For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கைகளில் உள்ள கருமையை போக்க சில வழிகள்

By Ashok CR
|

நாள் முழுவதும் கடுமையான ரசாயனங்களை கையாளுவது, புற ஊதா கதிர்களில் தொடர்ச்சியாக வெளிப்படுவது, தூசி நிறைந்த சூழலில் அல்லது மண்ணில் விளையாடுவது, மாசு படிந்த சூழலில் வெளிப்படுவது, கைகளை அடிக்கடி சுத்தப்படுத்தாமல் வைத்திருத்தல் போன்ற பல காரணங்களால் உங்கள் கைகளின் தோல் பதனிடுதலாகும். இதனால் உங்கள் கைகளின் அசல் நிறம் மாறுபட்டு அழகும் பாதிக்கப்படும்.

நமக்கு எழும் கேள்வியெல்லாம், இந்த தோல் பதனிடுதலை முழுமையாக நீக்க முடியுமா என்பது தான்? பெண்களே உங்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. பல வகை காரணங்களால் ஒருவரின் சருமம் சுலபமாக பதனிடுதல் ஆகிறது என்றால், கீழ்கூறிய சில எளிய டிப்ஸ்களை பின்பற்றி அவைகளை நீக்கவும் செய்யலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடாவுடன் தண்ணீர் கலந்து சொல்யூஷன் அல்லது பேஸ்டை தயார் செய்து கொள்ளுங்கள். அதனை ஸ்க்ரப்பாக பயன்படுத்தி, கைகளில் மற்றும் பிற பகுதிளில் ஏற்பட்டுள்ள சரும பதனிடுதலை நீக்கலாம். துரிதமான பலனை பெறுவதற்கு, இதனை ஒவ்வொரு நாள் விட்டு ஒரு நாள் செய்ய வேண்டும்.

வினீகர்

வினீகர்

வினீகர் மற்றும் தண்ணீரை சரிசமமான அளவில் எடுத்து ஒரு கிண்ணத்தில் போட்டு கலக்கவும். உங்கள் கைகளில் இந்த கிண்ணத்தில் விட்டு, 5-10 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு வைக்கவும். அதற்கு பிறகு குளிர்ந்த நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். நல்ல பலனை பெறுவதற்கு இந்த தெரபியை தினமும் தொடர்ந்து முயற்சி செய்யலாம்.

தேன்

தேன்

தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்த கலவையை தயார் செய்து அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவுங்கள். இந்த சொல்யூஷனை உங்கள் கைகளில் தடவி, 10-15 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு வைக்கவும். அதற்கு பிறகு குளிர்ந்த நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். கழுவிய கைகளை காட்டன் தவளை கொண்டு மெதுவாக துடைக்க மறந்து விடாதீர்கள்.

வெள்ளரிக்காய்

வெள்ளரிக்காய்

எலுமிச்சை சாறு, வெள்ளரிக்காய் சாறு மற்றும் பன்னீரை கலந்து தயார் செய்த கலவையை பதனிடுதலான இடங்களில் தடவுங்கள். இதனை உங்கள் கைகளில் தடவி, 10-15 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு வைக்கவும். அதற்கு பிறகு குளிர்ந்த நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள். சூரிய ஒளியில் ஏற்பட்டுள்ள கடுமையான சரும பதனிடுதல் மற்றும் சரும எரிச்சல்களை நீக்க இந்த கலவை சிறந்த பலனை அளிப்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. கைகளில் உள்ள பதனிடுதலை சுலபமாகவும் வேகமாகவும் நீக்க எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அளவு மற்றும் பன்னீரின் குளிர்ச்சியும் சிறந்த கலவையாக திகழும். இந்த கலவையை தயார் செய்து குளிர்சாதனபெட்டியில் வைத்து ஒரு வாரத்திற்கு கூட பயன்படுத்தலாம்.

எலுமிச்சை

எலுமிச்சை

பஞ்சுருண்டை அல்லது ஒரு சிறிய துணியை எலுமிச்சை சாற்றில் முக்கி, அதனை பதனிடுதல் ஏற்பட்டுள்ள இடத்தில் தடவுங்கள். ஒன்று அல்லது இரண்டு நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள். பின் 10-15 நிமிடங்கள் வரை அதனை அப்படியே விட்டு விடுங்கள். முழுமையாக காய்ந்த பிறகு, உங்கள் கைகளை குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

கடலை மாவு

கடலை மாவு

கடலை மாவு, தயிர் மற்றும் ர்லுமிச்சையை கொண்டு ஒரு பேஸ்ட்டை தயார் செய்யுங்கள். மூன்றின் அளவும் சரிசமமாக இருக்க வேண்டும். இந்த பேஸ்ட்டை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவுங்கள். பின் அதனை 10 நிமிடத்திற்கு அப்படியே விட்டு விடுங்கள். இந்த கலவை காய்ந்த பிறகு, வெதுவெதுப்பான நீரில் கைகளை கழுவிக் கொள்ளுங்கள்.

மஞ்சள்

மஞ்சள்

1 டீஸ்பூன் மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறை பாலில் கலந்து கொள்ளுங்கள். அதனை நன்றாக கலக்கி கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களில் தடவுங்கள். தடவிய கலவை காயும் வரை, 10 நிமிடங்கள் வரை அப்படியே விட்டு விடுங்கள். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

இளநிர்

இளநிர்

கைகளில் இளநீரை தொடர்ச்சியாக தடவி, பின் காய வையுங்கள். வேகமான மற்றும் சிறந்த பலனை பெறுவதற்கு, இந்த சொல்யூஷனை தினமும் ஒரு தடவைக்கு மேல் பயன்படுத்தலாம்.

பப்பாளி

பப்பாளி

சரும பதனிடுதலை நீக்க உதவும் மற்றொரு பொருள் பப்பாளி. பப்பாளியை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி மசாஜ் செய்து, அதை அப்படியே 10 நிமிடங்களுக்கு விட்டு விடுங்கள். அது காய்ந்த பிறகு குளிர்ந்த நீரில் கழுவுங்கள்.

முல்தானி மட்டி

முல்தானி மட்டி

வெண் பூசணி மற்றும் முல்தானி மட்டி கொண்ட கலவையை தயார் செய்து, அதனை பாத்க்கப்பட்ட இடங்களில் தடவுங்கள். பின் குளிர்ந்த நீரில் கையை அலசுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How To Remove Tan From Hands

Want to know how to remove tan from Hands? Take a look.
Story first published: Saturday, October 4, 2014, 18:11 [IST]
Desktop Bottom Promotion