உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்....

Posted By:
Subscribe to Boldsky

பெண்களுக்கு எவ்வளவு தான் முகம், கை மற்றும் கால் வெள்ளையாக இருந்தாலும், உள் தொடை கருப்பாக இருந்தால் முழங்கால் அளவுள்ள ஆடைகளை அணிய சங்கடமாக இருக்கும். பொதுவாக சருமங்கள் உரசிக் கொண்டால், அப்பகுதியானது கருமையாகும். அதுமட்டுமின்றி, இன்னும் வேறு சில காரணங்களாலும் சருமம் கருமையாகும். அதில் குண்டாக இருப்பது, அடிக்கடி ஷேவிங் செய்வது, காற்றோட்டம் இல்லாதது, வயதாவது, சருமம் வறட்சிடைவது போன்றவற்றாலும் சருமமானது கருமையாகலாம்.

பெண்களே... 'அந்த' இடத்தில் துர்நாற்றமா? இதோ 15 சூப்பர் டிப்ஸ்...

மேலும் தற்போது ஜீன்ஸ் அணிவோரின் எண்ணிக்கை தான் அதிகம். அத்தகைய ஜீன்ஸ் அணிவதால், அவை சருமத்தில் அதிகம் உராய்ந்து, அவையும் சருமத்தை நாளடைவில் கருமையாக்குகின்றன. ஹார்மோன் பிரச்சனை இருந்தாலும், அவையும் சருமத்தை கருமையாக மாற்றும்.

ஆண்களே! 'அந்த இடத்தில்' அரிப்பு ஏற்பட காரணம் என்னவா இருக்கும்ன்னு தெரிஞ்சுக்கணுமா?

பெரும்பாலும் பெண்களுக்கு மற்ற பகுதிகளை விட, அதிக அளவில் கருமையாக இருக்கும் இடங்கள் என்றால், அக்குள், பிறப்புறுப்பு மற்றும் உள் தொடை தான். அதுமட்டுமின்றி, அப்பகுதிகளில் எவ்வித பராமரிப்பும் கொடுக்காததால், அப்பகுதி மிகவும் கருமையாகவே உள்ளது. ஆனால் அவ்விடங்களில போதிய பராமரிப்பு கொடுத்தால், அவற்றையும் மற்ற பகுதிகளைப் போல் வெள்ளையாக்கலாம்.

சரி, இப்போது உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க சில டிப்ஸ்களைப் பார்ப்போமா!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க எலுமிச்சை சாற்றில், சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, அப்பகுதியில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். இதனை தினமும் செய்து வந்தால், நாளடைவில் கருமையாக இருக்கும் இடத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்

நல்லெண்ணெயில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து, அதனை கருமையாக உள்ள உள் தொடையில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து, 10 நிமிடம் கழித்து குளிக்க வேண்டும். இப்படி அன்றாடம் செய்தால் நல்ல மாற்றம் தெரியும்.

பாடி லோசன்

பாடி லோசன்

தற்போது கடைகளில் பலவிதமான கிரீம்கள் மற்றும் லோசன்கள் கிடைக்கின்றனர். அவற்றில் எலுமிச்சை மற்றும் மஞ்சள் கலந்த க்ரீம்களை வாங்கி முழங்கை, கால், உள் தொடை ஆகிய இடங்களில் தடவினால், அவை சருமத்தில் வறட்சி ஏற்படுவதை தடுப்பதோடு, கருமையையும் விரைவில் போக்கும்.

பால் பவுடர்

பால் பவுடர்

தினமும் குளிப்பதற்கு சிறிது நேரத்திற்கு முன், 1 டேபிள் ஸ்பூன் பால் பவுடருடன், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் 1/2 டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து, அதனை உள் தொடையில் தடவி ஊற வைத்து குளிக்க வேண்டும். இதன் மூலமும் நல்ல பலன் கிடைக்கும்.

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் பேக்கிங் பவுடர்

ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் பேக்கிங் பவுடர்

உள் தொடையில் உள்ள கருமையைப் போக்க ஆப்பிள் சீடர் வினிகரில் பேக்கிங் சோடா சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி, நன்கு காய்ந்ததும், குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றத்தைப் பார்க்கலாம்.

சந்தனம்

சந்தனம்

சந்தனப் பொடியை ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, கருமையாக உள்ள இடத்தில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், உள் தொடையில் இருக்கும் கருமை நீங்கி, பொலிவோடும் மென்மையாகவும் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Tips To Get Rid Of Dark Inner Thighs

There are some body care tips for inner thighs that can help lighten the skin tone. Here are some of the techniques to get rid of dark inner thighs.
Story first published: Wednesday, December 10, 2014, 13:11 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter