என் செல்ஃபீ எனக்கு ஓகே சொன்ன கதை - My Story #129

Posted By:
Subscribe to Boldsky

காதலிக்கிறேன் என்று கூட எளிதாக சொல்லிடலாம் ஆனால் அதைத் தாண்டி இன்னொரு பிரச்சனை இருக்கிறது.... என்ன வாழ்ந்து காட்டுவதா என்று கேட்காதீர்கள். அந்தப் பக்கமே போகல... ப்ரோப்போசல்லயே தான் பாஸ் பிரச்சனையே

உன்னை பிடிச்சிருக்கு லவ் பண்றேன்.... என்று சொல்ல ஒரு கூட்டம் தயங்கிக் கொண்டிருந்தால் காதலைச் சொன்ன பிறகு  வருகிற எதிர்கேள்விகளை எப்படி சமாளிக்கப்போகிறோம் என்கிற தவிப்பு தான் பலருக்கும் காதலைச் சொல்லவிடாமல் தடுக்கிறது. 

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
என்ன கேள்வி? :

என்ன கேள்வி? :

அப்படி என்ன எதிர் கேள்வி என்று யோசித்துக் கொண்டே... இந்தக் கதையை தொடருங்கள்.

கல்லூரி முடித்து நான்கு வருடங்கள் ஆகிவிட்டது. இருவருக்குமே அந்தக் கல்லூரி மாணவர்கள் தான். தொடர்ந்து அவ்வப்போது அங்கே சென்று ஆசிரியர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார்கள்.

சந்திப்பு

சந்திப்பு

அன்றைக்கு சற்று மாறுதலாக கல்லூரிக்கு அருகிலிருக்கும் காபி ஷாப்பில் சந்திப்பதாக திட்டம்.

அவளைச் சந்திக்கும் போது இம்முறை தன்னுடை ஆறு வருடக் காதலை சொல்லி ஐ லவ் யூ சொல்ல வேண்டும் என்று நினைத்திருந்தான் சதீஷ்.,அவளுக்குப் பிடித்த ப்ளாக் நிறச் சட்டை. ப்ளூ ஜீன்ஸ்... ஷூ என்று எல்லாம் பக்கா... அதை விட முக்கியம் நேரத்திற்கு காபிஷாப்பில் காத்திருந்தான்.

வந்தாள்.வரவேற்று உபசரித்தான். காபி ஆர்டர் செய்து காத்திருந்தார்கள்.

ஐ லவ் யூ :

ஐ லவ் யூ :

சற்று பதட்டமாகவே இருந்தது சதீஷுக்கு இருந்தும் ஆறு வருடங்கள் பழகிய தோழியாயிற்றே.. தைரியத்தை வரவழைத்துக் கொண்டு... நம்ம ஸ்கூல டேஸ்ல இருந்தே பிரண்ட்ஸ் காலேஜ் தர்ட் யேர் படிக்கிறதுல இருந்து உன்ன எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அப்போ மட்டுமில்ல இப்போ... இந்த நிமிஷம் வரைக்கும்.... லைஃப் லாங் என் கூட வருவியா.... வில் யூ மேரி மீ என்று கேட்டான்.

அமைதி

அமைதி

ஒரு கணம். அவளுக்கு நடப்பது புரியவில்லை திகைத்து மவுனமாக இருந்தாள்.

லவ்வா? என்று ஓர் ஆச்சரியப் பார்வை.

பின் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு அங்கேயிருந்த தண்ணீரைக் குடித்தாள். இவளின் பதில் என்னாவாக இருக்கும் என்கிற தவிப்பு சதீசுக்கு படபடப்பை அதிகரித்தது.

என்ன உனக்கு ரொம்ப பிடிக்குமா? ஏன் பிடிக்கும்.....

நீங்கள் யோசித்துக் கொண்டிருக்கும் எதிர் கேள்வி இது தான். காதலைச் சொல்லலாம். காரணத்தை எங்கேயிருந்து தேடுவது.

இது என்னடா புதுச்சோதனை.... ரீசன் தெரியல பிடிக்கும் அவ்ளோ தான். நீனாலே எனக்கு ரொம்ப இஷ்டம். ரீசன் எல்லாம் தேடி கண்டுபிடிக்கணும்னு தெரியல.

ரீசன் இல்லாம பிடிச்சது.... அப்போ ரீசன் தெரிஞ்சா பிடிக்காம போய்டுமா...

ஐயோ... அப்டி எல்லாம் இல்ல... ரீசன் தெரிஞ்சாலும் உன்னைய எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அப்போ மொதோ போய் ரீசன் தெரிஞ்சுட்டு வா என்று எழுந்தாள்.

காபி குடிச்சுட்டே யோசிக்கலாம் :

காபி குடிச்சுட்டே யோசிக்கலாம் :

ஐயோ... இரு போய்டாத... கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாத சூழல் தான் அவனுக்கு... ரீசன் ரீசன்... என்ன சொல்ல ? எப்டியாவது நல்ல ரீசனா சொல்லணுமே என்று தவித்துக் கொண்டிருக்கையில் காபி வந்தது.

ம்ம்ம்...காபி குடி குடிச்சுட்டே யோசிக்கலாம் என்று தற்காலிக முற்றுப்புள்ளி வைத்தான்.

எதாவது சொல்லணுமே.... காபி வேற மடக்கு மடக்குனு குடிக்கிறா.... எந்திருச்சு போய்டப்போறா என்னடா சொல்ல.. என்று தவிப்புடன்.

நீ ரொம்ப அழகா இருக்க... நீ பேசுறது... சிரிக்கிறது எல்லாமே பிடிக்கும் என்றான். அதவிட உன் கண்ணு எனக்கு ரொம்ப பிடிக்கும்.

அழகுக்கு காதலா ? :

அழகுக்கு காதலா ? :

வெளிய தெரியுற அழகு எத்தன காலத்துக்கு நீடிக்கும்னு நினைக்கிற? என்று கேட்டாள்..

ஐயோ.... இப்படியான க்விஸ் காம்படீசன் நடக்கும்னு தெரிஞ்சிருந்தா நான் ஆட்டத்துக்கே வந்திருக்க மாட்டேனே.... என்று நினைத்தபடியே.

அழகுன்னு அது மட்டுமில்ல உன்னோட டேலண்ட்... உன்னோட டெடிகேஷன்... ஒரு ப்ராப்ளத்த நீ ஃபேஸ் பண்ற ஸ்டைல்...உன்னோட போல்ட்னஸ் எல்லாம் எனக்கு மத்த பொண்ணுங்கள விட நீ தனியாக காமிச்சது.. சோ.... அதுவும் ஒரு ரீசனா இருக்கலாம்.

யோசிச்சு சொல்றேன் :

யோசிச்சு சொல்றேன் :

இதில் கொஞ்சம் உண்மையிருப்பதாய் நினைத்தாள். மீண்டும் கேள்வி எதுவும் கேட்கவில்லை.... பதிலேதும் சொல்லாமல் மவுனமாக இருந்தாள்...

இந்த பதில்லையும் திருப்தி இல்ல போலிருக்கே அடுத்து என்ன கேள்வி கேக்க போறாளோ.... ஆண்டாவ இதையும் எப்படியாவது சமாளிக்கணுமே என்று சொல்லி வேண்டிக் கொண்டான்.

நீண்ட மவுனத்திற்கு பின் யோசிச்சு சொல்றேன் என்று எழுந்து வெளியேறினாள்.

தடுக்கவில்லை :

தடுக்கவில்லை :

இம்முறை அவன் தடுக்கவில்லை. எழுந்து வெளியேறுவதை அமைதியாய் வேடிக்கை பார்த்தான். இரண்டு மாதங்கள் இருவரும் எதுவும் பேசிக் கொள்ளவில்லை. சரி காதலைச் சொன்னது அவளுக்கு பிடிக்கவில்லை போலும் அதான் என்னை தவிர்க்கிறாள் என்று நினைத்தான் சதீஷ்.

இதுக்கு தான் பயமே... பிரண்ட்ஸா பழகுவாங்க லவ் ப்ரோப்போஸ் பண்ணா.. இல்ல செட் ஆகாதுன்னு உடனே சொல்றதில்ல யொசிச்சு சொல்றேன்னு சொல்றது. இதுல என்ன தனியா உக்காந்து யோசிக்கப்போறாங்கன்னு தெரியல.. பழகுன இவ்ளோ வருஷத்துல இவன் நல்லவனா கெட்டவனான்னு தெரியாதா?

பதிலுக்காக இத்தனை நாட்கள் எல்லாம் என்னால் காத்திருக்க முடியாது இப்போ உன் முடிவு சொல்ல முடியுமா முடியாதா என்று கேட்டுவிடலாமா என்ற யோசனையில் அவளுக்கு மெசேஜ் டைப் செய்வது, பின் வேண்டாம் அவளாகச் சொல்லட்டும் என்று அழிப்பதென்றும் இருந்தான்.

நாளை சந்திக்கலாம் :

நாளை சந்திக்கலாம் :

இவன் நினைத்தது அவளுக்கு கேட்டுவிட்டதோ என்னவோ... போன் செய்தாள். நாளை சந்திக்கலாம் என்றாள்.

அவள் ஏற்றுக் கொண்டிருபபளா மாட்டாளா? என்கிற தவிப்புடன் அந்த இடத்திற்கு மறுநாள் சென்றான். இம்முறையும் இவனே முதல் ஆளாக வந்திருக்கிறான்.

பிற விஷயங்களைப் பற்றி நீண்ட நேரம் விவாதித்தார்கள்.

நான் சொன்ன விஷயம்...? யோசிச்சியா இவனே ஆரம்பித்தன்.

செருமிக்கொண்டு... எனக்கும் உன்னைய பிடிச்சிருக்கு. ஐ லவ் யூ டூ என்றாள்

மகிழ்ச்சியில் அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.

சரி அவளுடன் கொஞ்சம் விளையாடலாம் என்று நினைத்து.... என்னைய ஏன் உனக்கு பிடிக்கும் என்றான்.

ஏன்ன்னா..... இழுத்தாள்

ம்ம்ம். யோசிக்கிறியா யோசிக்கிறியா இதே மாதிரி தான அன்னக்கி என்னைய யோசிக்க விட்ட... என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

முழித்தாள்:

முழித்தாள்:

அவளுக்கு பதில் சொல்லவேமுடியவில்லை.

அதவிடு... இந்த ரெண்டு மாசம் என்ன யோசிச்ச? எத வச்சு எனக்கு ஓகே சொன்ன.

நீண்ட யோசனைக்குப் பிறகு.... ஒரு பொண்ணு தனக்கு இண்டிபெண்டன்ஸ் வேணும்ன்னு நினைப்பா... அதோட அவளோட டேலண்ட்ட ரிககனைஸ் பண்ணனும்னு எதிர்ப்பார்ப்பா... அத ரெண்டையும் நீ பண்ண சோ... உன் கூட இருக்குற லைஃப் எனக்கு பெட்டரா இருக்கும்னு தோணுச்சு.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Sometime Patience Will Give You The Best Result - My Story!

Sometime Patience Will Give You The Best Result - My Story!
Story first published: Thursday, January 4, 2018, 15:30 [IST]