For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலங்காலமா தொடரும் மாமியார் மருமகள் சண்டை!! ஏன் வருகிறது?

சினிமாவில் காட்டப்படுவது போல மாமியார் மருமகள் பிரச்சனை மிகப் பெரிய தீர்க்க முடியாத பிரச்சனை எல்லாம் கிடையாது.

|

திருமண பந்தங்களில் மிகவும் முதன்மையான உறவு ஒன்று மாமியார் மருமகள். சினிமாவில் எப்போது சண்டை கோழிகளாகவே காட்டப்பட்ட மாமியார் மருமகள் உண்மையிலும் அப்படித்தான் இருக்கிறாரக்ளா? இருவருக்குள்ளும் நடைபெறும் மர்ம யுத்தங்களுக்கு யார் காரணம் என்பதை பார்க்கலாம். அது தீர்க்கவே முடியாத பிரச்சனையா அல்லது தீர்க்க மறுக்கிற பிரச்சனையா என்பதை கட்டுரையின் முடிவில் தெரிந்து விடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண்கள் :

பெண்கள் :

காலங்காலமாக பெண்கள் இன்னொருவரை சார்ந்து இருப்பவராகவே பழக்கப்படுத்திவிட்டோம். இளம் வயதில் அப்பா அல்லது சகோதரன் பாதுகாப்பான், பின்னர் கணவர்.

இப்படி ஒரு ஆணைச் சார்ந்தே பெண்ணின் வாழ்க்கை முழுவதும் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இதனால் உளவியல் ரீதியாகவே பெண் தனக்கு ஓர் தான் காப்பாளன் என்ற முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறாள். இன்றைய யுகத்தில் பெண்கள் என்ன தான் நவ நாகரிகமாக இருப்பவர்களானாலும் லட்சங்களில் சம்பாதிப்பவராக இருந்தாலுமே தங்களுக்கு ஒர் ஆண் துணை என்பதை கம்ஃபர்ட்டபிள் ஜோனாகவே பார்க்கிறாரக்ள்.

 மை டியர் மாமியார் :

மை டியர் மாமியார் :

பையன் பிறந்துவிட்டால் சந்தோசப்படும் பெண்கள் மகனுக்கு திருமண வயது வந்துவிட்டால் பெரும் சோகமாகிவிடுகிறார்கள்.

காரணம், இதுவரை தன்னுடைய பலம் தன் வருங்காலத்தை பாதுகாக்கும் அரணாக நினைத்திருந்த மகனை உரிமை கொண்டாட வந்துவிடும் மருமகள்.

இது உரிமை போராட்டமாக அணுக வேண்டிய அவசியமே இல்லை. இயற்கையான விஷயம் தான் இது என்பதை புரிந்து கொள்ளுங்கள். திருமண வயதில் மகன் கொடுக்கும் முன்னுரிமைகளை எல்லாம் பெரிது படுத்தி கவலைப்படாதீர்கள். உங்களுக்கான இடம் எப்போதுமே மகன் மனதில் இருக்கும். அந்த இடம் எப்போதும் மாறாது. மருமகள், கிட்டதட்ட 20 வருடங்கள் வாழ்ந்த சூழலை, வாழ்க்கையை விட்டுவிட்டு புதிய இடத்திற்கு வந்திருக்கிறாள். புதிய இடத்தை ஏற்றுக் கொள்வதற்கான கால அவகாசத்தை கொடுத்திடுங்கள்.

மருமகள் வந்ததுமே உங்களது தினசரி வேலைகளில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்ற உங்களது எதிர்ப்பார்ப்புகளை விட்டுவிடுங்கள்.

நம் விட்டில் புதிதாக பிறக்கும் குழந்தை உடனடியாக உங்களுக்கு பிடித்தமாதிரி உருமாறி நடந்து வருகிறதா என்ன? இல்லையே... தினம் தினம் அதற்கு சொல்லிக்கொடுத்து தவறுகளை மன்னித்து தட்டிக் கொடுத்தால் சில வருடங்களில் உங்கள் வீட்டுப் பிள்ளையாய் மாறிடும் தானே.

Image Courtesy

நினைவில் நிற்க :

நினைவில் நிற்க :

அதே தான் இங்கேயும். என்ன இங்கே இருப்பது இருபது வயதுக் குழந்தை. திருமணம் செய்து கொண்ட நாளின் முதலே பொறுப்புகளை தூக்கி மருமகள் தலையில் வைக்காதீர்கள். தட்டிக் கொடுங்கள், உரிமையாய் பழகுங்கள்.

இன்னொரு வீட்டுப் பெண், குறைந்த வரதட்சனை, சொத்து இல்லை என்ற சங்கதிகளை எல்லாம் மறந்துவிட்டு உங்களுக்கு மிகவும் பிடித்தமான மகனின் மனைவி என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மருமகளைப் பற்றிய முன் அபிப்பிராயங்களை தவிர்த்திடுங்கள், குடும்ப வழக்கங்கள், நடைமுறைகள், பாரம்பரியமாக நீங்கள் கடைபிடித்து வரும் விஷயங்கள் என்றால் முன்னரே மருமகளுடன் பகிர்ந்து கொள்ளுங்கள், கேட்கட்டும் என்று காத்திருந்து தவறிய பின்னர் கடிந்து கொள்ள வேண்டாம்.

எதிர்காலம் குறித்தும், வருமானம் குறித்தும் சதா சர்வ காலமும் பயந்து கொண்டே இல்லாமல் மகனுடன் இயைந்து வாழுங்கள். முயற்சித்துப் பாருங்கள் நிச்சயம் மாற்றம் தெரியும்.

Image Courtesy

மகளே மருமகளே! :

மகளே மருமகளே! :

புதிய சூழலுக்கு ஏற்ப மாற வேண்டியது அவசியம். உங்களுக்கு பிடிக்காத விஷயங்கள் அங்கே நடந்தாலும் நாசூக்காக வெளியேறப்பாருங்கள் அதை விடுத்து வீம்பாக நினைப்பதே நடந்தேற வேண்டும் என்று இருக்காதீர்கள்.

உங்களின் கணவர் வீட்டினர் யாரும் எதிரிகள் கிடையாது. உங்களுக்கு கணவர் மீது எவ்வளவு ப்ரியங்கள் இருக்கிறதோ அதேயளவு அவரை இப்போதைய நிலைக்கு உயர்த்திய அவரது குடும்பத்தினர் மீதும் இருக்கட்டும்.

ஒரே நாளில் கணவர் வளர்ந்துவிடவில்லை என்பதையும் உணருங்கள்.

திருமணம் ஆகிவிட்டால் கணவர் முழுவதும் தனக்கே சொந்தம் என்று குழந்தைகள் பொம்மைக்கு சண்டையிடுவது போல சிறுபிள்ளைத்தனமாக யோசிக்காதீர்கள்.

கணவரின் எண்ணங்களுக்கு, விருப்பங்களுக்கு முன்னுரிமை கொடுக்கட்டும். தனக்கு பிடித்தமான அம்மாவிடம் காபி வாங்கி குடிப்பதாலோ அம்மாவுக்கு பிடித்த சேலை வாங்கிக் கொடுப்பதாலோ ஒன்றும் உங்களுக்கான அன்பு குறைந்திடாது.

Image Courtesy

அன்பு செய்க :

அன்பு செய்க :

புதிய நட்புகள் கிடைத்திருக்கிறது என்று அனைவரையும் ஒன்றாக அரவணைக்க கற்றுக் கொள்ளுங்கள். நிச்சயமாக எல்லாரையும் திருப்தி படுத்த முடியாது தான் ஆனால் சங்கடங்களை தவிர்க்கலாம்.

நீங்கள் கணவர் என்ற புதிய உறவு கிடைத்திருக்கும் உற்சாகத்தில் காதலில் திளைத்திருக்கும் அதே வேளையில் தான். இதுவரை தனக்கு மட்டுமே உரிமையாயிருந்த, தன் மீது பாசம் பொழிந்த மகன் இன்னொருவளுக்கு சொந்தமாகிறான் என்கிற வருத்தங்கள் உங்களின் மாமியாருக்கு இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம்.

அன்பு செலுத்துங்கள் கணவரை மட்டுமல்ல.. கணவரையும் கணவரின் குடும்பத்தாரையும்.

Image Courtesy

தவிக்கும் மகனே :

தவிக்கும் மகனே :

வெவ்வேறு எல்லைகளில் நின்று கொண்டிருக்கும் பெண்களுக்கு நடுவே சிக்கியிருக்கும் ஆண், இச்சூழலை சமாளிப்பது ஒன்றும் பெரிய வித்தையல்ல.

மாறி மாறி புகார்கள் வந்தால் உடனடியாக எமோசனலாகி முடிவெடுக்காதீர்கள். உங்களுக்கான முன்னுரிமைகள் எது என்று தீர்க்கமாக முடிவெடுங்கள்.

முடிந்தவரையில் ஒளிவுமறைவுகளைத் தவிர்த்திடுங்கள். பொய்களை சொல்லி சிக்குவதை விட உண்மையைச் சொல்லி வரும் விவாதங்களை சந்தியுங்கள்.

மனைவி வந்துவிட்டால் அம்மாவின் இடம் குறைந்திடாது என்பதை புரிய வையுங்கள். நீங்கள் பேலன்ஸாக இருப்பது அவசியம்.

வாழ்க்கை வசப்படட்டும்! அன்பு வாழ்த்துக்கள்.... மாமியார் மருமகள் தீர்க்க முடியாத பிரச்சனையல்ல தீர்க்க மறுக்கிற பிரச்சனை தான்.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: marriage love
English summary

Relationship between mother in law and Daughter in law

Reasons here that Why do Mother in law and Daughter in law fight with each other
Story first published: Wednesday, July 19, 2017, 17:36 [IST]
Desktop Bottom Promotion