உங்களை ஒருவர் லவ்வுகிறாரா.. என்பதை இதை வைத்துக் கண்டுப்பிடித்துவிடலாம்!!!

By: John
Subscribe to Boldsky

மாற்றம் மட்டுமே மாற்றமில்லாதது என்பார்கள். ஆனால், அதற்கு நேரெதிராய் இருப்பது காதல் மட்டுமே. உறவுகளுக்குள் இருக்கும் காதல் மட்டுமே ஆதாம், ஏவாள் காலம் தொட்டு இன்று வரை மாறாமல் இருக்கிறது. காலங்களுக்கு ஏற்ப மனிதர்கள் மாறினாலும், அவர்களுக்குள் எழும் காதல் என்றும் மாறியதில்லை.

திருமணத்திற்கு முன்பு பேச்சுலர் ஆண்கள் விட்டொழிக்க வேண்டிய பழக்கவழக்கங்கள்!!!

கள்ளக்காதலை தயவு செய்து இதில் இழுக்க வேண்டாம். ஏனெனில், நாம் இன்கு காதலை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறோம். பல நாற்றாண்டுகளாக பிரபஞ்சத்தின் பிறப்பிற்கு அடுத்து விடைக் கிடைக்காத கேள்வி ஒன்றுள்ளது என்றால், அது காதல் எப்படி மலர்கிறது என்பது தான்.

பெண்கள், ஆண்களிடம் கேட்க தயங்கும் விஷயங்கள்!!!

நம்மை அவள் / அவன் காதலிக்கிறானா என்பதை அவ்வளவு எளிதாக அறிந்துக்கொள்ள முடியாது. ஆனால், இந்த பத்து வழிகளை வைத்து, ஒருவேளை அவர் உங்களை காதலிக்கிறார் என்பதை உணர்ந்துக் கொள்ளலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்களை போன்றே நடந்துக்கொள்வது

உங்களை போன்றே நடந்துக்கொள்வது

பெரும்பாலான விஷயங்களில் உங்களை போன்ற நடந்துக் கொள்வார்கள் அல்லது முயற்சி செய்வர்கள். இது தான் முதல் அறிகுறி.

பேசுவதற்கு காரணம் தேடுவர்

பேசுவதற்கு காரணம் தேடுவர்

ஏதேனும் ஒரு காரணம் சொல்லி உங்களோடு பேசுவதற்கு காரணம் தேடுவார்கள். மொபைல், சாட்டிங், நேரில் என எல்லா வகையிலும் உங்களோடு பேச ஆவலாக இருப்பார்கள்.

உங்கள் முன் வந்து போவது

உங்கள் முன் வந்து போவது

அடிக்கடி நீங்கள் இருக்கும் இடத்தை வட்டமிடும் கழுகாக இருப்பார்கள். வெளியிடம், அலுவலகம் என எந்த இடத்திலும் காரணமே இல்லாமல் உங்கள் முன் வந்து செல்வார்கள்.

 நண்பர்களிடம் விசாரிப்பது

நண்பர்களிடம் விசாரிப்பது

உங்களை பற்றி, உங்கள் நண்பர்கள் அனைவரிடமும் விசாரித்து, உங்களை பற்றிய தகவல்களை சேகரிப்பார்கள்.

டிராப் செய்ய கேட்பார்கள்

டிராப் செய்ய கேட்பார்கள்

நீங்கள் எங்காவது நின்றுக் கொண்டிருந்தால், உடனே அங்கு வந்து, "நீங்க எங்க போகணும், நானும் அங்க தான் போறேன், நான் வேணும்னா உங்கள் டிராப் பண்ணவா?" கேட்டு நச்சரிப்பார்கள்.

நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்பார்கள்

நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்பார்கள்

ஏதாவது ஓர் விஷயத்தை பற்றி பேசிக் கொண்டிருந்தால், இவர்களது சப்போர்ட் எப்போதும் உங்கள் பக்கம் தான் இருக்கும். உங்களை எதிர்த்து வாதிட மறுப்பார்கள்.

 கமெண்ட்ஸ்

கமெண்ட்ஸ்

முகப்புத்தகத்தில் நீங்கள் என்ன பதிவு செய்தாலும், அதற்கு லைக்கும், கமெண்ட்சும் உடனுக்குடன் இடுவார்கள்.

நிழலாய் பின் தொடர்வார்கள்

நிழலாய் பின் தொடர்வார்கள்

நீங்கள் செல்லும் இடமெல்லாம் நிழல் போல பின்னே வந்துவிட்டு, "ஓ, வாட்ட கோ இன்சிடன்ஸ்.." அப்படி என்று பீலாய் விடுவார்கள்.

ஒப்புதல் கேட்பது

ஒப்புதல் கேட்பது

நீங்கள் அவர்கள் மீது அக்கறை எடுத்துக் கொண்டாலும், இல்லாவிட்டாலும்... அவர்கள் வாங்கும் பொருள்களில் இருந்து, உடுத்தும் உடையின் நிறம் வரைக்கும் இது நல்லா இருக்குமா? அப்படி, இப்படி என்று உங்களது ஒப்புதலைக் கேட்டு ஒப்பாரி வைப்பார்கள்.

உங்களை பிரதிபலிப்பது

உங்களை பிரதிபலிப்பது

உடுத்தும் உடை, நிறம், கண்ணாடி, வாட்ச் என அனைத்தையும் வாட்ச் செய்து அதைப் போலவே தாங்களும் அணிந்து வந்து உங்களது ஈர்ப்பை கவர முயல்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Ten Ways To Find Out Who Is Interested In You

Here's how you can figure out, if someone's interested in you.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter