முழங்கால் மற்றும் முழங்கையில் உள்ள கருமையை நீக்க சில டிப்ஸ்...

Posted By:
Subscribe to Boldsky

உடலில் பலருக்கு கருமையாக இருக்கும் பகுதி என்றால் அது முழங்கை மற்றும் முழங்கால் தான். ஏனெனில் பள்ளி செல்லும் வயதில் அனைவரும் மிகவும் குறும்புத்தனமாக இருப்பதால், பள்ளியில் கட்டாந்தரையில் முட்டி போட்டிருப்போம். இப்படி பலமுறை முட்டி போட்டதால், முழங்கால்களில் அழுக்குகள் மற்றும் இறந்த செல்கள் அப்படியே தங்கி அவ்விடமானது கருமையாகவே இருக்கும். அதேப்போன்று முழங்கையை அதிகம் ஊன்றுவதாலும், வெயிலில் அதிகம் திரிவதாலும், முழங்கைகளும் கருமையாக இருக்கும்.

கரும்புள்ளியை நீக்குவதற்கான சில எளிய வழிகள்!!!

தற்போது ஃபேஷன் என்ற பெயரில் முழங்கால் அளவுள்ள ஆடைகள் மற்றும் ஸ்லீவ்லெஸ் ஆடைகள் வந்திருப்பதால், அதனை பெண்கள் அணியும் போது முழங்கை மற்றும் முழங்கால் கருமையாக இருக்கும். ஆகவே அதனைப் போக்க வழியே இல்லையா என்று பலர் வருத்தப்படுவதுண்டு. அத்தகையவர்களுக்காக தமிழ் போல்ட் ஸ்கை முழங்கால் மற்றும் முழங்கைகளில் உள்ள கருமையைப் போக்க சில வழிகளைக் கொடுத்துள்ளது. அதைப் படித்து அவற்றை முயற்சித்து, அழகான முழங்கால் மற்றும் முழங்கைகளைப் பெறுங்கள்.

கருப்பா இருந்தாலும் களையா தெரிய டெய்லி 10 நிமிடம் செலவழிச்சா போதும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

1 டேபிள் ஸ்பூன் பேக்கிங் சோடாவில் சிறிது பால் சேர்த்து பேஸ்ட் செய்து, அதனை முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து வந்தால், கருமையைப் போக்கலாம். அதிலும் இந்த முறையை இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மஞ்சள், தேன் மற்றும் பால்

மஞ்சள், தேன் மற்றும் பால்

மஞ்சள் தூளில் சிறிது பால் மற்றும் தேன் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, அதனை கருமையாக உள்ள இடங்களில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஈரமான கையால் அவ்விடத்தை 2 நிமிடம் மசாஜ் செய்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில்

சர்க்கரை மற்றும் ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில் மற்றும் சர்க்கரையை சரிசமமாக எடுத்து பேஸ்ட் செய்து, முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்து, மைல்டு சோப்பு பயன்படுத்தி கழுவினால், கருமையானது நீங்கும்.

எலுமிச்சை மற்றும் தேன்

எலுமிச்சை மற்றும் தேன்

1 எலுமிச்சையை சாறு எடுத்துக் கொண்டு, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, அந்த கலவையை கருமையாக உள்ள இடத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால், அவ்விடத்தில் உள்ள கருமை கொஞ்சம் கொஞ்சமாக மறைய ஆரம்பிக்கும்.

கடலை மாவு மற்றும் எலுமிச்சை

கடலை மாவு மற்றும் எலுமிச்சை

கடலை மாவில் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி வட்ட வடிவில் மசாஜ் செய்து, உலர வைத்து, கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால், நல்ல மாற்றம் தெரியும்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேற்றி, தினமும் இரவில் படுக்கும் போது முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி 10 நிமிடம் மசாஜ் செய்து வந்தால், நாளடைவில் கருமை மறையும்.

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்

வீட்டில் உள்ள கற்றாழை செடியின் ஒரு இலையை பறித்து, அதில் உள்ள ஜெல்லை முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து வந்தால், கருமை மறைய ஆரம்பிக்கும்.

 தக்காளி

தக்காளி

தினமும் தக்காளியின் சாற்றினை கருமையாக உள்ள இடங்களில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து கழுவி வந்தால், கருமை நீங்கும்.

வினிகர் மற்றும் தயிர்

வினிகர் மற்றும் தயிர்

வினிகர் மற்றும் தயிரை ஒன்றாக ஒரு பௌலில் கலந்து, அதனை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி நன்கு உலர வைத்து, பின் அதனை இடத்தில் சிறிது நீர் தெளித்து 2 நிமிடம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

திராட்சை

திராட்சை

வீட்டில் திராட்சை இருந்தால், அதனை சாற்றினை முழங்கால் மற்றும் முழங்கைகளில் தடவி நன்கு தேய்த்து, உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் கருமை மறையும்.

இதுப்போன்று சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள பல தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

10 Effective Tips To Get Rid Of Black Knees And Elbow

You can easily get rid of these dark knees and elbows using various home remedies. Here are the top 10 effective tips to get rid of black knees and elbow.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter