For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பொண்ணு தனியா இருக்கேன்னு சொல்லிட கூடாதே...ஹாலிவுட் பிரபலம் கேள்வி! Mystory #107

திருமண வாழ்க்கையில் கொடுமைகளை அனுபவித்து இன்றைக்கு ஹாலிவுட் உலகின் முதல் ஸ்டெண்ட் செய்யும் பெண்மணி என்னும் சாதனை படைத்த பெண்ணின் கதை.

|

பெண்களின் வாழ்க்கை ஆரம்பித்து யாரோ ஒருவரின் விருப்பங்களுக்கு ஏற்றபடி உருமாறி குடும்பத்திற்காக, கணவனுக்காக என்று இன்னொருவரின் நிழலில் தான் வாழ வேண்டும் என்ற நிர்பந்தம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

சிறு வயதிலேயே அம்மா இறந்து விட்டார்கள், வறுமை, பாலியல் வன்புணர்வுத் தொல்லை, கணவனின் கொடுமை, செக்ஸ் டார்ச்சர் இத்தனைக்கும் நடுவில் இரண்டு குழந்தைகள் சாதரணமான ஒரு பெண் எப்படி இதனையெல்லாம் எதிர்கொண்டிருப்பாள் என்று தெரியாது ஆனால் கீதா டாண்டன் மிகவும் துணிச்சலாக எதிர்கொண்டார்.

From Marital Rape Victim To Hollywood Stunt woman

Image Courtesy

இன்று இவர் பாலிவுட்டிலேயே மிகப் பிரபலமான பெண் ஸ்டண்ட் மாஸ்டர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
இளமை :

இளமை :

கீதா நான்கும் வகுப்பு படிக்கும் போதே அம்மா இறந்து விட்டார்கள். அப்பாவுக்கு நிலையான வருமானம் இல்லை, அதனால் கீதா படிப்புத் தொடர முடியவில்லை. சிறுவயதிலேயே துருதுருவென்று ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்த கீதாவை காலாகாலத்தில் கல்யாணம் பண்ணி வச்சாதான் அடங்குவா என்று சொல்லி பதினைந்து வயதில் அவரை விட ஒன்பது வயது மூத்தவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது.

Image Courtesy

கணவன் எனும் மிருகம் :

கணவன் எனும் மிருகம் :

வீட்டில் வறுமையிருந்தாலும் துள்ளித்திரிந்து சந்தோசமாக கடந்த நாட்கள் எல்லாம் இனி கனவில் மட்டுமே நினைக்க வேண்டும். கணவன் என்ற போர்வையில் கீதாவிற்கு ஒரு மிருகத்தைத் தான் திருமணம் செய்து வைத்திருந்தார்கள்.

தினமும் அடி உதை என்று மிகவும் துன்பப்பட்டார் கீதா. உடல் ரீதியாகவும் அவரை தொடர்ந்து தொல்லைப்படுத்தினான். திருமணமான அடுத்த வருடமே கீதாவிற்கு முதல் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பின் கொஞ்சம் மாறுவான் என்று எதிர்ப்பார்த்து கீதா தோற்றுதான் போனார். அடியும், உதையும்... இன்னும் உக்கிரமாக தொடர்ந்தது.

இந்த லட்சணத்தில் கீதாவிற்கு அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள் பிறந்தன.

Image Courtesy

தற்கொலை :

தற்கொலை :

ஒரு கட்டத்தில் இதற்கு மேலும் என்னால் பொருத்திருக்க முடியவில்லை என் வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டும் என்று யோசிக்க ஆரம்பித்தார். ஆனால் குழந்தைகள்? இரண்டு சின்னஞ்சிரிய குழந்தைகள் இருக்கிறார்களே....

கீதா இள வயதில் தன் தாயை இழந்திருந்ததால் அந்த வேதனை குழந்தைகளிடத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்தார்.

Image Courtesy

வெளியே வா:

வெளியே வா:

ஐந்து வருடங்கள் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவருக்கு இதற்கு மேல் இவரிடம் வாழ்க்கையை தொடர முடியாது. இதுவா எனக்கான வாழ்க்கை? இனி வாழ்க்கை முழுவதும் இவனிடம் கஷ்டப்படவேண்டுமா என்று நினைக்கையிலேயே துக்கம் நெஞ்சை அடைத்தது.

இதிலிருந்து வெளியே வர வேண்டும் என்று நினைத்தார்.

Image Courtesy

வீட்டை விட்டு வெளியேறினார் :

வீட்டை விட்டு வெளியேறினார் :

மகளுக்கு மூன்று வயதும் மகனுக்கு ஒன்றரை வயதும் இருக்கும் போது அவர்களை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். எங்கே தங்குவது? யாரிடம் சென்று உதவி கேட்பது? அடுத்த வேளை உணவிற்கு என்ன செய்வது நான் பசியை பொறுத்துக் கொண்டாலும் குழந்தைகள்.... ஒன்றுக்கு இரண்டாக என்னை நம்பி இருக்கிற இந்த குழந்தைகளுக்கு எப்படி பசியாற்றுவேன்...

ஒன்றுக்கும் அப்போதைக்கு கீதாவிடம் பதில் இல்லை.

Image Courtesy

சந்தித்த கஷ்டங்கள் :

சந்தித்த கஷ்டங்கள் :

அந்த ஊரில் தெரிந்தவர்கள், பழகியவர்கள், உறவுகள் என எல்லாரிடத்திலும் ஒரு மாதம் மட்டும் தங்க இடம் கொடுங்கள் எப்படியாவது வேலை தேடி இங்கிருந்து நான் கிளம்பி விடுவேன் என்று சொல்லி முதலில் ஒருவரின் வீட்டில் அடைக்கலமானார்.

கீதாவின் கணவருக்கு விவரம் தெரிந்து, அங்கே வந்து கத்தி கலாட்டா செய்து மிரட்ட, அவனுக்கு பயந்தே கீதாவை வெளியேற்றினார்கள். இரண்டு மூன்று இடங்கள் இப்படிப் பிரச்சனையானதும் வீடே கொடுக்கமாட்டோம் என்று சொல்லிவிட்டார்கள். இறுதியாக கீதா தன்னுடைய அக்கா வீட்டில் தஞ்சமடைந்தார். அங்கேயும் அவளின் கணவன் வந்து பிரச்சனை செய்ய வெறுத்துப் போனார் கீதா.

Image Courtesy

வேலை :

வேலை :

இதற்கு மேலும் பொறுத்திருக்க முடியாது. எவ்வளவு காலங்கள் தான் இன்னொருத்தரை சார்ந்து வாழ்றது என்று நினைத்து ஒரு முடிவு செய்தார். நமக்குமுதலில் வருமானம் வேண்டும். ஏழாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த கீதாவிற்கு என்ன வொயிட் காலர் ஜாபா கிடைக்கும். வெறித்தனமாக வேலை தேட ஆரம்பித்தார்.

Image Courtesy

சுரண்டல் :

சுரண்டல் :

அது எவ்வளவு கடினமான வேலையா இருந்தாலும் பரவாயில்ல, எப்டியாவது வேலை கிடைக்கணும் என்று தேடும் போது முதலில் ரோட்டி போடும் வேலை. நாள் முழுவதும் உட்கார்ந்து ரோட்டி போட்டால் மிகச் சொற்பமான ரூபாயே கிடைக்கும். அதாவது கிடைக்கிறதே என்று சில காலங்கள் உழைத்தார்.

ஒரு ரூபாய்க்கும் இரண்டு ரூபாய்க்கும் வேலைகளை செய்தார். ஒவ்வொரு ரூபாயும் அப்போது அவ்வளவு அவசியமானதாக இருந்தது.

Image Courtesy

ஆண்களின் பார்வை :

ஆண்களின் பார்வை :

கணவனால் கைவிடப்பட்டவள், தனியாக இருக்கிறாள், வறுமை, இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள், இவளுக்கு பணத்தேவை இருக்கிறது என்று எல்லாமே எனக்கு எதிரான காரணிகள் இருக்க,சில ஆண்கள் அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவும் நினைத்தார்கள். என்னுடன் வந்தால் நிறைய பணம் கிடைக்கும் என்று தங்கள் ஆசைக்கு இணங்கச் சொல்லி வர்புறுத்த இப்படியான பணம் எனக்குத் தேவையில்லை என்று விலகிடுவேன்.

Image Courtesy

ஜெயித்து காட்டுவேன் :

ஜெயித்து காட்டுவேன் :

என்னை ஊர் மக்கள் முன்னிலையில் நடத்தை சரியில்லாதவள் என்று கூறிய கணவனுக்கு முன்னாலும் இந்த ஊர் மக்கள் முன்னாலும் நல்லபடியாக வாழ்ந்து காட்ட வேண்டும் என்ற வைராக்கியம் மட்டும் நெஞ்சோடு அப்பிக் கிடந்தது.

விடாப்பிடியாக கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தார் கீதா.

Image Courtesy

இரண்டாவது அத்தியாயம் :

இரண்டாவது அத்தியாயம் :

கீதாவின் வாழ்க்கையில் இது இரண்டாவது அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும். ஆம் இதுவரையான வாழ்க்கை முறையிலிருந்து அப்படியே வேறுபட்ட வாழ்க்கை இது.

கூலி கொடுத்தால் என்ன வேலை வேண்டுமானாலும் செய்வேன், என்றிருந்த கீதாவிற்கு பாங்கரா நடனம் ஆடும் வாய்ப்பு வந்தது. இதுவரை வாழ்க்கையில் நடனமே ஆடாத கீதா அப்போது ஆடினார். தொடர்ந்து திருமண வீடுகளில் நடனம் ஆடும் வாய்ப்பும் வர ஓரளவுக்கு நிலையான வருமானம் கிடைத்தது. ஆனால் போதவில்லை.

Image Courtesy

சினிமா :

சினிமா :

அப்படி ஒரு திருமண விழாவில் சந்தித்த ஒருவர் தான், என்னைப் பார்த்து சினிமாவில் ஸ்டண்ட் செய்ய வருகிறாயா என்று கேட்க, உடனே ஒ.கே. சொல்லிவிட்டார் கீதா. அந்த வேலை எப்படியிருக்கும், என்னால் செய்யமுடியுமா? அதைப் பத்தியெல்லாம் எதுவும் யோசிக்கவில்லை கீதா.

குழந்தைகளின் பசியைப் போக்க என்ன வேலை வேண்டுமானாலும் செய்யலாம் என்று துணிந்திருந்தார்.

Image Courtesy

தீக்காயம் :

தீக்காயம் :

முதல் திரைப்படத்திலேயே ஃபையர் ஸ்டண்ட் செய்யச் சொல்லியிருக்கிறார்கள். விபரீதம் புரியாமல் உடனடியாக சம்மதித்து ஏற்றுக் கொண்டிருக்கிறார். விளைவு முகமெல்லாம் தீக்காயம் ஏற்பட்டு விட்டது.

மருத்துவ செலவு வேறு. வறுமையை விட இந்த வலி மிகவும் கொடுமையானதாக இருந்தாலும் பொறுத்துக் கொண்டார். மீண்டு வந்தார்.

தொடரும் ஸ்டண்ட் :

தொடரும் ஸ்டண்ட் :

கொஞ்சம் ரிஸ்க்கான வேலை என்றாலும் பணம் சற்று அதிகமாக கிடைக்கிறது என்பதற்காக ஸ்டண்ட் தொடர்ந்து செய்ய விரும்பினார், இரண்டாம் முறை செய்யும் போது பக்காவாக முன்னேற்பாடுகளுடனும், பயிற்சியுடனுமே எதிர்கொண்டார் . நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.

Image Courtesy

வீட்டை காலி செய்திடு :

வீட்டை காலி செய்திடு :

ஸ்டண்ட்டில் ஈடுப்பட்டிருந்த போது ஒரு முறை முதுகுத்தண்டில் பயங்கரமான அடி. இனி நான் பிழைத்து வர மாட்டேன் என்று தான் எல்லாரும் நினைத்திருந்தார்கள்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது கீதாவை பார்க்க வந்த ஹவுஸ் ஓனர், இனி உன்னால் இனி சம்பாதிக்க முடியாது.அதனால் வீட்டை உடனடியாக காலி செய்திடு என்று சொல்லிவிட்டார்.

வேறு வழியின்றி நான் இருந்த மருத்துவமனை அறையிலேயே தன்னுடைய இரண்டு குழந்தைகளையும் வைத்து சிகிச்சைப் பெற்றார்.

Image Courtesy

இதெல்லாம் சாதரணம் :

இதெல்லாம் சாதரணம் :

யாருமே எதிர்ப்பார்க்காத வகையில் மிக விரைவிலேயே மீண்டு வந்தார் கீதா. அடி படுவது, ரத்தம், வலி இவை யாவும் கீதாவிற்கு வாடிக்கையான விஷயங்களாக மாறிவிட்டன.

இதையெல்லாம் பார்த்து பயந்து ஒதுங்காமல் மேலும் மேலும் ஊக்கம் பெற்றார் என்பது தான் உண்மை. இவை எல்லாவற்றையும் விட ஒவ்வொரு நாளையும் எதிர்கொள்வது தான் சவாலானது என்கிறார் கீதா.

Image Courtesy

வரலாற்றில் இடம் :

வரலாற்றில் இடம் :

இந்தியச் சினிமா வரலாற்றிலேயே கார் க்ராஷ் சீனில் ஸ்டண்ட் செய்ய எந்தப் பெண்ணும் வந்ததில்லை , அப்போது கீதா அந்த வேலையை செய்தார். ஆண்கள் செய்யக்கூடிய எல்லா ஸ்டண்ட்களையும் விரைவாக கற்றுக் கொண்டு செய்ய ஆரம்பித்தார்.

ஐஸ்வர்யா ராய்,கரீனா கபூர், ஷாருக்கான் என ஹாலிவுட்டில் இருக்கும் பல்வேறு நட்சத்திரங்களுக்கு கீதா ஸ்டண்ட் செய்தார்.

Image Courtesy

இது போதும் :

இது போதும் :

இளமைக் காலம் முழுவதும் கிட்டத்தட்ட 22 வயது வரை வாழ்க்கையில் வறுமையை மட்டுமே பார்த்த கீதாவிற்கு இன்றைக்கு வசதியும் சந்தோஷமும் நிரம்பியிருக்கிறது.

இன்றைக்கு பாலிவுட்டில் இருக்கக்கூடிய யாரைக்கேட்டாலும் கீதாவா? நல்லப் பொண்ணு.... செம்ம டேலண்ட் என்று பாராட்டுகிறார்கள்.

இந்த வார்த்தைகள் போதும் !

Image Courtesy

சமூகமே! :

சமூகமே! :

இன்னும் அஞ்சு வருஷங்கள் வரை ஸ்டன்ட் பண்ணிட்டு, அப்புறம் மார்ஷியல் ஆர்ட்ஸ் சென்டர் ஆரம்பிக்கணும். நான்பட்ட கொடுமைகளை வேற எந்தப் பெண்ணும் அனுபவிக்கக் கூடாது. சிங்கிள் உமன்னா அவ தன்னம்பிக்கை இழந்தவள், பலவீனமானவள்னு இனி இந்தச் சமூகம் பார்க்கக் கூடாது.

Image Courtesy

ஒரே ஒரு வாழ்க்கை :

ஒரே ஒரு வாழ்க்கை :

உங்க வாழ்க்கையை சந்தோஷமா அமைச்சுக்கோங்க. அந்த சந்தோஷத்துக்குப் பணம் ரொம்பவே முக்கியம்.

அதேநேரம் உங்களுக்கு உடன்பாடில்லாத வேலைகளைச் செய்யத் தயாரானீங்கன்னா, அதனால கிடைக்கக்கூடிய பணத்தின் மூலமா வரும் சந்தோஷத்தை இழந்துடுவீங்க.

இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான். அதை உங்களுக்காக வாழுங்க. தன் அனுபவத்திலிருந்து அதிமுக்கியமான அட்வைஸ் கொடுத்திருக்கிறார் கீதா.

Image Courtesy

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

From Marital Rape Victim To Hollywood Stunt woman

From Marital Rape Victim To Hollywood Stunt woman
Desktop Bottom Promotion