மழைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தை பராமரிக்க சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

எப்படியோ கோடைக்காலம் போய் மழைக்காலம் ஆரம்பித்துவிட்டது. பொதுவாக கோடைக்காலத்தில் எண்ணெய் பசை சருமத்தினர் அதிகப்படியான சரும பிரச்சனைகளுக்கு உள்ளாகியிருப்பார்கள். மழைக்காலம் ஆரம்பித்ததும், அனைவரும் குதூகலத்துடன் மழையில் நனைய விரும்புவோம். ஆனால் சருமமானது மழைக்காலத்திற்கு ஏற்றவாறு மாறியிருக்காது. எனவே எந்த ஒரு பருவகாலம் வந்தாலும், சருமத்தை முறையாக பராமரித்தால் தான் எவ்வித பிரச்சனையும் இல்லாமல் சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள முடியும்.

இங்கு எண்ணெய் பசை சருமத்தினர் மழைக்காலத்தில் தங்கள் சருமத்தை எப்படியெல்லாம் பராமரித்தால் அழகாக வைத்துக் கொள்ளலாம் என்று ஒருசில டிப்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து அதன் படி நடந்து வந்தால், மழைக்காலத்தில் சருமத்தை புத்துணர்ச்சியுடன் அழகாக வைத்துக் கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கிளின்சிங்

கிளின்சிங்

இந்த முறையை அனைத்து வகையானது சருமத்தினரும் பின்பற்ற வேண்டும். இதனால் சருமத்துளைகளில் இருந்து எண்ணெய் அதிகம் வெளியேறுவது கட்டுப்படுத்தப்படும். அதற்கு தினமும் மூன்று முறை மைல்டு ஃபேஷ் வாஷ் பயன்படுத்தி, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவ வேண்டும். அத்துடன் வாரம் இரண்டு முறை ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கும். மேலும் சருமத்தில் கரும்புள்ளிகள் மற்றும் வெள்ளைப் புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.

டோனிங்

டோனிங்

அடுத்தபடியாக டோனிங் செய்ய வேண்டும். இப்படி டோனரைக் கொண்டு சருமத்தை ஒரு நாளைக்கு மூன்று முறை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் வெளியேறிவிடும். அதிலும் ரோஸ் வாட்டரைக் கொண்டு சருமத்தை துடைத்து எடுப்பது மிகவும் சிறந்தது.

மாய்ஸ்சுரைசர்

மாய்ஸ்சுரைசர்

எண்ணெய் பசை சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் பசை இருக்கும். இதனால் பலர் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தமாட்டார்கள். ஆனால் சருமத்தை பராமரிக்க மாய்ஸ்சுரைசர் மிகவும் அவசியம். எனவே நீர்ம நிலையில் உள்ள மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்தினால், சருமம் ஆரோக்கியமாகவும், பாதுகாப்போடும் இருக்கும்.

ஃபேஸ் மாஸ்க்

ஃபேஸ் மாஸ்க்

ஃபேஸ் மாஸ்க் போடுவதால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சியுடன் பொலிவோடு இருக்கும். அதிலும் எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள், எலமிச்சை, தேன், ஓட்ஸ், பால், பப்பாளி, வெள்ளரிக்காய், கற்றாழை, தயிர் போன்றவற்றைப் பயன்படுத்தி வாரம் 1-2 முறை மாஸ்க் போடுவது நல்லது.

உணவுகள்

உணவுகள்

சருமத்தின் ஆரோக்கியமானது உண்ணும் உணவுகளைக் கொண்டும் உள்ளது. உங்களுக்கு எண்ணெய் பசை சருமம் இருந்தால், எண்ணெயில் பொரித்த உணவுகளை அதிக அளவில் சாப்பிட வேண்டாம். மாறாக பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை டயட்டில் அதிகம் சேர்த்து வாருங்கள். குறிப்பாக தண்ணீரை அதிகம் குடித்து வந்தால், சருமமானது மென்மையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Skin Care Tips For Oily Skin During Monsoon

If you want to follow a successful monsoon skin care routine make sure to have a well-functioning digestive tract.
Story first published: Tuesday, August 12, 2014, 16:14 [IST]
Subscribe Newsletter