அனைத்து விதமான தலைமுடி பிரச்சனைகளுக்கும் தீர்வளிக்கும் அற்புத எண்ணெய்கள்!

Posted By:
Subscribe to Boldsky

நம் அனைவருக்குமே அடர்த்தியான, பொலிவான மற்றும் மென்மையான தலைமுடி வேண்டுமென்ற ஆசை இருக்கும். ஒவ்வொருவருக்குமே அவர்களது தலைமுடி பிடிக்கும். ஏனெனில் தலைமுடி ஒருவரது முகம் மற்றும் தோற்றத்தை சிறப்பாக வெளிக்காட்டும். ஆனால் இன்றைய காலதில் ஏராளமானோர் தலைமுடி உதிரும் பிரச்சனையால் அதிகம் அவஸ்தைப்படுகிறார்கள். இதற்கு வேலைப்பளு நிறைந்த வாழ்க்கை முறை, மாசடைந்த சுற்றுச்சூழல் மற்றும் தலைமுடி பராமரிப்பு பொருட்கள் போன்றவையே காரணங்களாகும்.

These Oils Will Solve All Your Hair Problems

அதோடு இன்று யாருமே தலைக்கு எண்ணெய் வைப்பதே இல்லை. இதனால் தலைமுடியின் ஆரோக்கியத்திற்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காமல், தலைமுடி வலிமையிழந்து உதிர ஆரம்பிக்கிறது. தலைமுடி ஆரோக்கியமாகவும், உதிராமலும் இருக்க வேண்டுமானால், அடிக்கடி தலைக்கு எண்ணெய் பயன்படுத்த வேண்டியது அவசியம். அதிலும் தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் சில எண்ணெய்களைப் பயன்படுத்துவதன் மூலம், தலைமுடி வலிமையடையும்.

இக்கட்டுரையில் தலைமுடி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அனைத்தையும் சரிசெய்யும் அற்புத எண்ணெய்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து தெரிந்து பயன்படுத்தி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலில் அனைத்துவிதமான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் அடங்கியுள்ளன. இது வறட்சியான தலைமுடி கொண்டவர்களுக்கு ஏற்றது. அதற்கு ஆலிவ் ஆயிலை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் படும்படி நன்க மசாஜ் செய்ய வேண்டும். பின் வெதுவெதுப்பான நீரில் நனைத்து பிழிந்த துணியால், தலையைச் சுற்றி 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு 1 முறை செய்ய, தலைமுடியின் வறட்சி நீங்கி, முடி பட்டுப் போன்று மென்மையாக இருக்கும்.

அவகேடோ ஆயில்

அவகேடோ ஆயில்

அவகேடோ ஆயில் தலைமுடியை வலிமையாக்கவும், அடர்த்தியாக்கவும் செய்யும். அவகேடோ எண்ணெயில் தலைமுடியில் உள்ள பாதிப்பை சரிசெய்யத் தேவையான அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. அதற்கு அவகேடோ எண்ணெயை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

மாதுளை விதை எண்ணெய்

மாதுளை விதை எண்ணெய்

எலிவால் போன்று தலைமுடி உள்ளதா? இத்தகைய முடி கொண்டவர்களுக்கு மாதுளை விதை எண்ணெய் ஒரு நல்ல மாயத்தை ஏற்படுத்தும். அதற்கு 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயிலுடன் சிறிது மாதுளை விதை எண்ணெயை சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி நன்கு மசாஜ் செய்து, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் தலைமுடியை அலச வேண்டும்.

கடுகு எண்ணெய்

கடுகு எண்ணெய்

பழங்காலம் முதலாக தலைமுடியை மென்மையாக வைத்துக் கொள்வதற்கு கடுகு எண்ணெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு தலைமுடிக்கு ஏற்ற அளவு கடுகு எண்ணெயை எடுத்து, வெதுவெதுப்பாக சூடேற்றிக் கொள்ள வேண்டும். பின் அதை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு கொண்டு, வெதுவெதுப்பான நீரால் அலச வேண்டும்.

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய்

நல்லெண்ணெய் மிகவும் பிரபலமான ஓர் எண்ணெய் மற்றும் இது சமையலில் மட்டுமின்றி, தலைமுடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் பழங்காலம் முதலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது அனைத்து வகையான தலைமுடியினருக்கும் நல்லது. அதற்கு 2-3 டேபிள் ஸ்பூன் தயிரை, நல்லெண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

உலகிலேயே தேங்காய் எண்ணெய் மிகவும் சக்தி வாய்ந்த எண்ணெய்களுள் ஒன்று. தேங்காய் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. மேலும் இந்த எண்ணெய் தலைமுடியால் எளிதில் உறிஞ்சக்கூடியது. அதற்கு தேங்காய் எண்ணெயை குறைந்தது வாரத்திற்கு இரண்டு முறை தலையில் தடவி நன்கு மசாஜ் செய்து, பின் ஷாம்பு பயன்படுத்தி நீரால் அலசுங்கள்.

ரோஸ்மேரி எண்ணெய்

ரோஸ்மேரி எண்ணெய்

அத்தியாவசிய எண்ணெய்களுள் ஒன்று ரோஸ்மேரி எண்ணெயாகும். இதில் வைட்டமின் பி, இரும்புச்சத்து மற்றும் கால்சியம் அதிகமாக உள்ளது. மேலும் ஆயிரம் வருடங்களாக எலிவால் போன்று இருக்கும் தலைமுடியை சரிசெய்ய பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதற்கு ரோஸ்மேரி எண்ணெயை ஆலிவ் ஆயில் அல்லது தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, தலைக்கு தடவி சிறிது நேரம் நன்கு மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு பயன்படுத்தி நீரால் அலச வேண்டும்.

ஜொஜோபா ஆயில்

ஜொஜோபா ஆயில்

ஜொஜோபா ஆயில் பார்ப்பதற்கு எண்ணெய் போன்று இருக்காது. ஒருவித மெழுகு போன்று இருக்கும். இது பாதிக்கப்பட்ட தலைமுடியை சரிசெய்ய உதவும் மற்றும் புதிய ஆரோக்கியமான தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும். அதற்கு சிறிது ஜொஜோபா எண்ணெயை எடுத்து, ஸ்கால்ப்பில் படும்படி தடவி மசாஜ் செய்து, 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு கொண்டு தலைமுடியை அலச வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

These Oils Will Solve All Your Hair Problems

If you are looking for an effective method as a solution for all your hair problems, you are at the right place. There are some effective hair oils that you can use in your everyday.
Story first published: Wednesday, March 28, 2018, 18:07 [IST]