For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்சிடிவ் சருமத்தினருக்கான சில ஃபேஸ் ஸ்கரப்கள்!!!

By Maha
|

உங்கள் அழகை அதிகரிப்பதற்கு முகத்திற்கு எது போட்டாலும் ஒத்துக்கலையா? அப்ப உங்களுக்கு சென்சிடிவ் சருமம். சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் அனைத்துப் பொருட்களையும் முகத்திற்கு பயன்படுத்த முடியாது. எதைப் பயன்படுத்தினாலும், சருமத்தில் அரிப்புக்கள், எரிச்சல் போன்றவை ஏற்பட்டு, இருக்கும் அழகும் போய்விடும். ஆகவே சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், தங்களின் அழகை அதிகரிக்க எந்த ஒரு பொருளை பயன்படுத்தும் முன்னும் பலமுறை யோசிக்க வேண்டும்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், தங்களின் சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை நீக்க ஒருசில அற்புதமான ஃபேஸ் ஸ்கரப்களைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன்படி முகத்தை ஸ்கரப் செய்தால், எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் சருமத்தின் அழகை அதிகரிக்கலாம். மேலும் இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஸ்கரப்கள் அனைத்தும் சருமத்தின் நிறத்தை அதிகரிக்கக்கூடியவை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வால்நட் ஸ்கரப்

வால்நட் ஸ்கரப்

1 டீஸ்பூன் தேன், 1 டீஸ்பூன் வால்நட் பேஸ்ட், 1 டீஸ்பூன் பாதாம் பேஸ்ட் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 10 நிதிமடம் ஊற வைத்து, பின் மெதுவாக ஸ்கரப் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால், சருமம் பொலிவோடு மின்னும்.

ஆரஞ்சு ஸ்கரப்

ஆரஞ்சு ஸ்கரப்

ஆரஞ்சு ஸ்கரப் சென்சிடிவ் சருமத்தினருக்கு ஏற்ற ஒன்று. அதற்கு 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு பழத்தின் பொடியுடன், 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி, 1 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.

வாழைப்பழ ஸ்கரப்

வாழைப்பழ ஸ்கரப்

ஒரு பௌல் மசித்த வாழைப்பழத்துடன், 1 டீஸ்பூன் ஓட்ஸ் பொடி மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி, வட்ட வடிவில் ஸ்கரப் செய்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த ஸ்கரப் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் வெளியேறி, சருமத்தின் நிறம் அதிகரித்துக் காணப்படும்.

தக்காளி ஸ்கரப்

தக்காளி ஸ்கரப்

தக்காளியை இரண்டாக வெட்டி, ஒரு பாதியை சர்க்கரையில் தொட்டு, முகம் மற்றும் கழுத்தை ஸ்கரப் செய்து 5 நிமிடம் ஊற வைத்து, பின் மற்றொரு பாதியைக் கொண்டு முகத்தை மீண்டும் ஸ்கரப் செய்து சிறிது நேரம் ஊற வைத்து, நன்கு உலர்ந்ததும், வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

ஓட்ஸ் ஸ்கரப்

ஓட்ஸ் ஸ்கரப்

இந்த ஓட்ஸ் ஸ்கரப் செய்ய, ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் பொடி, 1/4 டீஸ்பூன் உப்பு மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, ஸ்கரப் செய்து கழுவ வேண்டும். இதன் மூலம் சருமத்தில் உள்ள பருக்கள், வெயிலினால் கருமையடைந்த சருமம், சருமத்தில் செதில்செதிலாக வருவது, சருமம் வறட்சியடைவது போன்றவை நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Homemade Face Scrubs For Sensitive Skin

Some of the best homemade face scrubs for sensitive skin are listed below. These homemade facial scrubs acts as an exfoliator for sensitive skin.
Story first published: Saturday, February 14, 2015, 17:28 [IST]
Desktop Bottom Promotion