நிச்சயதார்த்திற்கு பிறகு உங்கள் வாழ்க்கை கட்டாயம் இப்படி மாறும்!

Written By: Lakshmi
Subscribe to Boldsky

ஒவ்வொருவருக்கும் திருமணம் பற்றி பற்பல கனவுகள் இருக்கும். பெண் பார்ப்பது முடிந்து இவருக்கு இவர் தான் என நிச்சயம் ஆனதும் பற்பல கனவுகள் மணமகன் மற்றும் மணமகள் இருவருக்கும் இருக்கும். அவ்வாறு திருமண நிச்சயம் ஆன முதல் வாரத்தில் ஏற்படும் சில மாற்றங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளை இந்த பகுதியில் காண்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மோதிரம்

மோதிரம்

இப்போது பெரும்பாலும் அனைத்து திருமண நிச்சயதார்த்தத்தில் மோதிரம் அணிவது வழக்கமாக உள்ளது. நிச்சயம் ஆன ஜோடி எந்த நேரமும் அந்த மோதிரத்தை பார்த்தபடி இருப்பதும், அவர்கள் அதை எண்ணி டூயட் பாடுவதும் முதல் வாரத்தில் நடக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அந்த மோதிரத்தில் தான் அவர்கள் உயிரே இருக்கும். காலை எழுந்தவுடன் அதனை பார்த்தவாறே எழுவதும், அதற்கு முத்தம் கொடுப்பதும், அவர்கள் துணை வரும் வரை அதையே துணையாய் எண்ணி மகிழ்வார்கள். அந்த மோதிரம் அணிந்த பிறகு அவர்கள் கையே அழகாக தெரியும் அவர்களுக்கு.

ஃபியான்ஸ் என்ற வார்த்தை

ஃபியான்ஸ் என்ற வார்த்தை

நண்பர்களிடமும், உறவினர்களிடமும், வேலை செய்யும் இடத்திலும் ஃபியான்ஸ் என்ற வார்த்தையை நாம் அதிகமாக பயன்படுத்துவோம். வெளியில் செல்லும் போதும், பொது இடத்தில் இருக்கு போதும், அனைவரும் அவர்களை பற்றி நலம் விசாரிக்கும் போதும், அவர்களுக்கு என்று தனியாக பொருட்கள் வாங்கும் போதும், நம் மனம் அவர்களை நினைத்துக்கொண்டே இருக்கும்.

போட்டோ ஆல்பம்

போட்டோ ஆல்பம்

நிச்சயதார்த்தம் மற்றும் திருமணம் எல்லாம் வாழ்வில் ஒருமுறை நடக்கும் நிகழ்வுகள், மறக்க முடியாதவை. அதை புகைப்படமாக எடுத்து காலம் வரைக்கும் ரசிக்கும் பழக்கம் அனைவருக்கும் உண்டு. ஆனால் நிச்சயம் ஆன முதல் வாரத்தில் போட்டோ ஆல்பம் வந்த உடன் அதை அனைவருக்கும் காட்டுதல் ஒருவித ஆனந்தத்தை தருகிறது, இன்னும் சொல்லப்போனால் அவர்கள் அந்த ஆல்பத்தை வைத்துக்கொண்டு தான் தூங்குகிறார்களாம்.

திருமணத்தை நினைவுகூர்தல்

திருமணத்தை நினைவுகூர்தல்

திருமணம் என்பது அனைவரது கனவு, இது வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணம் என்றே கூற வேண்டும். பெரியவர்கள் சொன்னதுபோல் திருமணம் என்பது சொர்கத்தில் நிச்சயிக்க படுவது, ஒருவர் திருமணம் ஆன பின், அவர்களை இந்த சமுதாயம் இன்னும் அதிகமாக மரியாதை கொடுத்து மதிக்கின்றது. இவற்றை எல்லாம் நாம் நிச்சயம் ஆன பின்பு அடிக்கடி நினைவில் கொண்டு திருமண நாளை எண்ணி காத்திருப்பது வழக்கமே.

திருமண செலவு

திருமண செலவு

என்ன தான் திருமணம் ஆக போகிறது என்ற மகிழ்ச்சி மனதில் இருந்தாலும், தேவையற்ற திருமண செலவுகளை எப்படி எல்லாம் குறைக்கலாம் என்பது பற்றிய சிந்தனை அதிகம் இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

After Engagement Changes

After Engagement Changes
Story first published: Saturday, July 1, 2017, 15:04 [IST]