For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் குளிச்சாலும் தலை அரிப்பு போகலையா?... இத தேய்ங்க சரியாகிடும்...

அரிப்பு தலை உங்களை பொது இடங்களில் சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளுவதோடு அது உங்கள் தலைக்கும் தோலுக்கும் ஒரு சுகாதார தீங்காக அமைகிறது.

By Gayathri Kasi
|

அரிப்பு தலை உங்களை பொது இடங்களில் சங்கடமான சூழ்நிலைக்கு தள்ளுவதோடு அது உங்கள் தலைக்கும் தோலுக்கும் ஒரு சுகாதார தீங்காக அமைகிறது. அரிப்பு ஏற்பட காரணம் ஃபங்கஸ், ரிங்வார்ம்/படர்த்தமரை, பேன், பொடுகு அல்லது ட்ரய் ஸ்கின். முடிந்தவரை இதை சீக்கிரம் சரி செய்வது நல்லது. நீங்கள் பயன்படுத்தும் ஷாம்பூ மூலம் கூட தலை அரிப்பு ஏற்படும்.

hair care

மேலும் சுத்தமான அல்லது சரியான தலை பராமரிப்பு இல்லையென்றாலும் தலை அரிப்பு ஏற்படும். உங்கள் உணவில் வைட்டமின் B மற்றும் D, சின்க், நல்ல கொழுப்பு போன்றவை குறைவாக இருந்தாலும் தலை அரிப்பு ஏற்படும். தலை அரிப்பிலிருந்து விடுபட பல இயற்கை வழிகள் உள்ளது ஆகையால் நீங்கள் கவலை கொள்ளவேண்டாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேயிலை எண்ணெய் / டீ ட்ரீ ஆயில்

தேயிலை எண்ணெய் / டீ ட்ரீ ஆயில்

பொடுகு ட்ரய் ஹேர் மற்றும் அரிப்பு தலை போன்றவற்றிற்கு பயன்பட்டு வருகிறது. ஆன்டி-பாக்டீரியால், ஆன்டி-இன்பிலம்மாட்டோரி, மற்றும் ஆன்டி-ஃபங்கஸ் பண்புகளை கொண்டது. இது பொடுகு ஏற்பட காரணமாக இருக்கும் மற்றும் பாக்டீரியாவை அழிக்கும்.

பயன்படுத்தும் முறைகள்

உங்கள் உடல் வலுவான டீ ட்ரீ ஆயில் கலவையை ஏற்கும் என்றல் நீங்கள் அதை அப்படியே பயன்படுத்தலாம். 5-10 சொட்டு ஆயில் எடுத்து மெதுவாக உங்கள் தலையில் மசாஜ் செய்யவும். உங்கள் ஸ்கின் சென்சிடிவாக இருந்தால் பேபி ஷாம்பூவில் கலந்து பயன்படுத்தவும். 10-20 சொட்டு டீ ட்ரீ ஆயிலில் 1/2 கப் பேபி ஷாம்பு சேர்த்து தினமும் உங்கள் தலையையும் முடியையும் அரிப்பு போகும் வரை அலம்பி வரவேண்டும். 2-3 சொட்டு டீ ட்ரீ ஆயிலில் ஒரு டேபிள் ஸ்பூன் ஜோஜோபா ஆயில், அல்மோன்ட் ஆயில், ஒலிவ் ஆயில், தேங்காய் எண்ணெய் போன்ற ஏதேனும் ஒரு கேரியர் ஆயில் சேர்த்து தினமும் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்து 1-2 மணிநேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலம்பவும். எளிதான முறை டீ டீ ரீ ஆயில் ஷாம்பூவை வாங்கி அதை கொண்டு உங்கள் தலையை அலம்பவும். ஷாம்ப்போ பயன்படுத்தி 1-2 நிமிடம் கழித்து தலையை அலம்பவும். இதை நீங்கள் தினமும் செய்து வரலாம். தண்ணீரில் 5-10 சொட்டு டீ ட்ரீ ஆயில் சேர்த்து கலக்கி வைத்து கொள்ளவும். ஷாம்பூ பயன்படுத்திய பிறகு கலக்கி வைத்துள்ள தண்ணீர் கொண்டு மீண்டும் தலையை அலம்ப வேண்டும். நீங்கள் ஷாம்பூவை அகற்ற சாதாரண தண்ணீர் கொண்டு தலையை கழுவலாம்.

கற்றாழை / அலோவேரா

கற்றாழை / அலோவேரா

அலோவேரா ஜெல்லில் ஆன்டி-ப்ருரிட்டிக் தன்மை உள்ளதால் அது அரிப்பை கட்டுப்படுத்தும். கற்றாழையில் கிளைகோபுரோட்டீன் உள்ளதால் அது உங்கள் தலையை ஈரப்பதத்தோடு வைத்துக்கொள்வது மட்டுமல்லாமல் தலையை பாதுகாக்கவும் உதவுகிறது.

கற்றாழையில் உள்ள ஆன்டி-பாக்டீரியால், மற்றும் ஆன்டி-ஃபங்கஸ் பண்பு, உங்கள் ஸ்கேல்ப்பில் உள்ள ஃபங்கஸ் மற்றும் ஈஸ்ட்டை சுத்த படுத்த உதவுகிறது . உங்கள் ஸ்கேல்ப்பில் கற்றாழையை பூச உங்கள் ஸ்கேல்ப் அந்த ஜெல்லை நன்றாக உரியும் தன்மைகொண்டது. அலோ வேரா ஜெல்லில் உள்ள இன்ஸ்யம்ஸ், டெட் ஸ்கின் செல்சை நீக்கும். மேலும் அதில் உள்ள அமினோ ஆசிட் ஆரோக்கியமான திசுவின் வளர்ச்சிக்கும் பயன்படும். இதனால் இது சுத்தமான ஸ்கேல்ப்பையும், வலுவான மற்றும் பளபளப்பான முடியை தருகிறது.

பயன்படுத்தும் முறை:

கற்றாழை இலை அல்லது கடையில் வாங்கிய அலோ வேரா ஜெல். கற்றாழை துண்டு எடுத்து அதை வெட்டி அதிலிருந்து ஜெல்லை எடுத்துக்கொள்ளவும். உங்கள் தலையை ஷம்பூ பயன்படுத்தி சூடான நீரில் கழுவவும். 1 டேபிள் ஸ்பூன் அலோ வேரா ஜெல் எடுத்து உங்கள் தலையை மசாஜ் செய்யவும். 5-10 நிமிடம் கழித்து தலையை அலம்பவும்

எள் எண்ணெய் / செசமே ஆயில்

எள் எண்ணெய் / செசமே ஆயில்

உங்களை ஸ்கேல்ப் ட்ரய்ன்ஸ்/வறட்சியிலிருந்து விடிவுபடுத்தி அரிப்பை தடுக்கும். இது உங்கள் தலையை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும். சில நேரங்களில், சூரியன் போன்ற வெப்பம், உங்கள் முடியை சேதம் செய்யும் போது இதை நீங்கள் பயன்படுத்தி வரலாம். இது ஈரப்பதத்தை நிலைக்க செய்து வறட்சியை தடுக்கும். பேன்களால் ஏற்படும் அரிப்பிற்க்கும் நீங்கள் இந்த எண்ணெயை பயன்படுத்தலாம்.மேலும் நீங்கள் எள் எண்ணெயை பிற எண்ணெயோடு கலந்தும் பயன்படுத்தலாம்.

தேவையானவை

1-2 டேபிள் ஸ்பூன்

சிறிதளவு எலுமிச்சை சாறு

சூடான துண்டு (அவசியமில்லை)

எள் எண்ணெயை லேசாக சூடாக்கி வைத்துக்கொள்ளவும். இந்த லேசான சூடுள்ள எண்ணெயை தினமும் தூங்கும் முன்பு 10 நிமிடங்களுக்கு உங்கள் தலையில் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்த பிறகு 10 நிமிடம் சூடான துண்டு கொண்டு தலையை கட்டி வைக்கவும். (சூடான துண்டு பயன்படுத்துவது அவசியமில்லை) சூடான துண்டு பயன்படுத்தி இருந்தால் தூங்கச்செல்லவும் முன் அகற்றி விட்டு தூங்கவும். மறுநாள் காலை உங்கள் தலை முடியையும் ஸ்கேல்ப்பையும் நன்கு கழுவவும். உங்கள் தலை அரிப்பு போகும் வரை நீங்கள் இதை தொடர்ந்து செய்து வரலாம். மேலும் எள் எண்ணெயில் எலுமிச்சை சாறு கலந்து மசாஜ் செய்து வர ஸ்கேல்ப் வறட்சியை காக்க பயன்படும்.

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய் ஸ்கின்னை மாய்ஸ்சரைஸ் செய்வதோடு அரிப்பு, ரெட்னஸ், இரிடேஷன் போன்றவற்றை குறைக்கும். தேங்காய் எண்ணெயில் உள்ள ஆன்டிபாக்டீரியால் ப்ரொபேர்ட்டி ஃபோலிகுலிடிஸ்ஸை தடுப்பதோடு ஹேர் இன்பிக்ஷன் மற்றும் ஃபங்கஸ் இன்பிக்ஷன் போன்றவற்றையும் தடுக்கும். தேங்காய் எண்ணெய் பொடுகு மூலம் ஏற்படும் அரிப்பை குறைபத்தோடு குழந்தைகளுக்கு ஏற்படும் ஸ்கேல்ப் புண்ணையும் குறைக்கும். தேங்காய் எண்ணெயை குழந்தைகளுக்கு தயங்காமல் பயன்படுத்தலாம். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தினால் அது அரிப்பை போக்குவதோடு அரிப்பு ஏற்படாமல் இருக்கவும் உதவும். தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி வருவதனால் உங்கள் தலைமுடிக்கு அது ஒரு பாதுகாப்பாக விளங்குகிறது. மேலும் அது உங்கள் முடியை மிருதுவாகவும் மென்மையாகவும் வைக்கிறது.

தேவையானவை

தேங்காய் எண்ணெய் 2-5 டேபிள் ஸ்பூன்

தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்கி கொள்ளவும். இல்லையென்றால் அப்படியே கூட பயன்படுத்தலாம். எண்ணெயை உங்கள் முடியின் வேரிலும் ஸ்கேல்பிலும் 10 நிமிடங்களுக்கு நன்கு மசாஜ் செய்யவும். பிறகு உங்கள் தலையை துண்டு அல்லது ஷோவ்ர் கேப் கொண்டு கட்டி 2-3 மணிநேரம் அல்லது இரவு முழுவதும் ஊறவைக்கவும். பின்பு ஷாம்பு போட்டு தலையை கழுவவும்.

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறு

எலுமிச்சை சாறில் உள்ள லோ pH, ஓர் நல்ல ஆன்டிபாக்டீரியால் ஏஜென்ட் ஆக விளங்குவதோடு உங்கள் தலை அரிப்புக்கு ஓர் நல்ல தீர்வாக அமையும். இருப்பினும், உங்கள் ஸ்கின் சேதமடைந்திருந்தால் நீங்கள் இதை பயன்படுத்த வேண்டாம்.

வழிமுறை

2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு எடுத்து அதை நேராக உங்கள் ஸ்கேல்பில் தேய்க்கவும். பிறகு தண்ணீரில் கழுவி மீண்டும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறை 1 கப் தண்ணீரில் கலந்து இதை கொண்டு உங்கள் தலையை கழுவவும். நீங்கள் பிரெஷான எலுமிச்சை சாறை அப்படியே அல்லது தண்ணீரில் கலந்தும் உங்கள் ஸ்கேல்பில் தேய்க்கலாம். தேய்த்து 10-15 நிமிடம் கழித்து ஷாம்பு போட்டு தலையை கழுவவும். இல்லையெனில், 5-10 ட்ராப் எலுமிச்சை சாறில் 2-3 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து உங்கள் ஸ்கேல்பில் தடவி 5-10 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை கழுவவும். இதனை அரிப்பு போகும் வரை தினமும் பின்பற்றவும்.

பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா

எஸ்போலிஅஷன் இல்லாமையும் டெட் செல்சை உருவாக்கி அரிப்பை ஏற்படுத்தும். பேக்கிங் சோடா ஓர் நல்ல எஸ்போலியட்டிங் ஏஜென்ட். பேக்கிங் சோடாவில் உள்ள அல்கலின் தன்மை pH லெவலை நிலைப்படுத்தி உங்கள் தலை அரிப்புக்கு ஓர் வழிவகுக்கும்.

தேவையானவை

பேக்கிங் சோடா 2-3 டேபிள் ஸ்பூன்

தண்ணீர்

ஒலிவ் ஆயில் 1-2 டேபிள் ஸ்பூன்

வழிமுறை

ஒலிவ் ஆயில் கொண்டு உங்கள் ஸ்கேல்ப்பை நன்றாக மசாஜ் செய்யவும்.

பேக்கிங் சோடாவில் சிறுதளவு தண்ணீர் சேர்த்து பேஸ்ட் தயாரித்து உங்கள் ஸ்கேல்பில் தடவி 15 நிமிடம் கழித்து தலையை கழுவவும்.

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகர்

ஆப்பிள் சிடர் வினிகரும் உங்கள் ஸ்கேல்பின் pH லெவலை சமநிலைப்படுத்தி உங்களை அரிப்பிலிருந்து விடுவிக்கும். இதில் உள்ள ஆன்டி-இன்பிலம்மாட்டோரி பண்புகள் தலை அரிப்பை குறைக்க பயன்படுகிறது . வினிகரில் உள்ள அசிட்டிக் ஆசிட் இயற்கை கிலேன்செராக விளங்குவதோடு உங்கள் ஸ்கேல்பின் அமைப்பையும் நீக்கும். இது தடைபட்ட போர்ஸை திறப்பதோடு உங்கள் தலைமுடிக்கு ஒரு கண்டிஷனர் ஆகவும் பயன்படும். மேலும் தலைமுடியை பளபளப்பாக்கும்.

வழிமுறை

1. 1/4 கப் ஆப்பிள் சிடர் வினிகரை 1/4 கப் தண்ணீரில் சேர்த்து ஸ்பிரே பாட்டலில் போட்டு, அதை உங்கள் தலையில் தெளித்து பிறகு துண்டு கொன்டு தலையை கட்டி 30 நிமிடம் அல்லது 1 மணிநேரத்திற்கு மணிநேரம் கழித்து தண்ணீர் கொண்டு கழுவவும். உங்கள் தலைமுடியை கழுவி பின்பு வினிகரில் பஞ்சையோ அல்லது காட்டன் துணி நனைத்து அதை ஸ்கேல்ப் முழுவதும் தடவி 15-20 நிமிடம் கழித்து தலையை அலம்பவும். ட்ரய்னெஸ் மூலம் ஏற்படும் அரிப்பு குறைய இதை செய்து வரவும். 3 கப் தண்ணீரில் கையளவு ரோஸ்மேரி சேர்த்து கொதிக்க விடவும். பிறகு சிறுந்தீயில் 30-45 மணிநேரம் வைக்கவும். பிறகு வடிகட்டி குளிரவிடவும். குளிர்ந்ததும் 1/2 கப் ஆப்பிள் சீடர் வினிகர், 10 ட்ராப் ரோஸ்மேரி மற்றும் பெப்பெர்மின்ட் ஆயில் சேர்த்து ஸ்பிரே பாட்டலில் போட்டு, அதை உங்கள் தலையில் தெளிக்கவும். ஸ்பிரேய பயன்படுத்தும் முன் உங்கள் கூந்தலை ஷாம்பு போட்டு அலசவும். ஸ்பிரே செய்து சிறுது நேரம் கழித்து தண்ணீர் கொண்டு கூந்தலை அலம்பவும். இது உங்கள் ஸ்கேல்ப்பை மாய்ஸ்சரைஸ் செய்து தலை அரிப்பிலிருந்து உங்களை காக்கும்.

பனானா/வாழைப்பழம் அவகேடோ மாஸ்க்

பனானா/வாழைப்பழம் அவகேடோ மாஸ்க்

உங்களின் அரிப்புக்கு ட்ரய்னெஸ் மற்றும் பொடுகு காரணம் என்றல் நீங்கள் உங்கள் கூந்தலுக்கும் ஸ்கேல்புக்கும் பழங்கள் கொண்டு மாய்ஸ்சரைஸரை தயாரித்து கொள்ளலாம்.வாழைப்பழம் உங்கள் ஸ்கேல்ப் அரிப்பை சரிசெய்வதோடு உங்கள் முடியை நிலைப்படுத்தும். வாழைப்பழத்தில் உள்ள நௌரிஷிங் மற்றும் மாய்ஸ்சரைஸிங் பண்பு பொடுகை தடுத்து அரிப்பிலிருந்து உங்களை காக்கும். இதே பண்புகள் அவகேடோவில் உள்ளதால் இரண்டும் உங்கள் ஸ்கேல்ப் ஹெலத்துக்கு நன்மை செய்யும்.

தேவையானவை:

வாழைப்பழம் - 1-2

பழுத்த அவகேடோ - 1

செய்முறை:

வாழைப்பழம் மற்றும் அவகேடோவை நன்கு மசித்து அதை உங்கள் முடியிலும் ஸ்கேல்பிலும் தடவவேண்டும். 30 நிமிடம் கழித்து ஷாம்பு கொண்டு கூந்தலை அலசவும்.

வெங்காயச் சாறு

வெங்காயச் சாறு

வெங்காயச்சாறு முடி வளர்ச்சியை தூண்ட பெரிதும் பயன்படுகிறது. மேலும் இது இந்தியாவில் ஆயுர்வேத மருந்தாக பயன்படுகிறது. இதிலுள்ள இயற்கை காம்போனென்ட்ஸ் ஹேர் போலீசில்ஸ் தூண்டவும் ஸ்கேல்ப்பை கிலேன்ஸ் செய்யவும் உதவுகிறது. மேலும் இது ரத்த ஓட்டத்தை அதிகரித்து தலைமுடியின் வேரை வலுவாக்குகிறது. இது உங்கள் ஸ்கேல்புக்கு வைட்டமின் C, வைட்டமின் B6, பொட்டாஷியம், மெக்னீசியம், ஜெர்மேனியும் மற்றும் சல்பர் போன்ற ஊட்டச்சத்தை தருகிறது.

தேவையானவை:

வெங்காயம் 1-2

வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து அதை உங்கள் ஸ்கேல்பில் நன்கு தேய்க்கவும்.

வெங்காயச்சாறை அப்படியே பயன்படுத்தாமல் நீங்கள் அதை ஒலிவ் ஆயில்லில் கலந்தும் பயன்படுத்தலாம். மசாஜ் செய்து அரை மணிநேரம் கழித்து ஷாம்பு கொண்டு கழுவவும்.

வாழைப்பழம் - ஹனி - வெங்காயச் சாறு மாஸ்க்

வாழைப்பழம் - ஹனி - வெங்காயச் சாறு மாஸ்க்

ஹனி ஒரு இயற்கை மாய்ஸ்சரைஸராக விளங்குகிறது. உங்கள் ஸ்கேல்பில் ஹனி பயன்படுத்துவதால் அது உங்கள் ஸ்கின் ட்ரய்னெஸ்ஸை ட்ரீட் செய்ய உதவும். மேலும் இதில் இயற்கை ஆண்டிபயாடிக் ப்ரொபெர்ட்டி உள்ளது. நீங்கள் வெங்காயச்சாறு மற்றும் வாழைப்பழத்தையும் இந்த மாஸ்க்கோடு சேர்த்து உபயோகிக்கலாம்.

தேவையானவை

பழுத்த வாழைப்பழம் - 1

வெங்காயச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்

ஹனி - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை

மசித்த வாழைப்பழத்தில் வெங்காயச்சாறு மற்றும் ஹனி கலந்து உங்கள் ஸ்கேல்பில் மாஸ்க் போட்டு 20 நிமிடம் கழித்து ஷாம்பு கொண்டு தண்ணீரில் தலையை அலசவும். இதை தினமும் அல்லது வாரத்திற்கு2-3 முறை செய்து வர தலை அரிப்பு நீங்கும்.

லாவெண்டர் ஆயில்

லாவெண்டர் ஆயில்

லாவெண்டர் ஆயில் தலை அரிப்பை சரிசெய்யும் அத்தியாவசிய எண்ணெயில் ஒன்று. லாவெண்டர் ஆயிலில் அபிசார்ப் செய்யும் சக்தி உள்ளது.

தேவையானவை

லாவெண்டர் ஆயில் - 10 ட்ரோப்

ஜோஜோபா ஆயில் - 1 டீஸ்பூன்

செய்முறை

லாவெண்டர் ஆயில் மற்றும் ஜோஜோபா ஆயில் கலந்து அதை 15 நிமிடம் உ ங்கள் ஸ்கேல்பில் மசாஜ் செய்யவும். பிறகு10 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி உங்கள் தலையை அலம்பவும்.

யூக்கலிப்டஸ் எண்ணெய்

யூக்கலிப்டஸ் எண்ணெய்

யூக்கலிப்டஸ் ஆயிலில் ஆன்டிசெப்டிக் மற்றும் அன்டிபியுங்கள் ப்ரொபெர்ட்டி இன்பிக்ஷன்னை எதிர்க்கும். லேசான சொரியாசிஸ் தொடர்புடைய சிம்ப்டம்ஸை விடுவிக்கும்.

தேவையானவை

வைட் வினிகர் - 3-4 டேபிள் ஸ்பூன்

யூக்கலிப்டஸ் எண்ணெய் - 1 டீஸ்பூன்

தண்ணீர் - 4-5 கப்

செய்முறை

வினிகர் , யூக்கலிப்டஸ் ஆயில் மற்றும் தண்ணீர் கலந்து அந்த கலவையை கொண்டு உங்கள் தலையை ஸ்கேல்ப் முழுவதும் அலச வேண்டும். பிறகு உங்கள் கூந்தலை மைல்டு ஷாம்பு கொண்டு அலசவும் .

நீம் ஆயில்

நீம் ஆயில்

நீம் ஆயில் ஸ்கேல்ப் அரிப்பை போக்க ஒரு ஆயுர்வேத மருந்தாக பயன்படுகிறது. நீம் ஆயிலில் உள்ள அன்டிபியுங்கள் ஆன்டிசெப்டிக் மற்றும் ஆன்டிபாக்டீரியால் ப்ரொபெர்ட்டி இன்பிலம்மாஷனை குணப்படுத்தவும் தடுக்கவும் பயன்படுகிறது.

தேவையானவை

நீம் ஆயில் - 4-8 ட்ராப்

கேரியர் ஆயில் (தேவைப்பட்டால், தேங்காய் அல்லது ஒலிவ் ஆயில்) - 1-2 டீஸ்பூன்

செய்முறை

நீம் ஆயிலை உங்கள் ஸ்கேல்பில் அப்படியே மசாஜ் செய்யலாம். அல்லது கேரியர் ஆயிலை கலந்தும் பயன்படுத்தலாம். 15 நிமிடம் கழித்து உங்கள் கூந்தலை மைல்டு ஷாம்பு கொண்டு அலசவும். இல்லையேல், நீங்கள் 2 - 3 சொட்டு நீம் ஆயிலை ஷாம்பூவில் கலந்தும் பயன்படுத்தலாம் .

எசன்ஷியல் ஆயில் மிக்ஸ்

எசன்ஷியல் ஆயில் மிக்ஸ்

நீங்கள் அனைத்து அத்யாவசிய எண்ணெயை கலந்து உங்கள் கூந்தலுக்கு தடவி வந்தால் அது உங்கள் கூந்தலுக்கு அதிக நண்மைகளை தரும். லாவெண்டர், யூக்கலிப்டஸ், மற்றும் நீம் ஆயில் கலந்து தடவி வர உங்கள் தலை அரிப்பு போகும். இது மூன்றை தவிர மற்ற அத்யாவசிய ஆயிலையும் பயன்படுத்தலாம். இது சோரியாசிஸ் மூலம் ஏற்படும் ஸ்கேல்ப் அரிப்பை நீக்க பயன்படுகிறது.

தேவையானவை

நீம் ஆயில் - 2-3 ட்ராப்ஸ்

டீ ட்ரீ ஆயில் - 4-5 ட்ராப்ஸ்

லாவெண்டர் ஆயில் - 1-2 ட்ராப்ஸ்

ரோஸ்மேரி ஆயில் - 2-3 ட்ராப்ஸ்

கேரியர் ஆயில் (ஒலிவ் அல்மோன்ட் வ்ஹீட்ட ஜெர்ம் அல்லது தேங்காய் எண்ணெய்) - 3 டீஸ்பூன்

செய்முறை

அனைத்து அத்யாவசிய எண்ணெய் கலந்து 1 டீஸ்பூன் எடுத்துக்கொள்ளவும்.

உங்களுக்கு பிடித்த கேரியர் ஆயிலை அதனுடன் கலந்து உங்கள் ஸ்கேல்பில் மெதுவாக மசாஜ் செய்யவும். உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப சில மணிநேரம் கழித்து மைல்டு ஷாம்பு கொண்டு கூந்தலை அலசவும்.

அரிப்பை குறைக்கும் குறிப்புகள்

அரிப்பை குறைக்கும் குறிப்புகள்

நீங்கள் ஒரே ப்ரோடக்ட்டை நீண்ட நாள் உபயோகித்து வந்தால் அதில் உள்ள கெமிக்கல் உங்கள் ஸ்கேல்பில் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது. அதனால் அவ்வப்போது உ ங்கள் தலை முடிக்கு பயன்படுத்தும் பொருட்களை மாற்றுவது நல்லது. குறிப்பாக ஷாம்பு, ஹேர் ஆயில். கண்டிஷனர், ஹேர் ஜெல், போன்றவற்றை மாற்றுவது அவசியம். புதிய ப்ரோடக்ட் பயன்படுத்த ஆரமித்தல் சில நாள் கழித்து அதை தொடர்வதா இல்ல வேற ப்ரோடக்ட்டுக்கு மறவாது என்று முடிவு செய்யவும். உங்கள் ஸ்கின் அல்லது ஸ்கேல்ப் சென்ஸிட்டிவ்வாக இருந்தால் நீங்கள் பேபி ஷாம்பு பயன்படுத்தலாம்.

உங்கள் ஷாம்பூவில் ஆல்கஹால் இருந்தால் உங்கள் ஸ்கினை ட்ரய் செய்து அரிப்பை ஏற்படுத்தும். ஷாம்பூவை அடிக்கடி மாற்றுவது நல்லதாக இருந்தாலும் அதில் ஆல்கஹால் இல்லாமல் வாங்குவது அவசியம். கெமிக்கல் காமியாக இருக்கும் ப்ரோடக்ட்டை வாங்குதல் நல்லது.

தலைக்கு குளித்த பின் நன்கு தலையை துவட்டவேண்டும். ஈர தலையை அப்படியே காட்டினாள் அது உ ங்கள் ஸ்கேல்பின் ரெசிடுவை அதிகரிக்கும். மேலும் இவ்வாறு செய்தல் பியூங்கள் இன்பிக்ஷனை உருவாக்கும்.

ரெகுலராக தலை சீவி வந்தால் அது ரத்த ஓட்டத்தை சீர்படுத்தும். மேலும் ரெகுலராக தலை சீவி வர, தலையில் இயற்கையாக ஏற்படும் எண்ணெய் தலையின் ஸ்கேல்ப் முழுவதும் பரவ உதவுகிறது. இதனால் நீங்கள் பொடுகு தொலையில் இருந்து விடுபடலாம். அதுமட்டுமின்றி இது அரிப்பையும் போக்கும்.

உங்கள் முகம் ஸ்கின் மட்டுமல்லாமல் உங்கள் தலையையும் வெயிலில் இருந்து காப்பது அவசியம். உங்கள் தலையை ஸ்கேர்ப், தொப்பி, அல்லது குடை கொண்டு மறைக்கவும்.

உங்கள் தலையை நீங்கள் சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால் அது பேன் அதிகரிப்புக்கு வழிவகுக்கும். பேனிலிருந்து விடுவிக்க அவ்வப்போது உங்கள் தலையை சுத்தம் செய்து நன்கு காயவைக்கவும். பேன் மருந்து பயன்படுத்தியும் நீங்கள் உங்கள் தலையிலிருந்து பேனை போக்கலாம்.

மோசமான உணவு பழக்கங்களும் ட்ரய் ஸ்கின்னுக்கு வழிவகுக்கும். உங்களுக்கு போதுமான அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் கிடைக்கவில்லை என்றாலும் ஸ்கின் ட்ரய்நெஸ் ஏற்படும். இதை தவிர உங்கள் உடலுக்கு வைட்டமின் மற்றும் ஜின்க் அவசியம்.

டயட் பிளான்

டயட் பிளான்

ஒமேகா 3 நிறைந்த எசென்ஷியல் ஃபாட்டி ஆசிட் உள்ள உணவுகளை உட்கொள்ளவும். ஒமேகா 3 நிறைந்த உணவு - சல்மான், மக்கெரேல், டுனா, சார்டின்ஸ் பிஷ். சைவ உணவுகளில், வால்நட் பிளக்ஸ் சீட்ஸ் பம்கின் சீட்ஸ் கனோலா ஆயில்.

முட்டை, வெண்ணெய் மற்றும் பிற பால் பொருட்கள், இனிப்பு உருளைக்கிழங்கு, ஸ்குவாஷ், கேரட், கேண்டலூப் மற்றும் பப்பாளி போன்ற வைட்டமின் ஏ நிறைந்த உணவுகள்.

இறைச்சி, கோழி, பால் பொருட்கள் மற்றும் முழு தானியங்கள், உருளைக்கிழங்கு, பீன்ஸ், இலை கீரைகள் சைவ உணவுகளும்.

வைட்டமின் சி உணவுகளில் சிட்ரஸ் பழங்கள், ஸ்ட்ராபெர்ரிகள், பச்சை மிளகுத்தூள், பிரஸ்ஸல்ஸ் முளைகட்டிய பயர் மற்றும் கீரை.

இறைச்சி, கோழி, கடல் உணவு, முழு தானியங்கள் மற்றும் நட்ஸ் போன்ற சிங்க் கொண்ட உணவுகள். உங்கள் தலைமுடி நகம் மற்றும் ஸ்கினை பராமரிக்க இந்த உணவுகள் அனைத்தும் அவசியம்.

உங்கள் உடலை ஹைட்ரடேட் ஆக வைத்துக்கொள்ளவும். உங்கள் உடலை ஹைட்ரடேட் ஆக வைத்துக்கொள்ள நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டால் அது ட்ரய் ஸ்கின் ட்ரய் ஸ்கேல்ப் போன்றவற்றிற்கு வழிவகுக்கும்.

அதிகப்படியான ட்ரய்னெஸ்ஸை குறைக்க வைட்டமின் E எடுத்துக்கொள்ளவும் .ஸ்கின் ஹெல்த்துக்கு ஓர் நல்ல ஊட்டச்சத்தாக விளங்குகிறது. இந்த வைட்டமின் காய்கறி எண்ணெய், கோதுமை, கொட்டைகள், விதைகள் போன்ற கொழுப்பு உணவில் உள்ளது. நீங்கள் வைட்டமின் E உள்ள ஷம்பூவையும் பயன்படுத்தலாம்.

இட்ச்சி ஸ்கேல்ப்பை தவிர்க்க ஸ்ட்ரெஸ்ஸை தவிர்க்கவும். ஸ்ட்ரெஸ்ஸால் முடி உதிர்வு ஏற்படுகிறது உ அதுவே தலை அரிப்புக்கு காரணமாக உள்ளது. ஸ்ட்ரெஸ் வராமல் தடுக்க நீங்கள் தினமும் யோகா, உடற்பயிற்சி, அரேபிக்ஸ், மெடிடேஷன், வாக்கிங், ஸ்விம்மிங் போன்றவற்றை செய்துவரலாம்.

முடியை மசாஜ் செய்யவும். எண்ணெய் மசாஜ் செய்வது ட்ரய் ஸ்கேல்புக்கு ஓர் நல்ல வைத்தியமாக அமைகிறது. வெதுவெதுப்பான எண்ணெய் கொண்டு செய்து மிகவும் நல்லது. இது உ ங்கள் முடிக்கும் ஸ்கேள்புகும் ஈரப்பதத்தை தரும். மசாஜ் செய்வது உங்கள் ஸ்கேல்பின் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கும்.

தலைக்கு சூடான தண்ணீர் பயன்படுத்த வேண்டாம். சூடான தண்ணீர் பயன்படுத்துவது தலையில் உள்ள ஈரப்பதத்தை நீக்கி ட்ரய்னெஸ்ஸை ஏற்படுத்தும்.

அடிப்படை சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். தலையை அலம்புவதோடு மட்டுமல்லாமல் தலையை நன்கு பராமரிக்கவும் வேண்டும். அதற்கு நீங்கள் உங்கள் தலையணை போர்வை போன்றவற்றையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அடுத்தவர்கள் பயன்படுத்தும் சீப்பையோ ப்ரஷையோ பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. மாறாக நீங்கள் உங்களுக்கென்று தனியாக பொருட்கள் வாங்கி பயன்படுத்தவும். மேலும் உங்களுக்கு அரிப்பு ஏற்படும் போது சொறியாமல் பொறுத்துக்கொள்வது நல்லது. இல்லையெனில் மெதுவாக சொரிய வேண்டும். வேகமாக சொரிவதனால் உங்கள் ஸ்கேல்ப் இன்னும் மோசமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

14 Fast Home Remedies for Itchy Scalp

An itchy scalp may be irritating for anyone, especially during the hot summers.
Story first published: Tuesday, April 24, 2018, 12:10 [IST]
Desktop Bottom Promotion