அழகான சருமத்திற்கு ஏற்ற களிமண் ஃபேஸ் மாஸ்க்!!!

Posted By:
Subscribe to Boldsky

பொதுவாக ஃபேஸ் மாஸ்க்குகள் போட்டால் முகத்தின் ஆழத்தில் இருக்கும் அழுக்குகள் அனைத்தும் நீங்கிவிடும். வயதான தோற்றம், பழுப்பு நிற சருமம், பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை வராமல் இருக்கும். நிறைய பெண்கள் களிமண் ஃபேஸ் மாஸ்க் போட்டால் எந்த பயனும் இல்லை என்று நினைக்கின்றனர். அவ்வாறு தோன்றுவதற்கு காரணம் சருமத்திற்கு ஏற்ற ஃபேஸ் பேக்குகள் போடாமல் இருப்பது தான்.

Homemade Mud Face Masks
சொல்லப்போனால் இந்த களிமண் ஃபேஸ் மாஸ்க் எண்ணெய் சருமத்திற்கு சிறந்தது. மேலும் மாதத்திற்கு ஒரு முறை களிமண்ணை வைத்து மாஸ்க் போட்டால் எந்த பயனும் தெரியாது. குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது அதனை செய்தால் தான், அதன் முழுமையான பலனை பெற முடியும். இப்போது அத்தகைய களிமண் ஃபேஸ் மாஸ்க்கை எப்படி எளிதாக வீட்டிலேயே செய்வதென்று பார்த்து, ட்ரை செய்து பாருங்களேன்...

* ஃபேஸ் மாஸ்க்குகளில் மூல்தானி மெட்டி தான் பொதுவாக பயன்படுத்துவார்கள். மூல்தானி மெட்டியும் ஒரு வகையான மண் தான். மேலும் இது முகத்தில் இருக்கும் பருக்கள் மற்றும் எண்ணெய் பசையை நீக்கிவிடும். அதற்கு சிறிது மூல்தானி மெட்டி, தயிர் மற்றும் எலுமிச்சை சாற்றை விட்டு, கலந்து முகத்திற்கு தடவி, 10-15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். முக்கியமாக மாஸ்க் போடும் போது, சிரிக்கவோ அல்லது பேசவோ கூடாது. இதனால் சருமத்தில் சுருக்கங்கள் மற்றும் கோடுகள் ஏற்படும்.

* களிமண்ணுடன், பால் மற்றும் தேனை கலந்து போடுவதும் பொதுவான ஃபேஸ் மாஸ்க் தான். இந்த ஃபேஸ் மாஸ்க்கில் க்ளேயில் பச்சை அல்லது பிரென்ச் க்ளேயை பயன்படுத்த வேண்டும். இதனால் இந்த மாஸ்க்கில் இருக்கும் தேன் முதுமை தோற்றத்தை, சருமத்துளைகளில் உள்ள அழுக்குகளை நீக்குவதோடு, இதில் உள்ள பால் சருமத்திற்கு எண்ணெய் பசையைத் தருகிறது. பிம்பிள் இருப்பவர்கள், இத்துடன் எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, தடவி, 10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் சருமம் பளிச்சென்று காணப்படும்.

* சருமத்தில் உள்ள பழுப்பு நிறத்தை போக்க ப்ளீச் செய்பவர்களுக்கு ஒரு சிறந்த முறை உள்ளது. இனிமேல் ப்ளீச் செய்வதை விட்டு, அதற்கு பதிலாக கடைகளில் விற்கும் பிரென்ச் க்ளேயை வாங்கி, அதோடு கிரீன் டீயை விட்டு கலக்க வேண்டும். கிரீன் டீயை தயாரிக்க, டீத்தூள் அல்லது டீ பேக்குகளை வாங்கி, தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் போட்டு 5-10 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின் அந்த நீரை பிரென்ச் க்ளேயுடன் கலந்து, பேஸ்ட் செய்து கொள்ளவும். பின் அதனை முகத்திற்கு தடவ வேண்டும். மேலும் ஃபேஸ் மாஸ்க்கின் போது கண்களுக்கு வெள்ளரிக்காய் துண்டுகளை மாஸ்க் காயும் வரை வைத்தால், கண்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படும்.

* சருமத்தை புத்துணர்ச்சி செய்வதற்கு மூல்தானி மெட்டி அல்லது களிமண்ணை ரோஸ் வாட்டருடன் கலந்து பேஸ்ட் செய்து, முகத்திற்கு தடவி, காய வைத்து கழுவ வேண்டும். இந்த முறையில் மூல்தானி மெட்டியை பயன்படுத்தினால், இந்த மாஸ்க்கை ஒரு நாள் விட்டு செய்யலாம். ஏனெனில் இதனால் முகத்தில் இருக்கும் முகப்பருக்கள் நீங்கிவிடும். ஆனால் களிமண்ணை அவ்வாறு பயன்படுத்தக் கூடாது, வாரத்திற்கு ஒருமுறை தான் பயன்டுத்த வேண்டும். இல்லையென்றால் சருமம் பாதிக்கப்படும்.

ஆகவே இந்த ஃபேஸ் மாஸ்க்குகளை செய்து வந்தால், முகம் நன்கு பொலிவோடு, அழகாக மின்னும். முக்கியமான ஒன்று ஃபேஸ் மாஸ்க்குகளை முகத்திற்கு போடும் போது கண்கள் மற்றும் புருவத்தின் மீது போட வேண்டாம்.

English summary

Homemade Mud Face Masks | அழகான சருமத்திற்கு ஏற்ற களிமண் ஃபேஸ் மாஸ்க்!!!

Mud face masks are very common beauty treatment to fight acne, treat sun tan and get a glowing skin. There are many women who feel that mud face masks do not work. However, this depends on the skin type and how you use it. If you apply it once a month, mud masks can never show results. You need to have patience and spend time on applying mud packs (at least once in a week). Here are few homemade mud face masks that can be prepared in just few minutes time.
Story first published: Saturday, September 22, 2012, 12:20 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter