம் மென்மையாக தேய்த்து, பின் கழுவ வேண்டும்.

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை மிகவும் சிறப்பான ஒரு ப்ளீச்சிங் பொருள். தேன் ஒரு சிறப்பான மாய்ஸ்சுரைசர். எனவே இவை இரண்டையும் ஒன்றாக கலந்து, முழங்காலில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 2-3 முறை செய்து வந்தால், முழங்காலில் உள்ள கருமையைப் போக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Lighten Dark Knees With 5 Simple Home Remedies

Follow these home remedies for dark knees. These instant home remedies for dark knees will lighten them. These are natural home remedies for dark knees.
Story first published: Monday, January 5, 2015, 16:22 [IST]
Subscribe Newsletter