சரக்கு உடலுக்கு தான் தீங்கு, சருமத்திற்கு அல்ல!

Posted By:
Subscribe to Boldsky

மது சந்தோசத்தின் மிகுதியில் மட்டுமல்ல இனி உங்களது சரும கோளாறுகளுக்கும் கூட பீச்சி அடிக்கலாம். அதற்கு முன் முக்கியமாக தண்ணீர் கலக்க வேண்டும் என்பதை மறந்துவிட வேண்டாம். ஆம், மது நமது சரும தொல்லைகளுக்கு தீர்வளிக்கிறது என கண்டுபிடித்துள்ளனர். இது பரு, வறட்சி, சரும எரிச்சல் போன்றவைக்கு தீர்வளிக்கிறது என நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இதை உபயோகப்படுத்தும் முன்பு, தண்ணீரில் கலந்து தான் அப்பளை செய்ய வேண்டும் என அறிவுரைக்கின்றனர்.

பருவ மங்கைகளுக்கான சருமப் பாதுகாப்புக் குறிப்புகள்

மதுவில் உள்ள வேதியல் பொருட்களின் கலவை தான் சரும கோளாறுகளில் இருந்து விடுபட உதவுவதாக கூறப்படுகிறது. மென்மையான சருமம் என்பதால் அதிகம் உபயோகப்படுத்தக்கூடாது என தோல் சிகிச்சை மருத்துவர்கள் கூறுகின்றனர். பொதுவாக ஒயின் வகை மதுவை அழகை அதிகரிக்கவும், வோட்காவை சருமத்தில் ஏற்படும் சிராய்ப்புகளை மறையவைக்கவும் பயன்படுத்தலாம் என கூறுகின்றனர். இதை பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படிங்கள்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சருமம் பொலிவடைய

சருமம் பொலிவடைய

உங்களது சருமம் பொலிவடைய ஒயின் உபயோகப்படுத்தலாம். கொஞ்சம் ரெட் ஒயினை பஞ்சில் நனைத்து முகத்தில் மசாஜ் போல செய்ய வேண்டும். பின் 15 நிமிடம் கழித்து முகம் கழுவுங்கள். இப்படி செய்வதால் முகம் பொலிவடையும்.

முகம் வெண்மையடைய

முகம் வெண்மையடைய

ஒயினுடன் சிறிது பன்னீரை சேர்த்து உங்கள் முகத்தை கழுவுங்கள். பின் ஒரு பத்து நிமிடங்கள் கழித்து, குளிர்ந்த நீரில் முகம் கழுவுங்கள். இதுப்போல வாரம் இரு முறை செய்து வந்தால், உங்களது முகம் வெண்மையடையும்.

சருமம் மிருதுவாக

சருமம் மிருதுவாக

நீங்கள் முக வறட்சி, சருமம் கடுமையாக இருத்தல் போன்றவையால் அவதிப்படுகிறீர்கள் என்றால், ஒரு கப் ஒயினில் கொஞ்சம் பாலினை கலந்து நன்காக கலக்கி முகம் கழுவுங்கள். இதை வாரம் முழுக்க நீங்கள் பின் தொடர்ந்து வந்தால் ஒரிரு வாரங்களிலேயே உங்களுக்கு நல்ல மாற்றம் தெரியும்.

சருமம் ஜொலிக்க

சருமம் ஜொலிக்க

ரெட் ஒயின் அல்லது ஒயிட் ஒயின், இந்த இரண்டிற்குமே உங்களது சருமத்தை ஜொலிக்க வைக்கும் தன்மை இருக்கிறது. தினமும் இரண்டு முறை இதை உபயோகப்படுத்தி முகம் கழுவி வந்தால், உங்களது முகம் ஜொலி ஜொலிக்கும்.

முகம் பொலிவடைய ரம்!

முகம் பொலிவடைய ரம்!

ரம்! என்றாலே கிக்கு தான் ஞாபகம் வரும். இனி உங்களுக்கு முகம் பொலிவடைய வேண்டுமெனில் ரம் தான் ஞாபகம் வர வேண்டும். ஆம், ரம்மை தண்ணீரோடு கலந்து அதில் பஞ்சை நனைத்து முகத்தில் தொட்டு எடுத்து மசாஜ் போல செய்து வர வேண்டும். பின் பத்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் முகம் கழுவ வேண்டும். இதை வாரம் இருமுறை செய்து வந்தால், முகம் பொலிவடையும்.

பரு

பரு

முகப்பரு பலருக்கு பெரும் தொல்லையாக இருக்கும் ஒன்று. ரம்மில் கொஞ்சம் பன்னீர் சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள். முதலின் முகம் முழுவதும் பன்னீரை அப்பளை செய்துவிட்டு. பின் கலந்து வைத்திருக்கும் நீரை பருக்களின் மீது அப்பளை செய்யுங்கள். இவ்வாறு செய்தால் பருக்கள் குறையும்.

வறட்சியான சருமத்திற்கு

வறட்சியான சருமத்திற்கு

வறட்சியான சருமத்தை இப்போது மதுவின் உதவியோடு சரி செய்யலாம்.ஒரு டம்ளர் ரம் எடுத்துக்கொள்ளுங்கள் அதில் நீர் மற்றும் சர்க்கரையை கலந்துக் கொள்ளுங்கள். இந்த கலவையை சுழற்சி முறையில் உங்களது முகத்தில் தேய்த்துக்கொடுங்கள். இதுப்போல நாள்தோறும் தொடர்ந்து செய்து வந்தால் உங்களது வறட்சியான சருமத்திற்கு டாட்டா சொல்லிவிடலாம்.

வோட்கா

வோட்கா

உங்கள் முகத்தில் இருக்கும் மாசு மருக்களை குறைக்க வோட்கா கொண்டு முகம் கழுவினால் நல்ல தீர்வு காணலாம்.

பீர்

பீர்

உங்களது முகம் நன்கு பிரகாசிக்க பீரினைக் கொண்டு முகம் கழுவினால் நல்ல பயன் தரும். இதை நீங்கள் நாள்தோறும் தொடர்ந்து செய்து வந்தால், நீங்கள் ஒரீரு வாரங்களில் நல்ல மாற்றம் காணலாம்.

கரும்புள்ளிகள் நீங்க!

கரும்புள்ளிகள் நீங்க!

உங்கள் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை நீக்க மது வகைகளில் பீர் சிறந்த ஒன்று என கூறப்படுகிறது. பீரைக் கொண்டு உங்கள் முகத்தில் சுழற்சி முறையில் மென்மையாகத் தேய்த்து வந்தீர்கள் என்றால் கரும்புள்ளிகள் நீங்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Ways Alcohol Is Good For Your Skin

Here are some ways you can use alcohol for skin care. Take a look and be amazed at these home remedies. 
Story first published: Saturday, February 21, 2015, 19:12 [IST]
Subscribe Newsletter