திருமணத்தின் போது பொலிவோடு ஜொலிக்க உதவும் சிறப்பான 5 ஃபேஸ் பேக்குகள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

திருமணம் என்றாலே கோலாகலம் தான். அதுவும் இந்திய பாராம்பரிய திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம். பொதுவாகவே பெண்களுக்கு தங்களை அழகாக காட்டிக் கொள்வதில் அலாதி பிரியம் இருக்கும். அதுவும் தங்கள் வாழ்க்கையில் ஒரு முறை நடக்கும் திருமணம் என்றால் கேட்கவே வேண்டாம் தானே! அன்றைய நாளில் ஒரு ராணியை போல் காட்சியளிக்க மணப்பெண் விரும்புவது இயல்பே. அதற்காக அவர்கள் பல விதமான மேக்-அப்பை போடுவார்கள். அதுவும் இன்றைய கால கட்டத்தில் பல விதமான மேக்கப் பொருட்கள் வந்து விட்டது.

ஆனாலும் கூட இயற்கையான வழியில் உங்களை அலங்கரித்து கொள்ள சில வழிமுறைகள் இருக்கிறது என்பது இன்றைய காலத்தில் எத்தனை பேருக்கு தெரியும்? அதில் ஒன்று பாரம்பரிய இந்திய திருமணத்தின் சடங்காகவே கடைப்பிடித்து வரப்படுகிறது. நாம் ஏற்கனவே பார்த்ததைப் போல், பாரம்பரியம் மிக்க இந்திய திருமணம் என்றால் பலவிதமான சடங்குகள் இல்லாமல் அது முழுமை அடையாது. அதில் ஒன்று தான் ஹல்டி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் போது, மணப்பெண்ணாக போகும் பெண்ணுக்கு அப்டன் என்ற ஃபேஸ் பேக் போடப்படும். இது இயற்கையான பல பொருட்களின் சேர்க்கையில் உருவாக்கப்படுவதாகும்.

அப்டன் போடப்படுவதால், திருமண நாளின் போது, இயற்கையான வழியிலேயே முகத்தில் பொலிவை பெறுவாள் மணப்பெண். அதற்கு காரணம் சூரிய ஒளியால் அவர்களின் சருமத்தில் ஏற்பட்டுள்ள கருமை நீங்கி பிரகாசமடைவார்கள். ஒரு முறை போட்டாலே இவ்வளவு பயனை தருகிறது என்றால், இதனை தினமும் பயன்படுத்தினால் இதனால் கிடைக்கும் பயன்களை யோசித்துப் பாருங்கள். மணப்பெண்ணாக ஆகப்போகும் பெண்களே, உங்களுக்காக சில இயற்கையான அப்டன் பேக்குகள், இதோ!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஓட்ஸ் அப்டன்

ஓட்ஸ் அப்டன்

இந்த ஓட்ஸ் அப்டன்னை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால் குழந்தையை போன்ற மென்மையான சருமத்தை உங்கள் திருமண நாளன்று பெறுவீர்கள்.

ஓட்ஸ் அப்டன்

ஓட்ஸ் அப்டன்

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ்
மைசூர் பருப்பு
அரிசி
பாதாம்
மஞ்சள்
பனீர்

1 கப் மைசூர் பருப்பு, 1/4 கப் அரிசி மற்றும் 8-9 பாதாம்களை தனித்தனியாக அரைத்து வைத்துக் கொள்ளவும். இப்போது இந்த 3 பொடிகளையும் ஒரு கிண்ணத்தில் போட்டு, அதனுடன் அரை கப் ஓட்ஸ் மற்றும் கொஞ்சம் மஞ்சளை சேர்த்து கலந்திடவும். அதன் மீது பன்னீர் ஊற்றி அடர்த்தியான பேஸ்ட்டை தயார் செய்து கொள்ளவும். இதனை உடல் முழுவதும் தடவி விட்டு, சிறிது நேரம் காய விடுங்கள். இந்த பேஸ்ட் காய்ந்தவுடன் மெதுவாக சுரண்டி எடுக்கவும். பின் சாதாரண நீரை கொண்டு கழுவிடவும். வறண்ட சருமத்தை கொண்டவர்கள் இந்த அப்டனுடன் பால் க்ரீமை சேர்த்துக் கொள்ளுங்கள்.

பால் பவுடர் அப்டன்

பால் பவுடர் அப்டன்

மிகவும் ஊட்டமளிக்கும் வகையில் உள்ள இந்த அப்டன், குறிப்பாக வறண்ட சருமம் உடையவர்களுக்கு பயன்படும்.

பால் பவுடர் அப்டன்

பால் பவுடர் அப்டன்

தேவையான பொருட்கள்:

பால் பவுடர்
பருப்பு மாவு
பாதாம் பொடி
மஞ்சள்
பால் க்ரீம்
எலுமிச்சை ஜூஸ்
பன்னீர்

2 டீஸ்பூன் பால் பவுடர், 2 டீஸ்பூன் பருப்பு மாவு மற்றும் 2 டீஸ்பூன் பாதாம் பொடியை கலந்து கொள்ளவும். இந்த கலவையுடன் கொஞ்சம் மஞ்சளையும் சேர்த்து கலந்திடவும். இப்போது 1 டீஸ்பூன் பால் க்ரீம், 1 டீஸ்பூன் எலுமிச்சை ஜூஸ், கொஞ்சமாக பண்ணீர் மற்றும் ஆலிவ் எண்ணெய்யை அதனுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகம் மற்றும் உடல் முழுவதுமாக தடவிக் கொள்ளுங்கள். அதனை சிறிது நேரம் காய வைத்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் அதனை கழுவிக் கொள்ளுங்கள். அதிகப்படியான பயனை பெறுவதற்கு இதனை வாரம் மூன்று முறையாவது பயன்படுத்தவும்.

நட்ஸ் அப்டன்

நட்ஸ் அப்டன்

தனித்துவமான, மிகவும் ஊட்டமளிக்கும் வகையில் உள்ள இந்த நட்ஸ் அப்டனை குளிர் காலத்தில் பயன்படுத்துங்கள்.

நட்ஸ் அப்டன்

நட்ஸ் அப்டன்

தேவையான பொருட்கள்:

பாதாம், முந்திரி, பிஸ்தா
ஆளி விதை
மைசூர் பருப்பு
அரிசி
காய்ந்த ஆரஞ்சு தோல்
குங்குமப்பூ
பாதாம் எண்ணெய்

இதனை தயார் செய்ய 15 ஆல்மண்ட்கள், 15 முந்திரி பருப்புகள் மற்றும் 15 பிஸ்தா பருப்புகளை அரைத்துக் கொள்ளவும். மேலும் ஆளி விதை, மைசூர் பருப்பு, அரிசி மற்றும் காய்ந்த ஆரஞ்சு தோல் மற்றும் ஓட்ஸை தலா 1/4 கப் எடுத்து தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். இந்த பொடிகளை காய்ந்த கிண்ணம் ஒன்றில் கலந்து அதனுடன் 1 டீஸ்பூன் மஞ்சள், கொஞ்சம் குங்குமப்பூ மற்றும் 10-12 சொட்டு இனிப்பு பாதாம் எண்ணெய்யை சேர்க்கவும். அடர்த்தியான ஸ்க்ரப்பாக மாற்ற கொஞ்சம் தேன் மற்றும் பன்னீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை முகம் மற்றும் உடல் முழுவதும் தடவிக் கொள்ளுங்கள். சில நிமிடங்களுக்கு பிறகு, இதனை கழுவி விடுங்கள்.

பருப்பு மாவு மற்றும் கோதுமை தவிடு அப்டன்

பருப்பு மாவு மற்றும் கோதுமை தவிடு அப்டன்

இந்த அருமையான அப்டன் உங்கள் சருமத்தில் உள்ள மாசை நீக்கி பளிச்சென மின்ன வைக்கும்.

பருப்பு மாவு மற்றும் கோதுமை தவிடு அப்டன்

பருப்பு மாவு மற்றும் கோதுமை தவிடு அப்டன்

தேவையான பொருட்கள்:

பருப்பு மாவு
கோதுமை தவிடு
பால் க்ரீம் அல்லது தயிர்
மஞ்சள்

இந்த எளிய அப்டனை தயாரிக்க பருப்பு மாவு, கோதுமை தவிடு, பால் க்ரீம் அல்லது தயிர் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள் தேவைப்படும். இவையனைத்தையும் ஒரு கிண்ணத்தில் கலந்து, சிறிது நேரத்திற்கு அதனை அப்படியே வைத்து விடுங்கள். அது வரை, எள் எண்ணெய்யை கொண்டு உடல் முழுவதும் மசாஜ் செய்யுங்கள். பின் அந்த கலவையை எடுத்து உடல் முழுவதும் தடவுங்கள். அரை மணி நேரத்திற்கு பின்பு, வெதுவெதுப்பான நீரை கொண்டு அதனை கழுவி விடுங்கள்.

சந்தன அப்டன்

சந்தன அப்டன்

சூரிய ஒளியால் ஏற்பட்டுள்ள கருமையை நீக்கி, சோர்வான சருமத்தை பொழிவடையச் செய்ய சந்தன அப்டன் பெரியளவில் உதவிடும். கோடைக்காலத்தில் திருமணம் செய்யும் பெண்களுக்கு குறிப்பாக இது உதவிடும். அதற்கு காரணம், கோடைக்காலத்தில் சந்தனமும் பன்னீரும் உங்கள் உடலின் மீது குளிர்ச்சியை ஏற்படுத்தும்.

சந்தன அப்டன்

சந்தன அப்டன்

தேவையான பொருட்கள்:

சந்தனப்பொடி
பருப்பு மாவு
மஞ்சள்
பச்சை பால்
பன்னீர்

சந்தனப்பொடியை பருப்பு மாவு மற்றும் மஞ்சளுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். வழுவழுப்பான பேஸ்ட்டை பெறுவதற்கு அதனுடன் சேர்த்து பன்னீரையும் பச்சை பாலையும் சேர்த்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட் கெட்டியாகவும் இருக்க கூடாது, தண்ணீராகவும் இருக்க கூடாது. இந்த பேஸ்ட்டை உங்கள் முகம் மற்றும் உடல் முழுவதுமாக தடவிக் கொள்ளுங்கள். அது காயும் வரை பொறுமையாக இருங்கள். பின் சாதாரண நீரை கொண்டு கழுவிய பிறகு, உங்கள் சருமத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை பாருங்கள்!

அப்டன் பேஸ்ட்டை தொடர்ச்சியாக பயன்படுத்தி வந்தால், சூரிய ஒளியால் உண்டான சரும கருமை நீங்கி, சரும நிறம் ஒரே சீராக மாறும். இதனால் திருமண நாளன்று மணப்பெண்ணின் சருமம் ஜொலித்திடும். பெண்களே, ஹல்டி நிகழ்ச்சி வரை ஏன் காத்திருக்க வேண்டும்? உங்களுக்கு தேவையான அப்டன் பேக்கை இன்றே தேர்ந்தெடுத்து பயன்படுத்த ஆரம்பியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Best Ubtans For Brides To Get Glowing Skin Naturally

For all you pretty brides-to-be, here are some natural ubtan recipes that you can start applying much before your haldi ceremony, and get a flawlessly glowing complexion on your wedding.
Story first published: Friday, January 9, 2015, 12:47 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter