இந்திய பெண்களை திருமணம் செய்துக் கொள்ளக் கூடாதென புலம்புவதன் பின்னணியில் இருக்கும் காரணங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

இந்திய பெண்கள் உலகிலேயே அழகானவர்கள், திறமையானவர்கள், குடும்பத்தின் மீதும் குடும்பத்தினர் மீதும் அளவில்லாத காதலை அள்ளி தெளிப்பவர்கள். இந்த குணநலன்கள் உள்ள ஒரு பெண்ணை கண்டால், "இப்படி ஒரு பெண் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்" என்றல்லவா கூற வேண்டும். ஆனால், இந்திய ஆண்கள், இந்திய பெண்களை திருமணம் செய்துக்கொள்வது என்றால் தலை தெறிக்க ஓடுகின்றனர். "அய்யோ ஆளவிடுங்கடா சாமி" என இவர்கள் பெரிய கும்பிடு போட என்ன காரணமாக இருக்க முடியும். உங்களால் ஏதாவது யூகிக்க முடிகிறதா?

ஏன் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கணும் தெரியுமா?

யுகங்கள் சேர்ந்து வாழ என்ன எல்லாம் ஒரு பெண்ணிடம் இருக்க வேண்டுமோ, அவை எல்லாமே இந்திய பெண்களிடம் இருக்கின்றது. ஆனால், ஆண்களுக்கு மேல் மிக அதிகமாக இருக்கிறது. அழகு, அறிவு, ஆற்றல், நிர்வாகம், மேலாண்மை, தொழில் யுக்திகள் என 21 ஆம் நூற்றாண்டில் ஆண்களை பின்னுக்கு தள்ளி முன்னணியில் நிற்கின்றனர் இந்திய பெண்கள். ஒருவேளை, இதுதான் இந்திய ஆண்கள் இந்திய பெண்களை திருமணம் செய்ய தயங்கும் புலம்பல்களுக்கு காரணமாக இருக்குமோ? சந்தேகமே வேண்டாம் இது தான் காரணம். கொஞ்சம் குழந்தைத்தனமாக இருந்தாலும், சுவாரசியாமாக தான் இருக்கிறது இந்த புலம்பல்கள்...

ஆண்களுக்கு மனைவி இரண்டாவது தாய் மட்டும் அல்ல, முதலாவது மகளும் கூட....!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அழகு

அழகு

மைப் பூசிய விழிகளும், நீண்ட கூந்தலும் இந்திய பெண்களை அழகிற்கே அழகு சேர்ப்பவர்களாய் எடுத்துக்காட்டுகிறது. உண்மையும் அதுதான், தங்களை விட பெண்கள் அழகாக இருப்பது ஆண்களின் நெஞ்சை குறுகுறுக்க செய்கிறது.

வண்ணமையமானவர்கள்

வண்ணமையமானவர்கள்

உலக பெண்களுக்கும் இந்திய பெண்களுக்கும் இருக்கும் மிக பெரிய வேற்றுமையே, அவர்கள் எப்போது பார்த்தாலும் பழைய கருப்பு வெள்ளை டி.வி. போல இருப்பார்கள். இந்திய பெண்கள் லேட்டஸ்ட்டாக வெளிவந்த வண்ணமிகு தொலைக்காட்சி போல காட்சியளிப்பார்கள். எங்கு சென்றாலும் ஆண்களை விட பெண்களே அதிகம் மேன்பட்டு காணப்படுவார்கள். இதவும் ஆண்களின் ஒரு புலம்பலுக்கு ஒரு காரணம்.

குடும்பத்தின் மேல் உள்ள காதல்

குடும்பத்தின் மேல் உள்ள காதல்

ஆண்கள் தனிமையை விரும்புபவர்கள் (அவர்களது மனைவியோடு). ஆனால், பெண்கள் அப்படி இல்லை குடும்பத்தோடு ஒட்டி உறவாடும் குணம் கொண்டவர்கள். இது ஒரு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

வலிமையானவர்கள்

வலிமையானவர்கள்

உடலளவிலும், மனதளவிலும் பெண்கள் ஆண்களை விட பல மடங்கு வலிமையானவர்கள். அவர்கள் எந்த ஒரு பிரச்சனையையும் எதிர்கொள்ள தயங்குவதில்லை. சில சமயம் இது ஆண்களை விட அதிகமாக ஏற்படும் போது அவர்கள் தலைவனாக தோற்றமளிப்பது உண்டு. அதனாலோ என்னவோ குடும்ப அட்டைகளில் மட்டும் தலைவனாக இருக்கும் ஆண்களுக்கு இந்திய பெண்களை திருமணம் செய்வதென்றால் புலம்புகின்றனர்.

சுதந்திரம்

சுதந்திரம்

படிப்பும், அறிவும் அதிகமாக பெற்றிருக்கும் சமீப கால இன்றைய பெண்கள் தங்கள் சுதந்திரத்தை சந்தோசமாக பயன்படுத்துகின்றனர். அவர்கள் நினைத்தால் எங்கு வேண்டுமானாலும் சென்று வரலாம், வென்றும் வரலாம். இதை சில ஆண்களினால் ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. (பொறாம படாதிங்க பாஸ்!!!)

நல்லதோர் நிர்வாகி

நல்லதோர் நிர்வாகி

அவர்களது வாழ்கையை எப்படி வழிநடத்த வேண்டும். என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை பெண்களை போல நிர்வாகம் செய்ய ஆண்களால் முடிவதில்லை. கண்டிப்பாக அவர்களது துணை ஆண்களுக்கு தேவை. அதனால் தானோ என்னவோ இந்திய ஆண்களின் புலம்பல் எட்டுத்திக்கும் எதிரொலிக்கிறது.

உணர்ச்சிகரமானவர்கள்

உணர்ச்சிகரமானவர்கள்

இந்திய பெண்கள் மிகவும் உணர்ச்சிகரமானவர்கள், அது சந்தோசமாக இருந்தாலும் சரி, துக்கமாக இருந்தாலும் சரி. ஆண்கள் எந்த விஷயத்திற்கும் அவ்வளவு பெரிதாய் உணர்ச்சியை வெளிப்படுத்த மாட்டனர், ஆகவே பெண்களின் உணர்ச்சியை புரிந்துக் கொள்வதில் ஆண்களுக்கு கொஞ்சம் சிரமமாக இருக்கிறது.

இதுப்போல என்ன புலம்பினாலும், கழுத கெட்ட குட்டிச்சுவர், இந்திய ஆண்களுக்கு, இந்திய பெண்கள் தான் வாக்குப்படுவார்கள். (பின்ன இந்த மொகரக்கட்டைகளுக்கு ஏஞ்செலினாவும், எம்மா வாட்சனுமா கிடைக்கும்..!!!)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

7 Reasons Not To Marry An Indian Woman

Reasons behind the Indian's lamentations to marry Indian women, read here.
Story first published: Wednesday, March 11, 2015, 15:39 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter