தங்களை இன்பமாக வைத்துக்கொள்ள ஆண்களிடம் இருந்து பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள்!!!

Posted By:
Subscribe to Boldsky

இல்லற வாழ்க்கையில் படுக்கையறை மட்டுமே இன்பத்தை தருவது அல்ல. மிஞ்சி மிஞ்சிப் போனால் நான்கைந்து மாதங்கள் கூட தாண்டாது தாம்பத்திய வாழ்க்கையின் மூலம் தம்பதியர்கள் அடையும் இன்பம். "இச்சை" அறுபது வரை இருந்தாலும், முதுமையில் அசைபோட நல்ல நினைவுகள் மிச்சம் இருக்க வேண்டும். இல்லையேல் அந்த வாழ்க்கை வெறும் பாகற்காய் தான்.

"கட்டுனா குஜாரத்தி பொண்ணுகள தான் கட்டனும் பாஸ்..", ஏன்னு தெரியுமா???

கணவன் மனைவி வாழ்க்கையில் கட்டிலையும், கட்டியணைப்பதையும் தாண்டி எட்டிப்பார்க்க வேண்டிய எவ்வளோவோ விஷயங்கள் இருக்கின்றன. கணவன் மனைவியிடம் எதிர்பார்ப்பது, மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது, குழந்தைகள் பெற்றோரிடம் எதுர்பார்ப்பது என இந்த எதிர்பார்ப்பு நீண்டுக் கொண்டே போகும்.

ஜில், ஜங், ஜக் மட்டுமில்ல, மொத்தம் பத்து வகையான பொண்ணுங்க இருக்காங்களாம்!!!

எதிர்பார்ப்பு என்ற எண்ணம் எழும் முன்னரே, அதை பூர்த்தி செய்வது தான் சிறந்த வாழ்க்கையாக அமைகிறது. இதற்கு பணம் ஓர் தடையல்ல. ஏனெனில் இவை யாவும் மனம் சார்ந்தது. இந்த வகையில், தங்களை இன்பமாக வைத்துக்கொள்ள ஆண்களிடம் இருந்து பெண்கள் எதிர்பார்க்கும் விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்....

திருமண வாழ்வில் மட்டுமே நடக்கும் முற்றிலும் குசும்புதனமான செயல்பாடுகள்!!!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உண்மை நேர்மை

உண்மை நேர்மை

பரிசுகள், தங்க நகைகள், இன்ப சுற்றுலா எல்லாம் இரண்டாம் பட்சம் தான். முதலில் தங்களை இன்பமாக வைத்துக்கொள்ள, கணவன் எங்களுக்கு உண்மையாகவும், நேர்மையாகவும் இருந்தாலே போதும் என்கிறார்கள் பெண்கள். (இது தானே கொஞ்சம் கஷ்டம்!!)

பொய்கள் வேண்டாம்

பொய்கள் வேண்டாம்

எந்த விஷயமாக இருந்தாலும் உடனே கூறிவிடுங்கள் என்று கூறுகிறார்கள் பெண்கள். ஏனெனில், நீண்ட நாள் கழித்து கண்டுபிடிக்கப்பட்டால் அது, சிறிய பொய்யாக இருந்தாலும் கூட விளைவு பூதாகரமாக விளையும் என்று பெண்கள் கூறுகிறார்கள்.

நேரம்

நேரம்

எவ்வளவு நேரம் காத்திருக்கவும் தயார், ஆனால் சரியான நேரம் சொல்லிவிட்டு வாருங்கள். இதோ வருகிறேன், அதோ வந்துவிட்டேன் என்று தாமதிக்க வேண்டாம். ஏனெனில், இதுப் போன்ற விஷயங்களுக்கு தான் பெண்கள் அதிகமாக சட்டென்று கோபம் அடைகின்றனர்.

புரிந்துக் கொள்ளுதல்

புரிந்துக் கொள்ளுதல்

உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் எங்களை நீங்கள் புரிந்துக் கொண்டாலே போதும், நாங்கள் சந்தோசமாக தான் இருப்போம் வேறு எதுவும் வேண்டாம் என்கிறார்கள் தாய்க்குலங்கள். புரிதல் தான் உறவின் அஸ்திவாரம் என்கிறார்கள், உண்மை தான்.

உணர்வால் இணைந்திருங்கள்

உணர்வால் இணைந்திருங்கள்

நீங்கள் வேலைக் காரணமாகவோ, நட்பு வட்டாரத்தின் வற்புறுத்துதலின் காரணமாகவோ எவ்வளவு தொலைவில் இருந்தாலும், எங்களோடு உணர்வால் இணைந்திருங்கள். வீட்டை விட்டு வெளியில் சென்றதும், வீடோடு சேர்ந்து எங்களையும் மறந்துவிட வேண்டாம். சிறிது நேரம் அலைப்பேசியில் அழைத்தாவது பேசுங்கள் என்று தங்களது குமுறல்களை கொட்டுகின்றனர் பெண்கள்.

எங்களது பலமாக இருங்கள்

எங்களது பலமாக இருங்கள்

பதியாக பட்டுமின்றி, எங்கள் பாதியாகவும், உறுதுணையாகவும் இருந்து எங்கள் பலமாக இருங்கள். தவறுகள் திருத்திக்கொள்ள கற்றுக்கொடுங்கள், குத்திக் காட்ட வேண்டாம் என்கிறார்கள் பெண்கள். கணவனாக மட்டுமின்றி நல்ல தோழனாக இருந்து தோள் கொடுங்கள் என்கிறார்கள். (சரிதானே!!!)

பாதுகாப்பு

பாதுகாப்பு

ஒவ்வொரு ஆண்மகனின் கடமை இது, அம்மா, சகோதரி, தோழி, மனைவி, மகள் என அனைவரையும் பாதுகாக்க வேண்டியது. ஆண்களிடம் இருந்துபெண்களை ஆண்களே பாதுகாக்க வேண்டிய அவல நிலையில் நாம் வாழ்ந்து வருகிறோம். பெண்கள் தனது கணவனிடம் அதிகம் எதிர்பார்ப்பது, நம்புவது அவளுக்கனா முழு பாதுகாப்பு தான்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Seven Things Every Woman Wants From A Man To Keep Her Happy

Seven Things Every Woman Wants From A Man To Keep Her Happy, take a look.
Story first published: Thursday, September 3, 2015, 13:28 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter