எவன் கூடப் படுத்துட்டு இருக்க? சந்தேக பிராணிக்கு இரையான காதல் - My Story #055

Posted By:
Subscribe to Boldsky

என் வீட்டில் அனைவருக்கும் செல்ல குழந்தை என்பதால், என் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக அமைந்தது. நான் மிகவும் லக்கியானவள் என கருதினேன். சாப்பிடுவது, பாடுவது, இசை அமைப்பது போன்றவை எனக்கு பிடித்தமான செயல்கள்.

நான் பள்ளி முடித்த காலம் அது. ஒருவன் மீது காதலில் விழுந்தேன். அவன் என்னை கடந்த மூன்று வருடங்களாக பின்தொடர்ந்து வருகிறான். என்னை மிகவும் நேசிக்கிறான். பள்ளி பயின்று கொண்டிருந்த காரணத்தால் அவனையும், அவனது காதலையும் ஏற்க முடியாத சூழலில் இருந்தேன்.

அவன் என்னை கட்டிலும் ஏழு வருடங்கள் மூத்தவன். ஆயினும், எங்கள் இருவருக்கும் மத்தியில் இருந்த அந்த இசை மீதான விருப்பம், எங்களுக்குள் நெருக்கத்தை ஏற்படுத்தியது. அவன் மீது மிகுந்த பாசத்துடன் பழகிய காலம் அது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அற்புதமான உணர்வு...

அற்புதமான உணர்வு...

அந்த காலத்தில் நான் ஓர் அற்புதமான உணர்வில் வாழ்ந்துக் கொண்டிருந்தேன். ஒருவரது உலகில் மைய்யப்புள்ளியாக இருப்பது பேரழகு.

நாட்கள் கழிந்தன. எங்கள் உறவில் பல மாற்றங்கள் வர ஆரம்பித்தது. கொஞ்சம், கொஞ்சமாக அவன் என்னை எரிச்சலூட்டும் வகையில் நடந்துக் கொண்டான்.

ஃபேஸ்புக்!

ஃபேஸ்புக்!

முதலில் என்னை ஃபேஸ்புக் அக்காவுண்டை டி-ஆக்டிவேட் செய்ய கூறினான். அனைத்து சமூக தளங்களிலும் மிக ஆர்வமாக உலாவும் எனக்கு இது பேரிடியாக இருந்தது. என்னால் முடியாது என்ற போதிலும், மிகவும் வற்புறுத்தி என்னை ஃபேஸ்புக்கைவிட்டு வெளியேற செய்தான்.

திடீர் மாற்றம்

திடீர் மாற்றம்

நான் உடல் பருமனாக இருப்பதாக கூறி, நான் அணியும் மாடர்ன் உடைகள் சரியாக இல்லை என சல்வார் மட்டும் அணிய கூறினான். நானும் அதை ஏற்று தினமும் சல்வார் மட்டுமே அணிய துவங்கினேன். எனது இந்த திடீர் மாற்றம் எனது குடும்பத்தாருக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

எவன் கூட?

எவன் கூட?

ஒரு நாள் வேலை ரீதியாக பிஸியாக இருந்த போது அவனது அழைப்பை ஏற்க முடியாமல் போனது. அழைப்பை ஏற்கவில்லை என்ற ஒற்றை காரணத்திற்காக, நான் வேறு நபர்களுடன் தொடர்பில் இருக்கிறேன். ஏமாற்றுகிறேன் என குற்றம் சாட்டினான.

அது, முற்றிலும் பொய்! அவனது சந்தேக புத்தியை முதன் முதலில் வெளிச்சம் போட்டு காட்டிய நிகழ்வாக இது அமைந்தது.

அலுவலகத்தில்...

அலுவலகத்தில்...

ஒரு நாள் அலுவலகத்தில் என்னுடன் பணிபுரியும் நபர்களுடன் முக்கிய ஆலோசனையில் இருந்தேன். அவன் எனக்கு கால் செய்தது கூட தெரியவில்லை. நான் அழைப்பை ஏற்காமல் என்ன செய்கிறேன் என பார்க்க எனது அலுவலகத்திற்கு வந்தான்.

அனைவரின் முன்னிலையில், என் அலுவலகத்தில் ஒருவருடன் நான் தொடர்பில் இருக்கிறேன் அனா வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு சென்றான். என் வாழ்வில் இதை விட மோசமான நிகழ்வு ஒன்று நடக்க முடியாது என்ற அளவிற்கு என்னை கூனிக்குறுகி போக செய்தான்.

பதில்...

பதில்...

அதன் பிறகு எப்போதெல்லாம் அவன் என்னை சந்தேக பார்வையுடன் பார்த்து, பேசுகிறானோ, அப்போதெல்லாம், ஆமா... நான் அவன் கூட தான் படுத்துட்டு இருந்தேன். இப்ப உனக்கு என்ன, நீ யாருகூட பொய் படுத்த... என அவனது பாஷையிலேயே பேச ஆரம்பித்தேன். சண்டை பெரிதனாது. எங்கள் உறவு சிதைய துவங்கியது.

