நள்ளிரவு காதல் விளையாட்டு தடயங்களுடன் புகைப்படங்களில் சிக்கிய நடிகர், நடிகைகள்!

Posted By: Staff
Subscribe to Boldsky

ஹிக்கி (Hickey) அல்லது லவ் பைட் எனப்படுவது காதல் முத்தமிடும் போது சருமத்தில் உண்டாகும் ஒரு தற்காலிக குறியாகும். இது சிவப்பு நிறத்தில் சருமத்தில் தோன்றும். இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு இந்த காதல் கடி குறி மிக வேகமாக தோன்றும் என்றும் அறியப்படுகிறது. எனவே இதன் மூலம் ஒருவருக்கு இரும்புச்சத்து குறைபாடு உள்ளதையும் அறிய முடியும்.

ரொமான்ஸ் வெளிப்பாடான இந்த காதல் கடி குறியானது சிலருக்கு அழற்சியாகவும் இருக்கிறது. நியூசிலாந்து நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் காதலர் கழுத்தில் உறிஞ்சி முத்தமிட ஸ்ட்ரோக் ஏற்பட்டு அபாய நிலைக்கு சென்றார். ஸ்ட்ரோக் மட்டுமின்றி, அந்த பெண்ணின் இடது கை செயலற்ற நிலை அடைந்தது. இதெல்லாம் மிக அரிதான செயலாகும்.

இப்படி, ரொமான்ஸ் மற்றும் அபாயம் என இருமுகம் கொண்ட கொண்ட காதல் கடி குறியுடன் இந்திய நடிகர் நடிகைகள் கேமரா கண்களிலும் சில முறை சிக்கியதுண்டு....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அலி ஃபைசல்

அலி ஃபைசல்

த்ரீ இடியட்ஸ் படத்தில் சிறப்பு தோற்றம் ஏற்றவரும், ஃபியூரியஸ் 7 படத்தில் நடித்து புகழ் பெற்றவருமான இந்தி நடிகர் அலி ஃபைசல் ஒருமுறை தனது கழுத்து பகுதியல் காதல் கடியுடன் (Love Bite) புகைப்படத்தில் சிக்கினார். இதுகுறித்து அவர் சங்கோஜம் எல்லாம் அடையவில்லை.

Image Source: Google

கரீனா கபூர் கான்!

கரீனா கபூர் கான்!

கரிஷ்மா கபூரின் தங்கையும், நடிகர் சயப் அலிகானின் மனைவியுமான கரீனா லவ் பைட் மட்டுமின்றி, சில நக கீறல்களுடன் புகைப்படத்தில் சிக்கினார். ஒரு விழாவில் இவர் அணிந்து வந்த ஸ்லீவ்லெஸ் மற்றும் பேக்லெஸ் உடையானது இதை வெட்டவெளிச்சமாக புகைப்பட கண்களில் சிக்க காரணமாக அமைந்தது.

Image Source: Google

கத்ரினா கைப்!

கத்ரினா கைப்!

மும்பையின் பந்தாரா பகுதியில் ஒரு நிகழ்ச்சிக்காக வந்திருந்த போது, கத்ரினா கைப்பின் கழுத்து பகுதியில் லவ் பைட்டுடன் புகைப்படத்தின் கண்களில் அகப்பட்டார். கேமரா கண்களில் சிக்கினாலும் கூட, இதுக்குறித்து கத்ரினா எங்கும் வாய் திறந்தது இல்லை.

Image Source: Google

பிரியங்கா சோப்ரா!

பிரியங்கா சோப்ரா!

பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை ஒரு கை பார்த்து வருகிறார் பிரியங்கா சோப்ரா. ஒருமுறை விமான நிலையத்தில் வைத்து பிரியங்காவை போட்டோ எடுத்துக் கொண்டிருந்த போது அவர் லவ் விட்டுடன் அகப்பட்டார். அவரது கழுத்து பகுதியில் இருந்த காதல் கடி குறி கேமரா கண்களில் பதிவானது.

Image Source: Google

சயப் அலிகான்!

சயப் அலிகான்!

மனைவி கரீனா கபூர் கான் மட்டுமல்ல, அவரது கணவர் சயப் அலிகானும் கூட இதே காதல் கடி குறியுடன் புகைப்படத்தில் சிக்கியுள்ளார். இவரது கழுத்து பகுதியில் காதல் கடி குறியுடன் ஒருமுறை இவர் புகைப்படத்தில் சிக்கினார்.

Image Source: Google

சல்மான் கான்!

சல்மான் கான்!

இந்தி பிரபலங்களில் பல முறை காதல் கடி குறியுடன் சிக்கிய ஒரே நடிகர் சல்மான் கான் தான் என்று கூறப்படுகிறது. ஆமாம், ஆதி காலம் முதல் இவர் காதலித்த பெண்கள் எண்ணிக்கையே கணக்கில் இல்லாத போது. இதுமட்டும் எப்படி கணக்கில் அடங்கும்.

Image Source: Google

ஷாருக்கான்!

ஷாருக்கான்!

காதல் கடியுடன் புகைப்படத்தில் சிக்கியவர்கள் பட்டியலில் கிங் கான் பாலிவுட் பாட்ஷா ஷாருக்கானும் தப்பவில்லை. ஒருமுறை மும்பை விமான நிலையத்தில் இவர் கழுத்து பகுதியில் லவ் பைட் குறியுடன் கேமரா கண்களில் சிக்கினார்.

Image Source: Google

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Celebrities Caught Red Handed With Their Love Bites

Celebrities Caught Red Handed With Their Love Bites