உங்கள் வாழ்க்கையை அதிக ரொமாண்டிக்காக வாழ்வதற்கான வழிமுறைகள்!!

Posted By:
Subscribe to Boldsky

காதல் என்பது இருபதில் மட்டும் தான் வரும் என்பது தவறு, அறுபதில் கூட வரும். காதல் தடைப்படாமல் யார் ஒருவர் பார்த்துக் கொள்கிறாரோ, அவரது வாழ்க்கையில் இன்பம் மிகுதியாக இருக்கிறது. காதல் என்பது உடலில் ஏற்படும் உராய்வுகள் அல்ல, மனதின் உராய்வுகள். எத்தனை தூரம் தாண்டி இருந்தாலும், உங்கள் துணையை பற்றிய எண்ணம் உங்களை விட்டு அகலாது இருப்பது தான் காதல்.

சிலரது இல்லற வாழ்க்கை தொடக்கத்தில் சிறப்பாக இருக்கும் போக, போக களையிழந்து போய்விடும். இதனால் தான் பலரது வாழ்க்கையில் சண்டை சச்சரவுகள் அதிகரிக்கின்றன. இவை நேராமல் இருக்க மற்றும் உங்கள் வாழ்க்கையை அதிக ரொமாண்டிக்காக வாழ்வதற்கான வழிமுறைகள் சில இருக்கின்றன, அவற்றை பற்றி இனிப் பார்க்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அதிகமான நேரம் செலவழிப்பது

அதிகமான நேரம் செலவழிப்பது

அதிகமான நேரம் செலவழிப்பது எனில் நீங்கள் இருவரும் ஒன்றாக இருப்பதென்று அல்ல. சிலர் வீட்டுக்குள்ளேயே ஒருவருக்கு ஒருவர் பேசாமல் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டு இருப்பார்கள். நீங்கள் இருவரும் மனம் விட்டு பேசும் அந்த நேரம் அதிகரிக்க வேண்டும்.

டேட்டிங்

டேட்டிங்

பலரும் திருமணமான புதிதில் அல்லது குழந்தை பிறக்கும் முன்னர் வரை தான் வெளியே சென்று வருகிறார்கள். காலப்போக்கில் நெருக்கம் குறைவதற்கு இதுவும் கூட ஓர் காரணமாக இருக்கலாம். குழந்தை பிறந்தாலும் கூட நேரம் கிடைக்கும் போது இருவரும் வெளி இடங்களுக்கு ஒன்றாக சென்று வர வேண்டும்.

சமையல்

சமையல்

வீட்டில் இருக்கும் போது இருவரும் சேர்ந்து சமைத்து சாப்பிட்டு பாருங்கள். அந்த ஓரிரு மணி நேரத்தில் உங்களுக்குள் நிறைய விஷயங்கள் நடக்கும். இதை பெரும்பாலான ஆண்கள் தெரிந்துக் கொள்வது இல்லை.

காதலை வெளிப்படுத்துங்கள்

காதலை வெளிப்படுத்துங்கள்

உங்கள் காதலை வெளிப்படுத்துங்கள், தோணும் போதெல்லாம் காதலை சொல்வதில் தவறில்லை. திருமணத்திற்கு முன்பு கோடி முறை ஐ லவ் யூ சொல்பவர்கள், திருமணத்திற்கு பிறகு நாளுக்கு ஒரு முறை கூட சொல்லிக் கொள்வதில்லை.

பாராட்டுதல்

பாராட்டுதல்

கணவன் மனைவியை, மனைவி கணவனை மனம் திறந்து பாராட்டுங்கள். புதிதாக ஏதேனும் பொருள் வாங்கினால் கூட நன்றாக இருந்தால் மனம் திறந்து பாராட்டுங்கள்.

ஆச்சரியமூட்டுங்கள்

ஆச்சரியமூட்டுங்கள்

உங்கள் துணையை அவ்வப்போது ஆச்சரியமூட்ட மறந்திட வேண்டாம். இது தான் உங்களை ரொமாண்டிக் வாழ்க்கையில் அடுத்தக் கட்டத்திற்கு அழைத்து செல்லும்.

தோழமை முக்கியம்

தோழமை முக்கியம்

கணவன், மனைவி இருவரும், அவரவர் நண்பர்களுடன் பழக, நேரம் செலவிட ஒத்துழைக்க வேண்டும். நீங்கள் இருவர் மட்டுமே ஒன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது தவறு. எந்த விதத்திலும் அவரை கட்டுப்படுத்த நினைக்க வேண்டாம்.

வாழ்த்துதல்

வாழ்த்துதல்

எந்த ஒரு வேலை அல்லது காரியத்தில் இறங்கும் போதும் உங்கள் துணையை முன் கூட்டியே வாழ்த்தி பழகுங்கள். இது, உங்கள் மீதான காதலை அதிகரிக்க வைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ways to make your life more romantic

Do you know about the ways to make your life more romantic? read here in tamil.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter