For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவன் அம்மா குறிக்கிடும் முன் வரை நாங்கள் ஒரு கனவு வாழ்க்கை வாழ்ந்து வந்தோம்... My Story #298

அவன் அம்மா குறிக்கிடும் முன் வரை நாங்கள் ஒரு கனவு வாழ்க்கை வாழ்ந்து வந்தோம்... My Story #298

|

16 வயசுல தொடங்கிய உறவு அது. அவனும் நானும் ஒரே கிளாஸ். ஆனா, அப்ப நாங்க பெருசா பேசிக்கிட்டதே இல்ல. அதுக்கப்பறம் ஒரு மூணு வருஷம் கேப். காலேஜ் டைம்ல அவன பத்தி நானோ, என்ன பத்தி அவனோ நெனச்சு கூட பார்த்தது இல்ல.

திடீர்னு ஒரு நாள் அவன்கிட்ட இருந்து ஃபேஸ்புக் ரெக்வஸ்ட். அன்னையில இருந்து ரெண்டொரு நாள்ல வாட்ஸ்-அப் நம்பர் ஷேர் பண்ணிக்கிட்டோம். நிறைய பேச ஆரம்பிச்சோம். ரெண்டு பேருக்குமே நல்ல வேலை. அதே மாதிரி தினமும் இராத்திரி பேசுற பழக்கம் எல்லாம் கிடையாது.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் மெசேஜ் பண்ணிக்கிவோம். ஒவ்வொரு சனிக் கிழமையும் அந்த வாரம் முழுக்க எங்க வாழ்க்கையில நடந்த எல்லாத்தையும் பகிர்ந்துக்க நாங்க மறந்ததே இல்லை...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ரபோஸ்...

ப்ரபோஸ்...

நானோ, அவனோ ஒருத்தர ஒருத்தர் பிரபோஸ் பண்ணிக்கிட்டதே இல்ல. எங்க ஃபிரெண்ட்ஷிப் எப்ப லவ் ஆச்சும்னு எங்களுக்கு தெரியாது. பிடிச்சது, பிடிக்காததுன்னு ஒருத்தர ஒருத்தர் எல்லாமே தெரிஞ்சுக்கிட்டோம். லவ் ப்ரபோஸ் பண்ணாமலே லவ் பண்ணிட்டு வந்தோம். ஒவ்வொரு நாளும் சனி கிழமையா இருக்காதான்னு நான் ஏங்கி தவிச்சதும் உண்டு.

நண்பர்கள்!

நண்பர்கள்!

நாம எல்லாரும்... லவ்வர்ஸ்னா இப்படி தான் இருக்கணும்னு ஒரு ஐடியா வெச்சிருப்போம்ல நாங்க அப்படி இருந்தோம்னு எங்க பிரெண்ட்ஸ் எல்லாரும் சொல்லுவாங்க. எனக்கும் அதே ஆசை இருந்துச்சு. அவன் கூட என்னோட மீதி வாழ்க்கை வாழணும்னு நிறைய ஆசை வெச்சிருந்தேன். நான் மட்டுமில்ல அவனும் கூட.

எதிர்காலம்...

எதிர்காலம்...

நாங்க பிரபோஸ் பண்ணிக்காம இருந்தாலும், பிற காதலர்கள் எல்லாம் என்னென்ன எதிர்கால திட்டங்கள் வெச்சிருப்பாங்களோ, அதெல்லாம் எங்கக்கிட்டயும் இருந்துச்சு. எப்படியான வீடு, எங்க எல்லாம் போகணும்னு எல்லாமே பிளான் பண்ணி வெச்சிருந்தோம். இதெல்லாம் காதல் தானேனு நெனச்சேன். ஆனால், இல்ல... இதெல்லாம் காதல் இல்லன்னு சொல்ல ஒருத்தங்க எங்களுக்கு நடுவுல வந்தாங்க.

தேடல்...

தேடல்...

எங்க வீட்டுல எனக்கு மாப்புள பார்த்துட்டு இருந்தாங்க... அதே சமயத்துல அவங்க வீட்டுல பொண்ணு பார்த்துட்டு இருந்தாங்க. இதப்பத்தி நாங்க விவாதிக்க ஆரம்பிச்ச நாள்ல தான். அவனுக்கு ஒரு பொண்ணு பார்த்துருக்காங்க... அவங்க மாமா மூலமா தெரிஞ்சவங்க... ரொம்ப பெரிய பணக்காரங்கன்னு சொன்னான். என்ன ஆகும்னு தெரியல... வர வீக்கென்ட் பொண்ணு பார்க்க போறோம்னு சொல்லி போன கட் பண்ணான்.

கட்!

கட்!

கட் ஆனது அந்த போன் கால் மட்டுமில்ல... எங்க உறவும் தான். அந்த சனிக்கிழமை காலையில அவன் பொண்ணு பார்க்க போனான். அவனுக்கும் அந்த பொண்ணு பிடிச்சு போச்சு. இராத்திரி கால் பண்ணி, அந்த பொண்ணு எப்படி இருந்தா, என்ன பேசுனா.. அவளுக்கும் எனக்கும் நடுவ இருக்குற ஒற்றுமை என்னன்னு விவரிச்சான். என்னால அதெல்லாம் காதுக் கொடுத்து கேட்க முடியல. நம்மள பத்தி எப்போ பேச போறேன்னு கேட்டேன். நாளைக்கே பேசுறேன்னு சொன்னான்.

அம்மா!

அம்மா!

அதுக்கப்பறம் அவன் கிட்ட இருந்த கால் வரல, அவனோட அம்மா தான் கால் பண்ணாங்க. என்ன அவமானப்படுத்தி திட்டி பேசுனாங்க. என் வாழ்க்கையில என்னால மறக்க முடியாத போன் கால். அந்த வார்த்தைகள அதுக்கு முன்னாடி நான் கேட்டதே இல்ல. என்ன அப்படி யாரும் திட்டுனதும் இல்ல.

அவனுக்கும் அந்த பொண்ணுக்கும் நிச்சயமாச்சு.

வருங்கால மாமியார்...

வருங்கால மாமியார்...

அவங்க அம்மா கால் பண்ணி பேசுனது மட்டும் இல்லாம... அவனோட வருங்கால மாமியாரும் கால் பண்ணி பேசினாங்க. இனிமேலும், என் மருமகன் கிட்ட பேசி, உறவாடிக்கிட்டு இருக்காத. என் பொண்ணுக்கும், அவருக்கும் தான் கல்யாணம். வீணா ஆசைய வளர்த்துக்கிட்டு, அவர் மனசையும் கெடுக்காதன்னு சொன்னாங்க.

பேசி மனச கெடுக்க அவன் ஒன்னும் சின்ன குழந்தை இல்லன்னு சொல்லிட்டு கால கட் பண்ணிட்டேன்.

தைரியம்!

தைரியம்!

அவனுக்கு குடி பழக்கம் இருந்துச்சு. நான் சொன்னேன்னு தான் அந்த பழக்கத்த விட்டான். நான் சொல்றத பல விஷயங்கள அவன் கேட்டிருக்கான். ஆனால், கல்யாணம்னு வந்த போது மட்டும், அவங்க அம்மா பக்கம் நின்னு, என் முதுகுல குத்திட்டான். அவன் பெரிய தைரியசாலின்னு நெனச்சேன். அவன் எவ்வளவு பயந்தவன்னு அன்னிக்கி நைட்டு தான் தெரிஞ்சுது. இன்னிக்கி அவன் ஒரு சக்சஸ்ஃபுல் ஹஸ்பன்ட்.

என்ன பொறுத்தவரை அவன் ஒரு மிகப்பெரிய ஃபெயிலியர். எங்களுக்குள்ள இருந்த அந்த கெமிஸ்ட்ரி.. எங்களுக்குள்ள ப்ரபோஸ் பண்ணாமலே வளர்ந்த அந்த லவ்.. நிச்சயமா வேற எந்த பொண்ணு கூடயும் அவனுக்கு வராது. அவனோட பயத்தால... அவனோட லைப் டைம் பொக்கிஷமான காதல இழந்துட்டான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Real Life Story: We were Living a Dream Life, Until His Mom Entered!

Real Life Story: We were Living a Dream Life, Until His Mom Entered!
Story first published: Friday, August 24, 2018, 18:03 [IST]
Desktop Bottom Promotion