For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஒரு விஷயம் தான் உங்கள் செக்ஸ் வாழ்க்கையை பாதிக்கிறது என தெரியுமா?

|

நமது முன்னோர்கள் கரும்புச் சர்க்கரை, பனங் கற்கண்டு போன்ற இயற்கை பொருட்களை தான் உணவில் சுவைக்காக சேர்த்து வந்தனர். ஆனால், கடைசி 30 - 40 ஆண்டுகளாக நாம் மாற்றிக் கொண்ட வெள்ளை சர்க்கரை வழக்கம் தான் ஆண்மை குறைபாடு, உடல் பருமன், நீரிழிவு போன்ற பல பாதிப்புகள் சர்வ சாதாரணமாக உண்டாக முக்கிய காரணியாக இருந்து வருகிறது.

Five Ways Sugar Is Ruining Your Intercourse Life

அதிலும், முக்கியமாக செக்ஸ் வாழ்க்கையை இந்த வெள்ளை / செயற்கை சர்க்கரை வலுவாக பாதிக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்றாகும்....

உடல் பருமன்:

காபி, கூல்ட்ரிங்ஸ், ஸ்வீட்ஸ் என அனைத்திலும் சேர்க்கப்படும் வெள்ளை செயற்கை சர்க்கரை உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணியாக இருக்கிறது. உடல் பருமன் அதிகரிப்பது, ஆண்களின் டெஸ்டோஸ்டிரோன் சுரப்பியின் உற்பத்தியை பாதித்து, தாம்பத்திய வாழ்க்கையை கெடுக்கிறது.

பெண்ணுறுப்பு:

சர்க்கரை, இரத்த நாளங்களில் இருக்கும் சிறு பாகங்களான பாலுறவில் மகிழ்வுண்டாக்குகின்ற மண்டலங்களில் இரத்த ஓட்டத்தை தடை ஏற்பட காரணியாக இருக்கிறது. இதனால் பெண்ணுறுப்பு பகுதியில் வறட்சி மற்றும் இன்பமடைதலும், ஆண்கள் மத்தியில் விறைப்பு குறைபாட்டையும் சர்க்கரை உண்டாக்குகிறது.

இரத்த சர்க்கரை:

வெள்ளை சர்க்கரை இரத்தத்தில் சர்க்கரை அளவை வேகமாக அதிகரிக்கும் தன்மை உடையது. இதனால், நரம்பு மண்டலங்களில் நாள்பட எதிர்மறை தாக்கங்கள் உண்டாக வாய்ப்புகள் இருக்கின்றன. இதனால், நீரிழிவு பாதிப்பும் உண்டாகலாம்.

உடலுறவில் வலி:

அதிகப்படியான சர்க்கரை, பெண்ணுறுப்பில் ஈஸ்ட் தொற்று, அரிப்பு, வலி போன்றவற்றை உண்டாக்குகிறது. இதனால், உடலுறவில் ஈடுபடும் போது பெண்கள் வலிமிகுந்து உணர்கிறார்கள்.

உச்சம் காண்பதில் தடை:

மேலும், சர்க்கரை உடலில் இன்பம் மற்றும் வலியை குறைக்கும் ஹார்மோன்களான டோபமைன், செரோடோனின், மற்றும் எண்டோர்பின் போன்றவற்றில் தாக்கம் ஏற்படுத்தி, அதன் சீரான உற்பத்தியை தடுக்கிறது. இதனால், செக்ஸ் வாழ்க்கையில் உச்சம் அடைவது தடைப்படலாம்.

English summary

Five Ways Sugar Is Ruining Your Intercourse Life

Five Ways Sugar Is Ruining Your Intercourse Life
Desktop Bottom Promotion