For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காதலென்ற போர்வையில் இளைஞன் நடத்திய நாடகம்! my story #282

இரண்டு பெண்களுடன் தனக்கு இருந்த காதல் குறித்தும் அது குறித்து தன்னால் ஏன் எந்த முடிவும் எடுக்கவில்லை என்பதை விவரிக்கிறார்.

|

திருமணத்திற்கு பிறகு தன்னையும் தான் வாழும் சூழலையும் முழுவதுமாக மாற்றிக் கொள்ள வேண்டும், தனக்காக என்று இருக்காமல் கணவன், பிள்ளைகள் குழந்தைகள் என்று பிறருக்காக பிறரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்க வேண்டும்.

அவள் தான் நல்ல மனைவி அவள் தான் நல்ல தாய் என்ற ஒரு பிம்பத்தை கட்டமைத்து வைத்திருக்கிறோம். அந்த பிம்பத்தை யாரும் உடைக்க முயல்வதில்லை மாறாக தொடர்ந்து அந்த கற்பிதங்கள் தான் நிஜம் என்று மேலும் மேலும் சுமைகளை ஏற்றிக் கொண்டே செல்கிறோம்.

இப்பிடி முயல்வதால் குடும்பத்தில் கணவன் மனைவிக்கு இடையே நிகழும் சண்டை சச்சுரவுகள், அதனால் ஏற்படும் விளைவுகள் தான் இந்த கதை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
விளையாட்டு :

விளையாட்டு :

கல்லூரி முடித்தும் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை, எங்கள் பகுதியில் இருக்கிற இளைஞர்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு கபடிக் குழுவினை ஆரம்பித்திருந்தோம் .

ஊரைத் தாண்டி எங்கும் விளையாடியதில்லை எங்களுடைய அதிகபட்ச கனவே சென்னையில் கபடி விளையாட வேண்டும் என்பதே சில கல்லூரி மாணவர்கள் என்னைப் போல கல்லூரி முடித்தவர்கள் என ஒரு இளம் பட்டாளம் தான் அந்தக்குழுவில் பெரும்பாலும் இடம்பெற்றிருந்தோம்.

பணம் :

பணம் :

ப்ராக்டிஸ், பக்கத்து ஊர் மேட்ச்சுக்கு செல்ல எல்லாவற்றுக்கும் பணம் தேவைப்பட்டது. நாங்கள் எல்லாரும் ஒன்றாம் தேதியானால் சம்பளம் வந்து விழுகிற மாசச்சம்பளக்காரர்கள் அல்ல.

எண்பது சதவீதத்திற்கும் மேல் தினக்கூலிகள் தான். எங்கள் தலைமுறை தான் இப்போது படித்து ஐடி என்று சென்று கொண்டிருக்கிறார்கள். நானும் இப்பிடி வந்துவிட்டேன் இனி எங்கிருந்து மாசச்சம்பளத்தை நினைப்பது. எனக்கு முழுக்க முழுக்க உதவியது என் நண்பர்கள் தான். அதிலும் ஒருவனின் அப்பா ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். உடற்பயிற்சி தொடர்பான நுணுக்கங்கள் எல்லாம் அவர் தான் எங்களுக்கு குரு.

காலை :

காலை :

விடிந்தால் அவர் வீட்டில் தான் இருப்பேன். உடற்பயிற்சிக்கு ஜிம் எல்லாம் செல்லமாட்டோம். அவரின் வீட்டு மொட்டைமாடி அல்லது அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிற க்ரவுண்டுக்கு ப்ராக்டிஸ் செய்ய கிளம்புவோம்.

ஐந்து மணிக்கு முதல் ஆளாக நான் தான் அவர்கள் வீட்டு காலிங்பெல்லை அடிப்பேன். பள்ளிப்பருவத்திலிருந்தே இந்த நடைமுறை தான். எப்போதும் அம்மா தான் கதவைத் திறப்பார். சூடாக காபி கொடுப்பார் குடித்துமுடிப்பதற்குள் நண்பனும் அப்பாவும் தயாராகி வந்துவிடுவார்கள்.

அன்றைய தினம் ஒரு பெண் கதவைத் திறந்தாள்.அவன் வீட்டில் இதுவரை நான் பார்த்ததேயில்லை ஒரு வேலை நாம் வீடு மாறி வந்துவிட்டோமா என்று பின்னால் திரும்பி கதவை பார்க்கிறேன். சித்தப்பா குளிக்கிறாரு உள்ள வாங்க என்றாள்.

அடடே! :

அடடே! :

பார்த்து சிரிப்பாள்.... பதிலுக்கு சிரிப்பதா அல்லது கண்டுகொள்ளாமல் இருப்பதா என்று கூட எனக்கு தெரியவில்லை. அசடு வலிந்து கொண்டு நின்றேன். அம்மா காப்பி டம்பளருடன் வந்தார்.

இவ அக்கா பொண்ணுடா ஊர்ல இருந்து வந்திருக்கா என்று அறிமுகம் கொடுத்தார். மெல்ல இருவரும் பேச ஆரம்பித்தோம். நண்பனுக்கு எனக்கு அவள் மேல் ஒரு கண் இருக்கிறது என்பதை உணர்ந்து ஜாடையாக பலமுறை பேசுவான், பிற நேரங்களில் எதுவும் சொல்ல மாட்டேன் ஆனால் அப்பா முன்னால் இப்படி எல்லாம் பேசிவிடாதே என்று கெஞ்சுவேன்.

கோவில் விளக்குப் பூஜை என்று அவளை தனியாக அழைத்து என் காதலைச் சொன்னேன். யோசித்து சொல்வதாய் சொல்லி சென்றுவிட்டாள். எங்கள் காதலுக்கு நண்பன் கண்டிப்பாய் துணை நிற்பான் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது.

வேலை :

வேலை :

அடிக்கடி பார்த்துக் கொள்வது பேசிக் கொள்வது என எங்கள் காதலை வளர்த்துக் கொண்டோம். திடீரென்று ஒரு நாள் எப்போ வேலைக்கு போவ இன்னும் எவ்ளோ தான் விளையாடப்போறேன்னு இங்கயே உக்காந்திருப்ப என்று கேட்டாள். அப்போதே நான் கல்லூரி முடித்து இரண்டு வருடம் ஆகியிருந்தது.

விளையாட்டு வீரனாகிவிட வேண்டும் என்ற கனவு உள்ளுக்குள் இருக்கிறது தான் அதற்காக அதுவே வாழ்க்கையாக்கிக் கொள்ள எனக்கு கொடுத்து வைக்கவில்லை அந்த அளவிற்கு நான் அதிர்ஷ்டக்காரனில்லை என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. வேலை தேடும் படலத்தை ஆரம்பித்தேன்.

பெங்களூரு :

பெங்களூரு :

யார் சொன்னார்களோ.... சென்னைக்கு போனா வேலை கிடச்சிடும் என்று சொன்னதை நம்பி நண்பனின் அப்பாவிடம் இரண்டாயிரம் ரூபாய் கடன் வாங்கி சென்னைக்கு கிளம்பினேன். அவள் ஊருக்கு கிளம்பியிருந்தால் என்பதால் தைரியமாக கடன் வாங்கினேன்.

சென்னையில் யாரையும் தெரியாது.... எங்கே தங்குவது, சாப்பிடுவது, வேலையை யாரிடம் கேட்பது என்று எதுவும் தெரியாது ரொம்பவே சிரமப்பட்டேன். இன்னும் சொல்லப்போனால் என்னை இவ்வளவு சிரமப்படுத்துகிறாளே என்று அவள் மீது எனக்கு கோபமும் வந்தது. இப்படியே இருந்தால் பைத்தியமாகிவிடுவேன் என்று நண்பர்கள் தான் அப்போதும் எனக்கு உதவிக்கு வந்தார்கள். பத்து பதினைந்து நிறுவனங்கள் ஏறி இறங்கினேன். இங்கே கிடைத்து விடும் என்று அத்தனை உறுதிமொழிகளை கொடுத்து நம்பிக்கையை ஏற்படுத்தி, இந்த மாசம் நிம்மதியா சாப்பிடலாம் என்று நம்ப வைத்து கழுத்தறுப்பது இவர்களுக்கு எல்லாம் கை வந்த கலை என்று நினைக்கிறேன்.

எப்படியோ ஒரு நிறுவனத்தில் பத்தாயிரம் சம்பளம் என்றார்கள். எப்படியோ வேலை என்று ஒன்று இருந்தால் போதும் என்று ஏற்றுக் கொண்டேன். ஆறு மாதங்களில் பெங்களூருக்கு அனுப்பினார்கள்.

புது உலகம் :

புது உலகம் :

இதுவரை வாழ்ந்த வாழ்கையில் புதுமையான அனுபவமாக இருந்தது. பொருளாதார ரீதியாக மட்டுமல்லாமல் அவர்களது மெச்சூரிட்டியிலும் வேறு லெவல்.

முதல் வருடம் மொழிப்பிரச்சனையினால் ரொம்பவே கஷ்டப்பட்டேன். கோர்வையாக நாலு வார்த்தை என்னால் பேசக்கூட முடியவில்லை இதனால் தாழ்வு மனப்பான்மையினால் சோர்ந்திருந்த சமையத்தில் இங்கே புதிதாக அறிமுகமான நண்பர்கள் கை கொடுத்தார்கள்.

ஐயோ என்னங்க சொல்றீங்க :

ஐயோ என்னங்க சொல்றீங்க :

மும்பையில் பிறந்து இங்கே பணியாற்றிக் கொண்டிருக்கும் ஒருத்தி என்னை விட நான்கு மடங்கு அதிகமாக சம்பளம் வாங்கும் ஒருத்தி என்னிடம் ஒரு நாள் ப்ரோப்போஸ் செய்தாள்.

என்னங்க ப்ராங்கா? இப்ப என்ன இத அக்ஸ்ப்ட் பண்ணனுமா இல்ல ஷாக்கிங் சர்ப்பரைஸ் மாதிரி ரியாக்ட் பண்ணனுமா என்று சிரித்தேன். இது ப்ராங் எல்லாம் இல்ல சீரியசாவே உங்களை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு உங்களோட இன்னொசென்ஸ், நீங்க ஃபேமிலிய கேர் பண்ணிக்கிற விதம் எல்லாம் என்றாள்.... என்ன சொல்வதென்று தெரியவில்லை.

அப்போதைக்கு என் காதலை மறைக்க வேண்டும் என்று மட்டும் தோன்றியது.

நடத்தை :

நடத்தை :

வழக்கம் போல ஊரில் இருந்தவளிடம் பேச்சு வார்த்தை குறைந்தது. அங்கே என்னை திருமணம் செய்யப் போகிறேன் என்று வீட்டில் சொல்லிவிட்டிருந்தாள். நண்பனின் அப்பா நானாக சொல்லட்டும் என்று நினைத்துக் கொண்டு எதுமே கேட்காமல் இருந்தார்.

நண்பனும் என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்லவில்லை. இன்னும் நான் செட்டில் ஆகல அதுக்குள்ள எப்டி கல்யாணம். வேலைக்கு முன்னால் பிஏ படித்த அவள் மெத்தப் படித்தவள் ஒரு டீச்சர் வேலைக்கு போனா மாசம் ஐஞ்சாயிரம் கொண்டு வரமாட்டாளா என்று தோன்றியது. இப்போது இந்த சூழலில் அவளை பொருத்திப் பார்க்கவே என்னால் முடியவில்லை.

எனக்கு பொருத்தமில்லாதவள் என்று தோன்றியது. கோட் சூட் போட்டு நான் நிற்க எண்ணெய் படிந்த தலையோடு சேலையை கட்டிக் கொண்டு நிற்கும் அவளை நினைக்கக்கூட எனக்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.

வாழ்க்கை :

வாழ்க்கை :

இதை நேரடியாக அவளிடம் சொல்லவும் முடியவில்லை. ஒரு பக்கம் பெங்களூரில் எங்கள் காதல் வளர்ந்தது. தேவையின்றி ஊரில் இருக்கிறவளுக்கு ஆசையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம் இதனை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று தோன்றியது.

அவளிடம் என்ன பேசுவது என்னவென்று சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். இப்போது என்னுடைய தகுதிக்கு ஊரில் இருந்த என் காதலியை நான் வேண்டாம் என்று நினைப்பது போல என் தகுதிக்கு அவன் பொருத்தமானவன் அல்ல என்று இவள் நினைக்கமாட்டாள் என்று என்ன நிச்சயம் என்று ஒரு கணம் வந்து போனது.

ஒரு பக்கம் சரி தான் என்று தோன்றினாலும் நிலையான ஒரு முடிவு எடுக்கமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: relationship my story love marriage
English summary

Boy Shares his relationship with two girls

Boy Shares his relationship with two girls
Desktop Bottom Promotion