For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெற்றோர் அனுமதியுடன், கட்டாய திருமணத்தில் பறிபோன கற்பு - My Story #042

பாதுகாத்த கற்பு, கட்டாய திருமணத்தில் பறிபோனது - பெற்றோரே கொஞ்சம் பெற்ற மகளின் உணர்வுகளை மதியிங்கள்!

|

- இந்த சமூகத்திற்கு, பதிக்கப்பட்ட ஒரு மகள் எழுதிய கடிதம்...

இந்த சாலை எளிமையானதல்ல. எனக்காக யார் காத்திருப்பார் என்றும் நான் அறிவேன். கடைசியில் ஒரு நாள் நானும், நீயும் அந்நியர்களாக பிரிவோம் என்பதும் நான் அறிவேன்.

நாம் இருவரும் ஒருவரை ஒருவர், "நீ தான் என்னை அதிகம் புண்படுத்துகிறாய்" என எண்ணி வருகிறோம். எனக்கு தெரியும், ஏனெனில் நான் வேறு ஒருவனை காதலிக்கிறேன். எனது மீத வாழ்வை அவனுடன் வாழ விரும்புகிறேன்.

அவன் , கடவுள் நம்பிக்கை அற்றவன். இப்போது நானும் அவனை போலவே கடவுள் நம்பிக்கை அற்று இருக்கிறேன். இனிமேல் நான் சிறப்பான உறவில் ஈடுபட போகிறேன், நான் விரும்புவதை உண்டு, உடுத்தி என் வாழ்வை நகர்த்த போகிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகான வீட்டில்...

அழகான வீட்டில்...

நாங்கள் ஒரு அழகான வீட்டில் வாழ்வோம். அதில் எங்கள் இருவருடன் காதலும் அதிகம் நிரம்பி இருக்கும். வீட்டின் சுவர்கள் எல்லாம் எங்களுடைய புகைப்படங்கள் மாட்டி வைத்திருப்போம். ஒன்றாக உணவருந்துவோம், ஒன்றாக உறங்குவோம்.

அதிகாலை எழும் போது அவனது கைகளை அணைத்து நான் படுத்திருப்பேன். அவனது வலிமையான தோள் என்னை இலகுவாக அரவணைத்திருக்கும். அவன் அனைத்தையும் கவனமாக செய்வான்.

அழுதான்...

அழுதான்...

எனக்கு முதன் முதலில் ஒற்றை தலைவலி வந்து நான் வலியில் கதறிய போது, அவன் எனக்காக அழுதான். நான் வாந்தி எடுத்த பிறகு, எனது கூந்தலை வருடிக் கொடுத்து குளிர் உணராமல் செய்தான். எனது நெற்றியும், புருவத்தை இருபுறமும் நீவிக் கொடுத்தான். எனது வலியை மெல்ல, மெல்ல அவனதுவிரல்களால் வெளியே எடுத்தான்.

சமீபத்தில் தான் எனது உடை அலமாரியில், எனது கைப்போயில் நான் ஒன்று கண்டேன். எனக்கு வலி எடுக்கும் போது நான் உட்கொள்ள வலிநிவாரணி மாத்திரைகளை முன்னேற்பாடாக வைத்திருந்தான். எனக்கு தலைவலி என்றதும், நூறு மைல்கள் தனி ஆளாக கார் ஒட்டி வந்து என்னை பத்திரமாக வீடு சேர்த்தான்.

வலியையும், சோகத்தையும்...

வலியையும், சோகத்தையும்...

என்னுள் இருந்த வலிகளை மட்டுமல்ல, சோகத்தையும் அவன் வெளியேற்றினான். எனக்காக அவ்வப்போது சாக்லேட், சிப்ஸ், சீஸ், ட்ரிங்க்ஸ் என ஏதாவது வாங்கி வருவான். எனக்காக இத்தனை செய்யும் அவனிடம், எனக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதை நான் கூற வேண்டும்.

நாங்கள் இருவரும் முதல் முறையாக விடுமுறை கழிக்க வெளியூர் செல்லவிருக்கிறோம். ஒரு இடத்தின் உச்சியில் நாங்கள் இருவரும் அமர்ந்திருந்து, அவனது கைகளை நான் தழுவி பிடித்து, அடக்க முடியாத எனது துக்கத்தை அவனிடம் கூற வேண்டும்.

ஒரு பெண்ணை இப்படியும் ஓர் ஆண் பாதுகாப்பானா என்பது என் வாழ்வில் இப்போது தான் முதல் முறை உணர்கிறேன். இந்த ஒற்றை காரணம் தான் அவனை அதிகம் நேசிக்க என்னை மிகுதியாக தூண்டியது.

தனித்துவமானவன்!

தனித்துவமானவன்!

என் வாழ்வில் அவனது இடம் மிகவும் தனித்துவம் பெற்றது. ஆயினும், என் மனம் இவனை உன்னால் ஏற்க முடியாது என உள்ளூர கத்தியது. இவன் என்னை மிகவும் சந்தோஷமாக பார்த்துக் கொள்கிறான். எல்லைகளற்று, நிபந்தனைகள் இன்றி என்னை அளவுகடந்து நேசிக்கிறான்.

இவன் எனது சருமத்தின் நிறத்தையோ, என் மேல் உடுத்தப்பட்ட மத போர்வையையோ பொருட்படுத்தவில்லை. ஒருவேளை என் மதத்திலேயே இவன் பிறந்திருந்தால், இவனை காதலிக்க வாய்ப்பு கிடைத்திருக்கும். அப்படி இவனை நான் நேசித்திருந்தால், அனைவரும் என்னை மிகவும் லக்கி என கூறியிருப்பார்கள்.

அவமானம்!

அவமானம்!

இவன் என் மீது செலுத்திய அன்பில் சொச்சம் கூட எனது வீட்டார் என்மீது செலுத்தவில்லை என்பதே எனது வருத்தம். இப்படி ஒரு காதல், அன்பு, அக்கறை எனக்கும், என் வாழ்க்கை பயணத்திற்கும் மிகவும் புதியது. நான் செய்யப்போகும் காரியம் என்பது குடும்பத்தாருக்கு அவமானத்தை, தலைகுனிவை ஏற்படுத்தலாம். ஆனால், வேறு என்ன செய்வது என எனக்கு தெரியவில்லை.

இதை தவிர வேறு வழியில்லை. இல்லையேல் இந்தியாவிலேயே நான் தற்கொலை செய்துக் கொண்டிருக்க வேண்டும். ஆனால், அப்படி நான் செய்யவில்லை. உடல் ரீதியாக, மன ரீதியாக பல வன்கொடுமைகளை கடந்து வந்தவள் நான்.

கட்டாய திருமணம்!

கட்டாய திருமணம்!

கட்டாய திருமணம் செய்து வைத்தார்கள். என் குடும்பத்தாருக்கு கௌரவம் தான் முக்கியமாகப்பட்டது. எனக்காக அவர்கள் தேர்வு செய்த ஆண் எப்படிப்பட்டவன், என்னை எப்படி பார்த்துக் கொள்வான், அவனை எனக்கு பிடித்துள்ளதா என்பது குறித்தெல்லாம் அவர்களுக்கு அக்கறையே இல்லை. பெற்ற மகளின் சந்தோஷத்தை கூட அறிந்துக் கொள்ள முடியாத பிறவிகள் எனது வீட்டார்.

எனக்கான பார்வையை சிறைப்பிடித்தனர். என்னை கட்டிக் கொண்டவனுக்கு என்னை அடிக்க மட்டுமே தெரியும். அவனுக்கு வேறு எந்த வேலையும் இல்லை. எனக்காக, நான் விரும்புவதை செய்துக் கொடுக்கவும் முடியாதவன். இப்படி ஒருவனை நான் கனவிலும் கண்டதில்லை.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

எனக்கான கணவன் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. நான் வளர்க்கப்பட்ட விதத்தில் மனைவி என்றால் சமைத்து போட வேண்டும், அவனுடன் படுத்துறங்க வேண்டும். அவனையும், அவனது குடும்பத்தையும் பேணிகாக்க வேண்டும். எனது பதின் வயதில் திருமண வாழ்வின் மீதான எனது பார்வை இவ்வளவு தான்.

எனது மணவாளன் என் வாழ்வில் அமையும் சிறந்தவனாக இருக்க வேண்டும் என எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். எனது மொத்த நம்பிக்கையும் சுக்குநூறாகி போனது. அவனது கோபம், பழி வார்த்தைகள், கையாள தனத்திற்கு, என் உடலும், மனதும் ரணமாகி போனது. மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன்.

உடலுறவு!

உடலுறவு!

அனைவரும் தாம்பத்தியத்தை கொண்டாடி மகிழும் போது, என் துணை என்னிடம் இருந்து அதை வலுக்கட்டாயமாக கற்பை பறித்துக் கொண்டான். அவனிடம் இருந்து அன்பு, காதல், அக்கறை, அரவணைப்பு என எதையும் நான் உணரவில்லை. ஒரு சிறிய நகைச்சுவை கூறி கூட அவன் என்னை சிரிக்க வைத்ததில்லை.

இந்த வாழ்க்கை என் மீது என்னை அதிக கோபம் கொள்ள வைத்தது. எனது சோகம் பன்மடங்கு அதிகரித்தது. என் பெற்றோரே என்னை ஒரு மிருகத்திடம் விலை கொடுத்து விட்டு சென்றனர். எனக்கான சுதந்திரம் என்பது வெறும் கானல் நீராக இருந்த தருணம் அது.

செல்கிறேன்...

செல்கிறேன்...

என்னுடன் அவன் அமர்ந்து உண்டதும் இல்லை, சோஃபாவில் நாங்கள் செல்லமாக கட்டியணைத்துக் கொண்டதும் இல்லை. நான் மாதவிடாய் நாட்களில் இருக்கும் போது அவனுக்கு மூன்று வேலை வாய்க்கு ருசியாக சமைத்துப் போடா வேண்டும்.

போதும், இவை அனைத்தும் போதும். நான் செல்கிறேன். எனக்கான நபருடன் வாழ செல்கிறேன். உங்களை நான் வெறுக்கவில்லை. ஆனால், என் மனம் இனிமேலும் இதை தாங்கிக் கொள்ளது. எனக்காக ஒருவன் காத்திருக்கிறான். அவனிடம் என்னை ஒப்படைக்க போகிறேன். அவன் என்னை பத்திரமாக பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கையில்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Story: I was Forced into Marriage and Had My Virginity Snatched Away!

Real Story: I was Forced into Marriage and Had My Virginity Snatched Away!
Desktop Bottom Promotion