தினம் தினம் சத்தமின்றி கற்பழிக்கப்படும் பெண்கள்.. கண்டுகொள்ளப்படாத சோகம்- My Story #059

Written By:
Subscribe to Boldsky

குடும்ப பாரத்தை கொஞ்சம் நாமும் சுமக்கலாமே என்று வேலைக்கு செல்லும் பெண் தான் நான்..! தினமும் இரண்டு மணிநேர பேருந்து பயணம்.. மூன்று பேருந்துகள் மாறி தான் வீட்டிற்கு செல்ல வேண்டிய நிலை... நான் அலுவலக வேலையை முடிந்து வீட்டிற்கு புறப்பட மாலை 7 மணி ஆகும். சில சமயங்களில் கடைசி நேரத்தில் வேலை வந்தால்.. என்னால் முடியாது அலுவக நேரம் முடிந்தது என்று சொல்லிவிட்டு எல்லாம் புறப்பட முடியாது.. அந்த வேலையை முடித்து கொடுத்துவிட்டு தான் செல்ல வேண்டும்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மழை நாள்

மழை நாள்

நான் சென்னையில் வசிக்கிறேன்.. டிராபிக் என்பது எனது தினசரி பிரச்சனை.. அன்று நல்ல மழை... மழை பலமாக இருந்ததால் ஆட்டோவில் செல்லலாம் என்று நினைத்தேன்.. ஆனால் மழை அதிகமாக இருந்ததால் அன்று எனக்கு எந்த ஆட்டோவும் அவ்வளவு தூரத்தில் உள்ள எனது வீட்டிற்கு செல்ல கிடைக்கவில்லை. சரி, பேருந்திலேயே சென்று விடலாம் என்று புறப்பட்டேன்... பேருந்து வருவதற்கும் தாமதமானது... நீண்ட நேரமாக நின்று... நின்று சோர்ந்து போய்விட்டேன்...

வேலைப்பளு

வேலைப்பளு

அன்று அலுவகத்திலும் மிக அதிகமான வேலை... தாமதமாக தான் அலுவலகத்தில் இருந்து கிழம்பினேன். உடன் யாரும் துணைக்கும் இல்லை.. நான் தனியாக தான் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன்.. அடிக்கடி பேருந்து வருகிறதா இல்லையா என்று பார்த்துக் கொண்டு என் கடிகாரத்தை பார்ப்பது என்றிருந்தேன்.. நேரமானல் போதுமே இந்த பசி வந்துவிடுமே என்பது போல இந்த பசி என் உயிரை விழுங்கியது..

படியில் இடம்

படியில் இடம்

நீண்ட நேர காத்திருப்பிற்கு பின்னர் பேருந்தும் வந்தது.. ஆனால் கூட்டம் அதிமாக இருந்தது... படியில் மட்டுமே இடம் கிடைத்தது. இந்த பேருந்தை விட்டு விட்டு அடுத்த பேருந்திற்காக காத்திருக்க பொறுமையில்லை என்பதால், எப்படியாவது நேரத்திலேயே வீட்டிற்கு சென்று விடுவோம் என்று அந்த பேருந்தில் ஏறிக் கொண்டேன்.. பேருந்து மிக மெதுவாக சென்று கொண்டிருந்தது... சாலைகளில் எல்லாம் தண்ணீர் தேங்கி இருந்தது.. நடந்து சென்றிருந்தால் கூட கொஞ்சம் சீக்கிரமாகவே சென்றிருக்கலாம் என்று தோன்றியது..!

கஷ்டமான பயணம்

கஷ்டமான பயணம்

பேருந்தில் செல்லும் போது என் கால்களை சில தெரியாமல் மிதித்து விட்டனர்.. சரி தெரியாமல் தானே என்று சிரித்த முகத்துடன் விட்டு விட்டேன்.. பிரேக் போடும் போது நானும் சிலர் மீது போய் மோதினேன் சாரி... சாரி.. என்று அவர்களிடம் கெஞ்சிக் கொண்டேன்.. இதில் அடிக்கடி பேருந்து நடத்துனர் வரும் போது எல்லாம் இமி அளவும் இடமில்லாத இடத்தில் கஷ்டப்பட்டு ஒதுங்கி நிற்க வேண்டியது என்று ஒரு வழியாக நான் அடைய வேண்டிய பேருந்து நிறுத்தத்தை அடைந்தேன்...!

பசியும், கால் வலியும்!

பசியும், கால் வலியும்!

இதோடு எனது பயணம் முடிந்ததா என்றால் அது தான் இல்லை... இரண்டாவது பேருத்திற்காக காத்திருந்தேன்.. பேருந்துகளில் நிரம்பி வழியும் கூட்டத்தை பார்த்து திகைத்து போனேன்.. அந்த பேருந்திலாவது நிற்பதற்காக இடம் கிடைத்தது.. ஆனால் இங்கே வரும் பேருந்துகளில் இடம் கிடைக்கவில்லை... பேருந்து நிறுத்தத்திலோ அவ்வளவு கூட்டம்... எனக்கு பசியோடு சேர்ந்து காலும் வலிக்க ஆரம்பித்து விட்டது.. நிற்கவே முடியவில்லை..!

அடித்து பிடித்து ஏறினேன்!

அடித்து பிடித்து ஏறினேன்!

வீட்டில் இருந்து அடிக்கடி போன் வந்து கொண்டிருந்தது.. எங்கே இருக்கிறாய்.. எப்போ வருவ என்று,,, அம்மாவிடம் பஸ் இருந்தா வர மாட்டேனா என்று கோபமாக சொல்லி விட்டு போனை வைத்து விட்டேன்...! ஒரு வேன் மட்டும் காலியாக வந்தது.. அது மிகவும் சிறியது தான்.. அதில் அடித்து பிடித்து ஏறிக் கொண்டேன்... நிற்கவே முடியல கால் சரியான வலி.. எப்படியாவது சீட் பிடித்து விட வேண்டும் என்றது மனது..

ஆண்களின் மீது நம்பிக்கை

ஆண்களின் மீது நம்பிக்கை

பேருந்தில் ஏறி பார்த்தால் கடைசியில் ஆண்கள் அமரும் அந்த நீளமான இருக்கை மட்டும் தான் காலியாக இருந்தது.. அதிலும் ஜன்னல் ஓரத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். அமர வேண்டாம் என்று தான் நினைத்தேன்.. அதே நீள இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவன் உக்காருங்க மேடம்.. உக்காருங்க மேடம் என்று மரியாதையாக சொன்னான்.. சரி அமரவில்லை என்றால் ஆண்கள் மீது நம்பிக்கை இல்லாதது போல ஆகிவிடும்.. நம்மை நல்ல மனதுடன் அமர சொன்ன அவரை அவமதித்தது போல ஆகிவிடும் என்று ஆண்கள் மீது கொண்ட நம்பிக்கையின் காரணமாக இரண்டு ஆண்களின் நடுவில் அமர்ந்தேன்...

கட்டுபாடு வேண்டாமா?

கட்டுபாடு வேண்டாமா?

ஒரு பெண் நமது நாட்டில் நம்பிக்கையுடன் இரண்டு ஆண்களுக்கு நடுவில் அமர்ந்தாலும், எனக்கு எந்த ஒரு இடையூறும் வராது என்று நினைத்து நம்பிக்கையுடன் அமர்வது எவ்வளவு பெரிய விஷயம்? இந்த நிலையில் ஆண்கள் எவ்வளவு கண்ணியம், கட்டுப்பாடுடன் நடந்து கொள்ள வேண்டும்? அந்த நம்பிக்கையை உருகுலைப்பது போல நடந்து கொள்வது என்பது சரி தானா? நிச்சயம் இல்லை..

கொடுரன்!

கொடுரன்!

ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்தவன் தன்மானம் காக்கும் வகையில், கட்டுப்பாடாக அமந்திருந்தான்.. ஆனால் என்னை அமர சொன்னவன் அப்படி இல்லை... என் கைகளின் மீது அவனது கைகள் உரசிக் கொண்டே தான் இருந்தது.. என் மீது அவனது உடலை உரச வேண்டும் என்பதற்காக அங்கும், இங்கும் அசைந்து எதைஎதையோ செய்வது போல செய்கைகளை செய்தான். போனை பாக்கெட்டில் எடுப்பதும் வைப்பதுமாக செய்து என்னை உரசினான்...

தீண்டல் குறையுமா?

தீண்டல் குறையுமா?

ஜன்னல் வழியாக பார்பது போல எனது முகத்தை பார்த்துக் கொண்டே இருந்தான்.. என்னால் அவனது சுவாச காற்று என் மீது படுவதை கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை... முறைத்து பார்த்தால் அவனது தீண்டல் குறையுமென முறைத்து பார்த்தேன் அவனது தீண்டல் அதிகமானது.. எனக்கு கோபமாக வந்தது... கொஞ்சம் தள்ளி உக்காருங்கள் என்று கூறினேன்... அப்போதைக்கு தள்ளி அமர்ந்து விட்டு, மீண்டும் அவனுடைய லீலைகளை ஆரம்பித்தான்...

வேட்டையாடும் ஆண்கள்

வேட்டையாடும் ஆண்கள்

கால் வலி, பசி, வேலைக்கு சென்று விட்டு வந்த கலைப்பு... நிம்மதியாக பேருந்திலாவது அமரலாம் என்றால் என்னால் முடியவில்லை.. பாதுக்காப்பாக இருக்க வேண்டிய ஆண்களே பெண்களை வேட்டையாடும் கொடுமை... இது தான் பெண் சுதந்திரமா...?

அடங்காத குணம்

அடங்காத குணம்

இவனது உரசல்களுக்கு ஆளாவதை விட, கால் வலித்தாலும் பரவயில்லை என்று எழுந்து நின்று கொண்டேன்... ஆனாலும் அவன் என்னை விடுவதாக இல்லை.. அவனுக்கு முன்னால் இருக்கும் ஜன்னலின் கதவை திறக்க வேண்டும் என்று வந்து என்னை உரசி சென்றான்... தனது இருக்கையை விட்டு அங்கும் எங்கும் நடமாடுவது போல, என்னை உரசிக் கொண்டிந்தான்.. அந்த வேனில் நான் மட்டும் தான் நின்று கொண்டிருந்தேன்... என்னவென்று சொல்வது இந்த கொடியவனின் செயலை...?

கோபத்தின் உச்சம்

கோபத்தின் உச்சம்

அவனது செயல்களை கண்டு எனக்கு கோபம் உச்சத்தில் இருந்தது.. சாலைகளில் மழை நீர் இருந்ததாலும், டிராபிக் அதிகமாக இருந்ததாலும் பேருந்து செல்ல மிக நீண்ட நேரமானது.. அந்த கொடியவனின் உரசல்களை தாங்கி கொண்டு அங்கே அமருவதை விட, கால் வலித்தாலும் பரவயில்லை என்று நின்று கொண்டிருந்தேன். டிரைவர் என்னை பார்த்து சீட் இருக்கிறது.. அங்கே சென்று அமர் என்று கூறினார். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

கவர்ச்சி?

கவர்ச்சி?

கவர்ச்சியான உடை அணிவது தான் ஆண்களின் பாலியல் உணர்வை தூண்டும் என்றால், நான் ஒன்றும் கவர்ச்சியான ஆடைகளை அணியவில்லையே.. மேக்கப் போட்டுக் கொண்டு செல்லவில்லையே... வேலை முடித்து வந்த கலைப்பில் தானே இருந்தேன்.. எது அவனது உணர்வை தூண்டியது..?

இடத்தை பிடித்தான்

இடத்தை பிடித்தான்

ஒரு பேருந்து நிறுத்தம் வந்தது.. அங்கே ஒரு பெண் இறங்கினாள்.. அங்கே சென்று அமர்ந்து கொள்ளலாம் என்றிருந்தேன்.. ஆனாலும் அந்த கொடியவனுக்கு நான் அமருவது பிடிக்கவில்லை போல... என்னை தள்ளிவிட்டு அந்த இடத்தில் அவன் வந்து அமர்ந்து கொண்டான்... அந்த சிறிய பேருந்து பயணத்தில், முன் பின் தெரியாத நான் அவனுக்கு என்ன பாவம் செய்தேன்? அவனது உரசல்களுக்கு இணங்க மறுத்தது தான் குற்றமா? நான் அமரக் கூடாது என்று அவனுக்கு ஏன் இத்தனை வஞ்சகம்?

அசிங்கமானவன்

அசிங்கமானவன்

இவ்வளவு தாழ்ந்த குணம் இவனுக்கு இருக்கிறதே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.. நான் இறங்க வேண்டிய இடம் வந்தது.. இந்த கொடுரனை செறுப்பால் அடிப்பது போல ஒரு பார்வை பார்த்து விட்டு இறங்கிவிட்டேன்... அடுத்த பேருந்தில் ஏற வேண்டும்... இனிமேல் ஆண்களை நம்பி அவர்களது அருகில் அமரவே கூடாது என்று மனதில் முடிவு எடுத்துக் கொண்டேன்.. பேருந்தும் வந்தது...

ஆண்களின் மீது பயம்

ஆண்களின் மீது பயம்

அதில் முழுக்க முழுக்க ஆண்களின் கூட்டம் தான்.. சில பெண்கள் இருந்தார்கள் ஆனால் அவர்கள் அனைவரும் இருக்கையில் அமர்ந்திருந்தார்கள்.. அந்த பேருந்திலும் ஒரே கூட்ட நெரிசல்... இத்தனை ஆண்கள் மத்தியில் நெரிசலில் நிற்க பயமாக இருந்தது... ஒதுங்கி ஒதுங்கி நின்றேன்.. எனக்கு அருகில் இருக்கையில் அமர்ந்திருந்த ஒருவர் எனக்கு இடமளித்து அமர சொன்னார்.. நானும் அமர்ந்து கொண்டேன்..

தெய்வம்..

தெய்வம்..

முதலில் அவர் இறங்க போகிறார் போல என்று தான் நினைத்துக் கொண்டிருந்தேன்... ஆனால் அவர் எழுந்து நின்று கொண்டு, என்னுடைய பையை மட்டும் வைத்திருங்கள் என்று அவரது கனமான பையை கொடுத்தார்.. கடந்த பேருந்தில் அத்தனை கொடுமைகளை அனுபவித்த எனக்கு, உண்மையில் அவர் தெய்வமாக தான் தெரிந்தார்.. எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.. இப்படிப்பட்ட நல்ல ஆண்களும் இருக்கிறார்களே என்று....!

என்ன நினைத்திருப்பார்..

என்ன நினைத்திருப்பார்..

அவரும் சற்று நீண்ட தூரம் பயணிக்க வேண்டி இருந்தது.. ஆனால், இத்தனை ஆண்கள் மத்தியில் ஒரு பெண் நிற்க சிரமப்படுவாள் என்று நினைத்தாரோ... இல்லை பாவம் வேலைக்கு செல்லும் பெண் போல, களைத்து போயிருப்பாள் ஏதோ நம்மால் இயன்ற இந்த உதவியையாவது இந்த பெண்ணுக்கு செய்யலாம் என்று நினைத்தாரோ என்று தெரியவில்லை... எனக்கு இடம் கொடுத்துவிட்டார்..

ஆறுதல் சந்திப்பு

ஆறுதல் சந்திப்பு

இப்படி ஒரு ஆணை கண்டதும், அந்த கொடியவனால் உண்டான கசப்பான அனுபவம் மறந்து போனது... இந்த உலகில் நல்ல ஆண்களும் இருக்கிறார்கள் என்று மனம் ஆறுதல் அடைந்தது... இவரை மட்டும் சந்திக்கமால் இருந்திருந்தால் அந்த கொடியவனின் செயலை நினைத்துக் கொண்டே பல இரவுகளை தூங்காமலும், பல பகல்களை ஆண்கள் மீது வெறுப்புடனுமே கழித்திருப்பேன்... அவரின் சந்திப்பு எனக்கு கிடைத்த ஆறுதல்...

சிறந்த உள்ளம்

சிறந்த உள்ளம்

இறுதியில் அவர் இறங்க வேண்டிய இடம் வந்தது... அவரது பையை கொடுத்துவிட்டு நன்றிக்கான முழு அற்தமும் பொதிந்த ஒரு தேங்ஸ் சொன்னேன்... அவர் நான் செய்தது எல்லாம் பெரிய உதவியே இல்லை என்பது போல அலட்டிக் கொள்ளாமல் சென்று விட்டார்.. நானும் எனது பேருந்து நிறுத்தம் மகிழ்ச்சியாக வீட்டிற்கு சென்று விட்டேன்...!

இதுவும் கற்பழிப்பு தான்..

இதுவும் கற்பழிப்பு தான்..

பெண்களின் அனுமதியின்றி அவளை தீண்டுவது கூட கற்பழிப்பு தான்.. இது போன்ற கற்பழிப்புகள் பல தினமும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன. பெண்கள் தனது பெற்றோர்கள், கணவன் என யாருடைய பாரத்தையாவது தன் தோளிலும் சற்று சுமக்கலாமே என்பதற்காக தான் வேலைக்கு செல்கிறார்கள்... அவர்களுக்காக நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்... அவர்களை உரசி உங்களது பாலியல் தேவைகளுக்காக அவர்களை பயன்படுத்திக் கொள்ளாமல் இருந்தாலே போதுமானது...!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My story: My travel story

My story: My travel story
Subscribe Newsletter