சருமத்தை வெள்ளையாக மாற்ற எலுமிச்சையைப் பயன்படுத்தும் வழிகள்!!!

Posted By:
Subscribe to Boldsky

உங்களுக்கு வெள்ளையாக ஆசையா? அதற்காக நிறைய முயற்சிகளை எடுத்துள்ளீர்களா? எதுவுமே பயனளிக்கவில்லையா? கவலைப்படாதீர்கள், கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக்க நிறைய பொருட்கள் நம் வீட்டு சமையலறையிலேயே உள்ளது. அதில் முதன்மையானது தான் எலுமிச்சை.

ஏழே நாட்களில் வெள்ளையாக ஆசையா? இத ட்ரை பண்ணுங்க...

எலுமிச்சை எண்ணற்ற நன்மைகள் நிறைந்துள்ளன. ஆகவே இவை பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வைத் தரும் பொருளாக உள்ளது. அதிலும் இதில் ப்ளீச்சிங் தன்மை நிறைந்திருப்பதால், இதனைக் கொண்டு சருமத்தைப் பராமரித்தால், சருமத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளைத் தடுப்பதோடு, கருமையாக இருக்கும் சருமத்தை வெள்ளையாக மாற்றலாம்.

கருப்பா இருந்தாலும் களையா தெரிய டெய்லி 10 நிமிடம் செலவழிச்சா போதும்...

அதற்கு எலுமிச்சையை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும். இல்லாவிட்டால், அவை சருமத்தில் பிரச்சனைகளை ஏற்படும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை எலுமிச்சையை எப்படி பயன்படுத்த வேண்டுமென்று கொடுத்துள்ளது. அதைப் படித்து அதன் படி சருமத்தைப் பராமரித்தால், சருமத்தை விரைவில் வெண்மையாக்கலாம்.

இது தொடர்பான வீடியோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் 1

டிப்ஸ் 1

எலுமிச்சையை பாதியாக வெட்டி, அதனை சாறு எடுத்து, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து, பின் அதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள கருமையானது நீங்கிவிடும்.

டிப்ஸ் 2

டிப்ஸ் 2

எலுமிச்சை சாற்றில் தயிர் சிறிது சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை முகத்திற்கு மாஸ்க் போட்டால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

டிப்ஸ் 3

டிப்ஸ் 3

எலுமிச்சை சாற்றுடன், ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை சேர்த்து கலந்து முகத்தில் தடவி உலர வைத்து பின் கழுவ வேண்டும். இப்படி 3 நாட்களுக்கு ஒருமுறை மாஸ்க் போட்டால், சருமத்தில் உள்ள கருமை நீங்கி, சருமம் வெள்ளையாவதைக் காணலாம்.

டிப்ஸ் 4

டிப்ஸ் 4

ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால் நல்ல மாற்றத்தைக் காண முடியும்.

டிப்ஸ் 5

டிப்ஸ் 5

பாலில் சில துளிகள் எலுமிச்சை சாற்றினை விட்டு நன்கு கலந்து, அந்த கலவையை முகத்தில் மற்றும் கருமையாக உள்ள இடங்களில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தால், சரும வெள்ளையாக மாறும்.

டிப்ஸ் 6

டிப்ஸ் 6

வெள்ளையான சருமம் வேண்டுமானால், இரவில் படுக்கும் போது எலுமிச்சை சாற்றுடன் மில்க் க்ரீம் சேர்த்து கலந்து, காலையில் எழுந்ததும் முகத்தில் தடவ வேண்டும். இப்படி செய்து வர விரைவில் சருமத்தின் நிறம் அதிகரிப்பதைக் காணலாம்.

டிப்ஸ் 7

டிப்ஸ் 7

ஆலிவ் ஆயிலுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதோடு, சருமத்தில் உள்ள தேவையற்ற தழும்புகளும் மறைந்துவிடும்.

டிப்ஸ் 8

டிப்ஸ் 8

எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், எலுமிச்சை சாற்றில் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்திற்கு மாஸ்க் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways To Use Lemon For Skin Whitening

Do you want to improve your skin tone? Here are some of the ways on how to use lemon on the face for skin whitening. Take a look.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter