முதுமையைத் தள்ளிப் போட ஒவ்வொருவரும் சாப்பிட வேண்டிய உணவுகள்!

Posted By:
Subscribe to Boldsky

சமீபத்திய மாசடைந்த சுற்றுச்சூழலால் விரைவிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெற நேரிடுகிறது. அதுமட்டுமின்றி, போதிய அளவில் தண்ணீர் குடிக்காமல் இருப்பதால், சரும செல்கள் வறட்சியடைகின்றன. எனவே சருமம் இளமையுடன் நீண்ட நாட்கள் இருப்பதற்கு போதிய அளவில் தண்ணீர் குடித்து வர வேண்டும். மேலும் சரும நிபுணர்கள், முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்களைத் தடுக்க போதிய அளவில் தண்ணீர் குடித்து வர வேண்டும் என்கின்றனர்.

சொன்னா நம்பமாட்டீங்க.... ஏன்னா இந்த உணவுகள் முகப்பருக்களை உண்டாக்கும்!!!

அதற்காக நம்மால் எவ்வளவு தண்ணீர் குடிக்க முடியும். எனவே தண்ணீர் குடிப்பதுடன், நீர்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களையும் உட்கொண்டு வந்தால், உடலில் நீர்ச்சத்தை அதிகரித்து, சரும செல்களை புத்துணர்ச்சியுடன் வைத்துக் கொள்ளலாம்.

சருமத்தின் அழகிற்கு கேடு விளைவிக்கும் 15 உணவுகள்!!!

எவ்வளவுக்கு எவ்வளவு தண்ணீர் மற்றும் நீர்ச்சத்துள்ள உணவுகளை எடுத்து வருகிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு முதுமையைத் தள்ளிப் போடலாம். இங்கு நீர்ச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து உட்கொண்டு, உங்கள் முதுமையைத் தள்ளிப் போடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செலரி

செலரி

செலரியில் கலோரிகள் குறைவு, நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு முகப்பொலிவை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

நீர்ச்சத்து - 95%

தக்காளி

தக்காளி

தக்காளியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மட்டுமின்றி, நீர்ச்சத்தும் அதிகம் உள்ளது. எனவே இவற்றை உணவில் அதிகம் சேர்த்து வந்தாலோ அல்லது ஜூஸ் போட்டு தினமும் ஒரு டம்ளர் குடித்து வந்தாலோ, சரும செல்கள் புத்துணர்ச்சி பெறும்.

நீர்ச்சத்து: 94%

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

தினமும் ஒரு வெள்ளரிக்காய் சாப்பிட்டு வந்தால், சருமத்திற்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைக்கும். மேலும் இது உடலுக்கு குளிர்ச்சியும் கூட.

நீர்ச்சத்து - 96%

லெட்யூஸ் (Lettuce)

லெட்யூஸ் (Lettuce)

உங்களுக்கு லெட்யூஸ் பிடிக்காவிட்டால், அதனை ஜூஸ் செய்து, ஒரு கல்ப் அடித்து விடுங்கள். ஏனெனில் இதில் வளமான அளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. மேலும் இது சருமத்தின பொலிவை அதிகரிக்கவும் செய்யும்.

நீர்ச்சத்து - 95%

குடைமிளகாய்

குடைமிளகாய்

பல வண்ண குடைமிளகாய்கள் மார்கெட்டில் கிடைக்கின்றன. ஆனால் இவற்றில் பச்சை நிற குடைமிளகாயில் தான் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

நீர்ச்சத்து - 93%

பசலைக்கீரை

பசலைக்கீரை

கீரைகள் அனைத்துமே மிகவும் ஆரோக்கியமானது. அதிலும் பசலைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், அதில் உள்ள வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் நீர்ச்சத்துக்களால் சருமம் மட்டுமின்றி, உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

நீர்ச்சத்து - 91.4%

முள்ளங்கி

முள்ளங்கி

முள்ளங்கியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. எனவே இவற்றை உட்கொண்டு வந்தாலும், முதுமையைத் தள்ளிப் போடலாம்.

நீர்ச்சத்து - 95%

ஸ்ட்ராபெர்ரி

ஸ்ட்ராபெர்ரி

பெர்ரிப் பழங்களில், அதுவும் ஸ்ட்ராபெர்ரியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. மேலும் இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் வளமாக உள்ளதால், இவற்றை கிடைக்கும் போது உட்கொண்டு வந்தால், சருமத்தை இளமையுடன் வைத்துக் கொள்ளலாம்.

நீர்ச்சத்து - 91%

காலிஃப்ளவர்

காலிஃப்ளவர்

காலிஃப்ளவரில் வைட்டமின்கள் வளமாக இப்பதால், இவை உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுவதோடு, சரும வறட்சியடையாமல் தடுத்து, இளமையைப் பாதுகாக்கும்.

நீர்ச்சத்து - 92%

பப்பளிமாஸ்

பப்பளிமாஸ்

இந்த சிட்ரஸ் பழம் உடலின் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். அதுமட்டுமின்றி, இது உடலுக்கு வேண்டிய நீர்ச்சத்தை வழங்கி, முதுமையைத் தள்ளிப் போடும்.

நீர்ச்சத்து - 90%

தர்பூசணி

தர்பூசணி

அனைவருக்குமே தெரியும், தர்பூசணியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது என்று. அப்படி தெரிந்த தர்பூசணிப் பழத்தை முடிந்தால், தினமும் ஒரு பௌல் வாங்கி சாப்பிடுங்கள்.

நீர்ச்சத்து - 91%

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலியை முடிந்தால் பச்சையாக அல்லது ஜூஸ் போட்டு அதிகாலையில் குடியுங்கள். இதனால் இது சருமத்தில் பிரச்சனைகள் ஏற்படுவதைத் தடுக்கும்.

நீர்ச்சத்து - 90%

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Drink Water + Eat Water = Erase Wrinkles

The water content in vegetables can hydrate your skin. Do you know about the benefits of water for skin? Well, your wrinkles can be erased too...
Story first published: Wednesday, September 9, 2015, 13:21 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter