‘நமக்கு குழந்த வேண்டாம்...’ மனைவி சொன்ன காரணத்தால் அதிர்ந்த கணவன்!

Posted By:
Subscribe to Boldsky

நிஜமாத்தான் சொல்றீயா?

ஆமா.... நான் முடிவு பண்ணிட்டேன். அதுல நான் உறுதியா இருக்கேன்.உறுதியாக இருக்கிறேன் என்று சொல்லும் போதே உடைந்து அழ ஆரம்பித்து விட்டேன் .

சரி சரி விடு... டென்சன் பண்ணிக்காத பேசலாம் என்று என்னை சமாதானப்படுத்தினான். மாமா நிஜமா எனக்கு வேண்டாம். எனக்கு ஏன்...

Reason why married girl refused to get pregnant

சரி சரி வேண்டாம். அத என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம். என்று சொல்லி படுக்கச் சொன்னான் .

மூச்சு வாங்க தேம்பித் தேம்பி அழுது கொண்டே அவன் மடியில் படுத்துக் கொண்டேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டியூசன் :

டியூசன் :

அம்மா... எப்ப ரெடியாகும். டெய்லி இப்டியே லேட் பண்ணு அப்றோம் எல்லார் முன்னாடியும் நான் தான் போய்த்திட்டு வாங்கணும். டியூஷனுக்கு கிளம்பும் அவசரத்தில் அரக்க பரக்க கிளம்பிக் கொண்டிருந்தேன்.

படுத்தி எடுக்காத ஐஞ்சு நிமிஷம் லேட்டான ஒண்ணும் குறஞ்சு போய்டாது. இந்தா பிடி.... பொறுமையா குடி..சுட்டுக்காத

டம்ப்ளரின் நுனி வரை பால் தததும்ப ததும்ப கொடுத்திருந்தாள். ரெண்டு சொட்டு கம்மியா ஊத்தினாதான் என்னம்மா.... எப்டி குடிப்பேன் அதுவும் ஃபுல்லா நொறையா இருக்கு.

நொட்ட சொல்லாம குடிச்சுட்டு கிளம்பு என்று உள்ளே சென்றுவிட்டாள். முழு டம்பளர் பாலையும் குடித்து விட்டு சைக்கிளின் முன்னால் இருந்த கூடையில் மேக்ஸ் புக்கையும் நோட்டியும் வைத்து சைக்கிளை எடுத்தேன் சத்தம் கேட்டு உள்ளிருந்து ஓடி வந்து நைட்டு அப்பா வருவாரு நீயா வந்துராத என்றாள் அம்மா.

ரெண்டு சந்து இதுக்கு துணையா ஏன்மா இப்டியிருக்க என்று அழுத்துக் கொண்டே சைக்கிளை மிதித்தேன்.

குறுஞ்செய்தி :

குறுஞ்செய்தி :

வகுப்பில் உட்கார்ந்திருந்த போது பாடத்தை கவனிக்க பிடிக்காமல் மொபைல் எடுத்து மேசைக்கு கீழே வைத்து வாட்சப் பார்க்க ஆரம்பித்தேன். டியூசன் நண்பர்கள் இணைந்திருக்கும் க்ரூப்பிலிருந்து ஒரு குறுஞ்செய்தி.

வரிசையாக சில பெண் பால் பெயர்கள் ஐந்து பெயர்களை கடந்ததுமே இந்தப் பெயர்களை எல்லாம் எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே என்று தொடர்ந்தேன்... ஸ்க்ரோல் செய்ய.. ஸ்க்ரோல் செய்ய பெயர்கள் வந்து கொண்டேயிருந்தது மெல்ல மெல்ல யூகித்தேன்.

நான்கைந்து முறை ஸ்க்ரோல் செய்து கீழே வந்தேன் எல்லாரும் பல்வேறு காரணங்களால் படுகொலை செய்யப்பட்டவர்கள்.

ச்ச... இவ்ளோ பொண்ணுங்களா என்று வருத்தத்துடன் பெயர்களை மீண்டும் மீண்டும் வாசித்தேன். எத்தனைப் பெயர்கள், எத்தனைக் கனவுகள் இருந்திருக்கும். ஏழு வயதுக் குழந்தையிலிருந்து பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்டிருக்கிறாள்.

பெண்கள் :

பெண்கள் :

காதலிக்கவில்லை, திருமணத்திற்கு சம்மதிக்கவில்லை, என்னை எதிர்த்து பேசினாள், மிரட்டினாள்,திமிறாக நடந்து கொண்டாள் என்று எத்தனையோ காரணங்கள், இந்த நேரம் தான் இந்த இடம் தான் என்று ஏதுமில்லை

வீடு, அலுவலகம், ஊர் எல்லை,வகுப்பறை, ரயில் நிலையம், வகுப்பறையில் உட்கார்ந்திருந்த போது வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்த போது, பஸ்ஸுக்காக காத்திருந்த போது, அலுவலகம் முடிந்து திரும்பிய போது, பக்கத்து வீட்டுக் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்த போது என...

விசித்திரமாக அவள் இப்படிச் செய்ததனால் தான் இப்படி நடந்தது என்று நம்மால் அறுதியிட்டு கூற முடியாத அளவுக்கு எல்லா இடங்களிலும் எல்லா நேரத்திலும் நடந்திருக்கிறது.

ஷேரிங் :

ஷேரிங் :

இதை யோசித்துக் கொண்டிருக்கும் போதே பெல் அடிக்கும் சத்தம் கேட்டது. எல்லாரும் எழுந்து கிளம்ப ஆரம்பித்து விட்டனர். நானும் கிளம்புகிற அவசரத்தில் எழுந்து கொண்டேன். அவசரமாக கிளம்ப வேண்டும். சீக்கிரம் சென்றால் தான் பார்க்கிங் ஏரியாவிலிருந்து சீக்கிரம் வெளியே வர முடியும். கொஞ்சம் தாமதமானால் அங்கே பயங்கர கூட்டமாகிவிடும் வண்டியை தள்ளிக்கொண்டு வெளியே வருவதற்குள்.... யப்பா என்று நினைத்தபடி மேசையில் கிடந்த என் உருப்படிகளை எல்லாம் உள்ளே எடுத்து வைத்துக் கொண்டிருந்தேன்.

மனதில் நான் வாசித்த பெயர்களும் அவர்கள் மரணித்த காரணங்களும் ஓடிக் கொண்டேயிருந்தது. என்ன தப்பு பண்ணாங்க... கைது செய்யப்பட்டவர்கள், குற்றவாளி என்று தெரிந்தும் அதிகார பலத்தால் வெளியே சுற்றிக் கொண்டிருப்பவர்கள், உண்மைக்குற்றவாளி இன்னும் யாரென்றே தெரியாதவர்கள், இதெல்லாம் எங்களுக்கு சாதரணம் என்று ஜாமினில் வெளியே வந்துவிட்டவர்கள்.... அவ்வளவு தானா?

எதாவது நாம் செய்தாக வேண்டும்... என்னசெய்ய என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அறையின் வெளியில் நின்று கொண்டு என் தோழி விரைந்து வரச் சொல்லி அவசரப்படுத்தினாள் கிளம்புகிற வேகத்திலும் நான் படித்த மெசேஜை காப்பி செய்து முகநூலில் ஷேர் செய்தேன் . மறக்காமல் நான்கைந்து ஹேஷ்டேக்களும் சேர்ந்தே பகிர்ந்தேன்.

வாட்சப்பில் என் டிபியை மாற்றினேன். ஊரே பரபரப்பாக பேசிய கொலைசெய்யப்பட்ட பெண்ணின் படத்தை என் முகப்பு படமாக வைத்துக் கொண்டேன்.

நேர்காணல் :

நேர்காணல் :

சொல்லும்மா.... இண்டர்வியூ முடிஞ்சது மெயில் பண்றேன்னு சொல்லியிருக்காங்க இன்னக்கி நைட் கிளம்பிடுவேன் இங்கிருந்து ட்ரைன் ஏறி எக்மோர் போய் பார்க் போய் ட்ரைன் மாறணுமாம் என்று பேசிக்கொண்டிருக்கும் போதே அங்கே திடிர் பரபரப்பு என்னை இடித்துக் கொண்டு நான்கைந்து பேர் அடித்துப் பிடித்து ஓடுகிறார்கள்.

என்னாச்சு.... ஆக்ஸிடண்ட்டா என்று திரும்ப எக்கி எக்கி பார்க்கிறேன் ஒன்றும் தெரியவில்லை எல்லாரும் வாயை மூடிக்கொண்டு அதிர்ச்சியான ரியாக்‌ஷன் மட்டும் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.

கிளம்பிய புகை :

கிளம்பிய புகை :

இரும்மா... கூப்டுறேன் என்று சொல்லி போனை வைக்க ஒரு பெண் அலறும் சப்தம் கேட்டது. சுற்றி நின்றிருந்தவர்கள் எல்லாம் தெரித்து சிதற ஆரம்பித்தார்கள். ஆட்கள் ஆங்காங்கே சிதற்கும் கேப்பில் சம்பவம் நடக்கும் இடத்திலிருந்து இருபதடி தள்ளி நின்றிருந்த நானும் எட்டிப் பார்த்தேன்.

ஒரு பெண் தரையில் கிடந்து புரள்கிறாள் அவள் உடலிலிருந்து புகையாய் வந்து கொண்டிருக்கிறது.

Image Courtesy

அதிர்ச்சி :

அதிர்ச்சி :

பக்கத்துல யாருமே போலத்தெரியுமா... உடனே ஹாஸ்பிட்டலுக்கு கொண்டு போயிருந்த அந்தப் பொண்ண காப்பாத்தியிருக்கலாம்ம்மா... நானும் அங்க தான் இருந்தேன் ஆனா பயத்துல எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல தலை சுத்திருச்சு...

அந்தப் பொண்ணு சாவுக்கு நானும் ஒரு காரணமாம்மா.... அம்மா மடியில் படுத்துக் கொண்டு அழுது கொண்டே புலம்பிக்கொண்டிருந்தேன்.

சாலை விபத்துக்கள் :

சாலை விபத்துக்கள் :

ஒண்ணுமில்ல ஒரு நாளைக்கு ரோட்ல எத்தனையோ ஆக்ஸிடண்ட் நடக்குது அதுக்கு ரோட்ல போறவன் தான் காரணம்னு சொல்ல முடியுமா நீயா லூசு மாதிரி எதாவது பேசாத. அவ விதி முடிஞ்சது அவ போய்ட்டா

ஐய்ய்யோ... அம்மா அது கொலை என் கண்ணு முன்னாடி ஒருத்தன் ஆசிட்ட மூஞ்சிலயே ஊத்திட்டான் கிழே புரண்டு அலறிச்சு முகத்துல இருந்து அவ்ளோ பொகையா வந்துச்சு தெரியுமா என்று அழுதேன். அதன் பின்னர் ஒரு வாரம் காய்ச்சல் இருந்தது. அந்த நினைப்பு வாரமல் தவிர்க்க பல முயற்சிகள் எடுத்தேன்.

அத்தை :

அத்தை :

திருமணம் முடிந்து இருவரும் வேலைக்கு சென்றுகொண்டிருக்கும் பிஸியான கணவன் மனைவிகளில் நாங்களும் இணைந்து கொண்டோம்.

அவ்வப்போது மாமியார் பார்த்து கேட்க தயங்கி நிற்க நானும் சாதுர்யமாக தவிர்த்து விடுவேன். அவர்களின் கணக்குப் படி எனக்கு இந்நேரம் குழந்தை பிறந்து ஒரு வயது நான்கு மாதங்கள் ஆகியிருக்க வேண்டும்.

கணவன் :

கணவன் :

அன்று இரவு படுக்கச் செல்லும் போது மாமாவிடம் கேட்டேன்... ஏன் எல்லாரும் குழந்த வேணும் வேணும்னு சொல்றாங்க...

எனக்கு அதுல கொஞ்சம் கூட விருப்பமேயில்ல..

என்ன அவங்களுக்கு தனியா ஒரு லைஃப் செட் பண்ணி கொடுக்கணும். அவ்ளோ பொறுப்பு எல்லாம் நான் கிடையாது அது தான ரீசனா சொல்லப்போற என்றான்.

இல்ல ஒரு அம்மாவா எவ்ளோ தூரம் என் குழந்தைக்கு பாதுகாப்பு என்னால கொடுக்க முடியும்னு நினைக்கிற?

புரியாமல் விழித்தான்.. என்ன சொல்ற

குழந்தை வேண்டவே வேண்டாம் :

குழந்தை வேண்டவே வேண்டாம் :

பொண்ணோ பைய்யனோ பொண்ணா இருந்தா விக்டிமா இருக்கணும் பையனா இருந்தா குற்றவாளியா நிக்கணும். நான் என் குழந்தைய ஒழுங்கா வளத்துப்பேன், ஆப்போசிட் ஜெண்டருக்கு மதிப்பு கொடுக்கணும்னு சொல்லித்தரன்னே வச்சுக்கிட்டாலும் இந்த சொசைட்டி சும்மா இருக்காது.

அவன் பாக்குறது, கேக்குறது எல்லாமே அம்மா வீட்ல சொல்லிக் கொடுத்தது ஒண்ணு இங்க நடக்குறது வேறாய இருக்கேன்னு தோணும். அவன் வாழ்நாள்ல ஒரு நாளாவது இப்டி பண்ணா என்ன ஒரு பொண்ணால என்ன பண்ண முடியும் நம்மலும் ஒருவாட்டி ட்ரை பண்ணி தான் பாப்போமேன்னு மனசளவுல கூட நினச்சுறக்கூடாது.

உனக்கு நீதான் சேஃப்டினு என்ன தான் நான் சொல்லி கொடுத்தாலும் எல்லா இடத்துலயும் எல்லா நேரத்துலயும் தூங்குற நேரம் முதற்கொண்டு உன்ன பாதுகாப்பா வச்சுக்குறது உன் பொறுப்புனு என் பொண்ணுக்கு பாரத்த கொடுக்க எனக்கு புடிக்கல.

மறுபடியும் சொல்றேன் நமக்கு குழந்த வேண்டாம்.

அழுத்தம் திருத்தமாக சொன்னதும் ஒரு நிமிடம் அதிர்ந்தே தான் விட்டான்.

நிஜமாத்தான் சொல்றீயா?.....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reason why married girl refused to get pregnant

Reason why married girl refused to get pregnant
Story first published: Thursday, October 26, 2017, 18:33 [IST]
Subscribe Newsletter