பெண்கள் அதிக ஈடுபாடுடன் செய்ய தவிர்க்கும் வேலைகள்!!

Posted By:
Subscribe to Boldsky

இன்றைய உலகில் ஆண், பெண் என்ற பேதமில்லை என்பது நாம் அனைவரும் அறிந்தது தான். ஆண்கள் செய்யும் அணைத்து வேலைகளிலும் பெண்கள் ஈடுபடுகிறார்கள். ஐ.டியில் தொடங்கி பேருந்து ஓட்டுனர், ஆட்டோ, கால் டாக்ஸி என அனைத்திலும் பெண்கள் இறங்கி வேலை செய்கிறார்கள்.

ஆயினும் கூட பெண்களுக்கு சில வேலைகளில் ஈடுபட ஆண்களை விட விருப்பம் குறைவாக இருக்கிறது. மற்றும் சில வேலைகள் அவர்களது இயற்கை உடலமைப்பிற்கு ஒத்துவராத வேலைகளாகவும் இருக்கின்றன....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மெக்கானிக் வேலைகள்

மெக்கானிக் வேலைகள்

பெரும்பாலும் பெண்களுக்கு பெக்கானிக் சார்ந்த வேலைகளில் ஈடுபட விருப்பம் இருக்காது. இது கொஞ்சம் கரடுமுரடான என்பதாலோ என்னவோ, வெகு சில பெண்கள் மட்டுமே இந்த வேலைகளை தேர்வு செய்கிறார்கள்.

மீன் பிடிப்பது

மீன் பிடிப்பது

மீன் பிடிப்பது என்பது நமது ஊர்களில் ஆண்களின் முழுநேர தொழில். அது, கடல், ஆறு, குளம் என எந்த நீர் நிலையாக இருந்தாலும் சரி மீன் பிடிப்பது என்பது ஆண்களின் தொழில் என்ற ரீதியில் தான் பார்க்கப்படுகிறது.

மலை ஏறுதல்

மலை ஏறுதல்

பெண்களுக்கு இதில் ஆர்வமுண்டு ஆனால், சிலர் மட்டுமே மலை ஏறுதலில் ஈடுபடுகிறார்கள். முழு மனதில் ஈடுபாடு இருந்தால் மட்டுமே மலை ஏறுதல் என்பது சாத்தியமானது ஆகும்.

மாயாஜாலம்

மாயாஜாலம்

இதுவரை மாயஜாலம் செய்யும் பெண்களை பார்த்ததாய் எனக்கு நினைவில்லை. உங்களுக்கு இருக்கிறதா? ஆம் மாயாஜாலம் போன்ற வேடிக்கைக்காட்டும் வேலைகளில் பெண்கள் அதிகமாக ஈடுபட விரும்ப மாட்டார்கள். இவை எல்லாம் பெண்களுக்கு பிடிக்கும் பொழுதுபோக்கு, ஆனால், வேலையாக செய்ய பெண்கள் முன்வராத தொழில்கள்.

விவசாயம்

விவசாயம்

விவசாயத்தில் பெண்கள் பங்கு இருக்கிறது, ஆனால் ஆண்களின் அளவுக்கு இல்லை என்பது தான் நிதர்சனம். அதற்கு காரணம் விவசாயத்தில் ஒருசில வேலைகளை தவிர மற்றவை எல்லாம் கடுமையான உடல் உழைப்பு தேவைப்படும் வேலைகள். இவை பெண்களின் உடலுக்கும், இயற்கைக்கும் ஒத்துவராத வேலைகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Things Women Are Less Interested Than Men

Do you know about the seven things women are less interested then men? read here.
Subscribe Newsletter