For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகத்திலுள்ள தழும்புகளை நீக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்...

By Boopathi Lakshmanan
|

மிகவும் அசௌகரியத்தை உண்டாக்கும் சரும பாதிப்பு பிரச்சனையாக முகப்பரு உள்ளது. முறையான மருந்து மற்றும் சரும பராமரிப்பு மூலம் முகப்பருவை சரி செய்திடலாம். எனினும், முகப்பரு வந்து போன பின்னர் விட்டுச் செல்லும் கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் உங்களுடைய அழகுக்கு குந்தகம் விளைவிக்கின்றன.

சந்தைகளில் கிடைக்கும் சாதாரண சரும பராமரிப்பு கிரீம்களைக் கொண்டு இந்த தழும்புகளை உங்களால் அவ்வளவு சீக்கிரம் நீக்கி விட முடியாது. எனினும், அதிர்ஷ்டவசமாக சில இயற்கையான நிவாரணங்களைக் கொண்டும் கூட முகப்பரு தழும்புகளை விரட்ட முடியும்.

முகப்பரு தழும்புகளை வீடுகளிலேயே விரட்டுவதற்கான சில வழிமுறைகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம். எனினும், இந்த வழிமுறைகளை சில நாட்கள் வரையிலும் பின்பற்றும் பொறுமை இருந்தால் தான், நீங்கள் எதிர்பார்த்த பலன் கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெய்

ஆலிவ் எண்ணெயைத் தடவுவதன் மூலம் தழும்புகளை குறைத்திட முடியும். ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவிக் கொண்ட பின்னர், மிதமான நீராவியில் முகத்தைக் காட்டுங்கள். இதன் மூலம் துளைகள் சுத்தமாகி, தழும்புகளின் அடர்த்தி குறைந்து விடுகிறது.

சந்தனம்

சந்தனம்

சந்தனத்தை அரைத்து தடவிக் கொள்வதன் மூலம் தழும்புகளை மிதமாக்கி வி முடியும். சந்தனப் பொடியை, ரோஸ் வாட்டர் அல்லது பாலுடன் கலக்கவும். உங்களுடைய முகத்திலுள்ள தழும்பிளல் இந்த கலவையை தடவி விட்டு, 1 மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரில் நன்றாக அலசி கழுவி விடவும்.

பாதாம்

பாதாம்

பால் அல்லது தண்ணீரில் பாதாமை 12 மணிநேரம் ஊற வைக்கவும். பாதாம் கொட்டையின் தோலை உரித்து விட்டு, நன்றாக அரைக்கவும். இந்த கலவையுடன் ரோஸ் வாட்டரைக் கலந்து, தழும்புகளில் தடவிக் கொள்ளுங்கள்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

ஒரு நாளைக்கு 3 முறை வீதம் எலுமிச்சை சாற்றை இரண்டு வாரங்களுக்கு குடிப்பதன் மூலமும் தழும்புகளை மறையச் செய்ய முடியும்.

சமையல் சோடா

சமையல் சோடா

சமையல் சோடாவைக் கொண்டு உங்களுடைய முகத்தில் தேய்த்து விடுவதன் மூலம் முகத்தின் தழும்பை குறையச் செய்ய முடியும். சமையல் சோடாவுடன், தண்ணீரைக் கலந்து 1 முதல் 2 நிமிடங்களுக்கு தேய்த்து விடவும். பின்னர் மிதவெப்பமான தண்ணீரில் கழுவி விடுங்கள். இதை தொடர்ந்த செய்து வரவும்.

உருளைக்கிழங்கு

உருளைக்கிழங்கு

தழும்புகளை குறைப்பதில் உருளைக்கிழங்கும் உதவுகிறது. இதில் கந்தகமும், பொட்டாசியமும் கலந்திருக்கிறது. உருளைக்கிழங்கை பச்சையாக எடுத்து அரைத்து, அந்த சாற்றைப் பிழிந்து தழும்பு உள்ள இடத்தில் தடவவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to Remove Facial Scars

Listed below are few home remedies that can remove facial scars. However, you should have the patience to follow these steps for a certain number of days in order to get the desired results.
Story first published: Saturday, August 30, 2014, 9:19 [IST]
Desktop Bottom Promotion