தினமும் 5 முத்தம், வாரம் 2 முறை 'அது' - ஆய்வு என்ன சொல்லுதுன்னு பாருங்க!!!

Posted By:
Subscribe to Boldsky

முத்தம் காமத்தில் சேராத காதல் கருவி. மாபெரும் சோகத்தையும் கரைத்திடும் ஹாட் சிப் இதழ்கள். பிறந்த குழந்தை பெறும் முதல் பரிசு... வெற்றியின் போது ஆரத்தழுவி நாம் பெறும் போனஸ் பரிசும் கூட முத்தங்கள் தான்.

அப்பா, அம்மா, காதலி, தோழமை, மனைவி, குழந்தைகள் என ஒவ்வொருவரிடம் இருந்தும் முத்தங்கள் பல்வேறு பரிமாணங்களில் நம்மை வந்தடையும்.

ஒரு நாளை முத்தத்துடன் துவக்கினால் அந்நாள் பொண்ணாளாகவே திகழும். ஓர் ஆய்வில் தம்பதிகள் தினமும் ஐந்து முத்தங்கள் பரிமாறிக் கொண்டால் அவர்கள் இல்லறம் எப்படி மேன்மை அடையும் என கூறியுள்ளது...

அந்த ஆய்வறிக்கை என்ன கூறுகிறது என இனி இங்கு காணலாம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. இன்பம் பொங்கும்...

1. இன்பம் பொங்கும்...

கணவன், மனைவி தினமும் முத்தங்கள் பரிமாறிக் கொள்வதால் அந்த உறவில் சண்டைகள் குறைந்தும், இருவர் மத்தியிலான அன்யோன்யம் அதிகரிக்கும் காணப்படுமாம். இது அந்த உறவரை வெற்றிகரமாக இயக்க உதவுகிறதாம். காலப்போக்கில் முத்த பரிமாற்றங்கள் குறைவதால் கூட தம்பதி மத்தியில் லேசான விரிசல் உண்டாக காரணமாக இருக்கலாம்.

2. இதர காரணங்கள்:

2. இதர காரணங்கள்:

ஒரு உறவில் முத்தங்கள் தவிர வேறு என்னென்ன காரணங்கள் உறவில் பிணைப்பு அதிகரிக்க காரணிகளாக இருக்கின்றன என்றும் இந்த ஆய்வில் ஆராயப்பட்டன... அவற்றில் முதன்மை இடம் பெற்றவை சில...

1. தப்பை ஒப்புக்கொள்வது

2. வீட்டு வேலைகளை பகிர்ந்து செய்வது

3. வாரம் இருமுறை உடலுறவு

3. குழந்தைகள்:

3. குழந்தைகள்:

இந்த ஆய்வில் 2000 பேர் கலந்துக் கொண்டனர். இதில் இல்லறம் மகிழ்ச்சியாக என்னென்ன காரணம் என ஒரு லிஸ்ட் அவர்களிடம் இருந்து எடுக்கப்பட்ட தகவல் மூலம் உருவாக்கப்பட்டது. அதில் முதல் 20 இடங்களில் குழந்தைகள் என்ற காரணம் இடம்பெறவில்லை.

4. ஐ லவ் யூ:

4. ஐ லவ் யூ:

இருவரின் ஹாபிக்களை சேர்ந்து செய்வது, ஒரு நாளுக்கு ஒரு முறையாவது ஐ லவ் யூ சொல்வது. குறிப்பாக உறங்கும் முன்னர் ஐ லவ் யூ சொல்வது போன்றவை உறவை பூத்து குலுங்கும் சோலை வனமாக வைத்துக் கொள்ள உதவுகிறது என அந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

5. திருமணம் அவசியம் இல்லை:

5. திருமணம் அவசியம் இல்லை:

இருவரும் முழுநேர வேலைக்கு செல்வதும் இல்லற மகிழ்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. திருமணம் என்பது வெறும் சடங்கு தான். இருவர் மத்தியிலான இன்பத்திற்கு அது காரணமாக இருப்பதில்லை. அவர்கள் இருவருக்குள் இருக்கும் அன்யோன்யம் தான் அவர்கள் உறவை வலுப்படுத்தும் என்றும் கூறியுள்ளனர்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Five Kisses Every Day - Perfect Relationship!

The secret to a perfect relationship is admitting you are wrong after an argument, five kisses a day and sex twice a week, a survey suggested
Story first published: Saturday, August 26, 2017, 12:08 [IST]
Subscribe Newsletter