கத்தி முனையில்...

கத்தி முனையில்...

எனக்கு அப்போது வயது 17 தான். எனது பபெற்றோர் எனக்கு கொடுத்த சுதந்திரத்தை இவன் தட்டிப் பறிப்பது நியாமற்ற செயல்.

அனைத்து வழிகளிலும் அவனை பிளாக் செய்த பிறகு, ஒரு நாள் எங்கள் வீட்டுக்குள் புகுந்து எனது கழுத்தில் கத்தி வைத்து மிரட்டினான். அவனுடன் ப்ரேக்-அப் செய்த காரணத்திற்காக என்ன கொன்றுவிடுவேன் என மிரட்டினான். அவனை அழுத்தம் கொடுத்து தள்ளி, எட்டி உதைத்தேன். படிகளில் இருந்து கீழே விழுந்தான். எனது பொறுமையின் எல்லையை நான் கண்ட தினம் அது.

எனது பைத்தியக்காரத்தனம்!

எனது பைத்தியக்காரத்தனம்!

அவன் என்னை சந்தேகிக்க ஆரம்பித்த முதல் நாளிலேயே நான் அவனை விட்டு விலகியிருக்க வேண்டும். இந்த உறவை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் நான் செய்த பைத்தியக்காரத்தனம் தான் இன்று நான் இப்படி உடைந்து போக காரணம் ஆனது.

எனது காதல் முறிந்த அதே வருடம். ஆனது நீண்ட கால நண்பனுடன் மீண்டும் பேச துவங்கினேன்.

நல்ல நண்பர்கள்!

நல்ல நண்பர்கள்!

நாங்கள் நல்ல நண்பர்கள். நன்றாக தான் பேசி, பழகி வந்தோம். நாங்கள் ஒருவரை ஒருவர் எப்போது விரும்ப ஆரம்பித்தோம் என்று கூட எங்களுக்கு தெரியாது. என்பது இளம் பருவத்தை மீண்டும் துவக்க எண்ணினேன்.

அவன் அம்மா செல்லம். அவன் ஒரு நாள் எனது படங்களை அவனது அம்மாவிடம் காண்பித்தான். அவனது அம்மா, என்னை குண்டாக, கருப்பாக, அழகின்றி இருக்கிறேன் அனா கூறனார். அதே போல, அவனை என்னை திருமணம் செய்துக் கொள்ள ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டேன் என கூறியதாக அறிந்தேன்.

ஆறு மாத உறவு...

ஆறு மாத உறவு...

எங்கள் ஆறுமாத உறவு, அவனது அம்மாவின் கருப்பு கருத்தால் பிரிந்து போனது. இனிமேலும், என்னால் உன்னுடன் இருக்க முடியாது என கூறி பிரிந்தான். அவனது அம்மா கூறியதிலும் தவறில்லை. நான் குண்டா, உயரம் குறைவாக, கருப்பாக தான் இருக்கிறேன். ஆனால், அசிங்கமாகவோ, அகோரமாகவோ எல்லாம் இல்லை.

இது என்னை பெரிய மன அழுத்தத்திற்குள் தள்ளியது. எனக்கு வயது அப்போது 20. எனது வேலைகளில் நான் சிறந்து செயற்பட்ட காலம். என் பெற்றோர் என்னை எண்ணி பெருமிதம் அடைந்த காலமும் அது.

அழுத்தம்!

அழுத்தம்!

வேலையில் இருந்த செயற்பட்டாலும், அவனது அம்மா கூறிய வார்த்தைகள் என்னுள் மிக பெரிய அழுத்தத்தை கொடுத்துக் கொண்டே இருந்தது. எனவே, எனது உடல் எடையை குறைக்க வேண்டும் என கருதினேன். ஒரு ஜிம்மில் சேர்ந்தேன். நான் ஜிம்மில் சேர்ந்த இரண்டாவது நாள், ஜிம்மே என்னைக் கண்டு சிரித்தது.

பளுதூக்கி 24 கிலோ குறைத்தேன். ஒரு பெண்ணாக என்னை நானே மாற்றி அமைத்தேன். ஆண்களை காட்டிலும் பெரிய அளவிலான எடைகளை தூக்க ஆரம்பித்தேன். எனது உடல் அமைப்பு மாறியது. எனது உடல் வடிவத்தை கண்டு பலரும் பாராட்டியுள்ளனர்.

வாழ்க்கை மாற்றம்!

வாழ்க்கை மாற்றம்!

ஒரு டயட்டீஷியனை கண்டேன். அவரது டயட் எனது உடலை மட்டும் மாற்றவில்லை, எனது வாழ்க்கையையும் தான். அவரது காதல் என்னை மகிழ்ச்சியானவளாக மாற்றியது. இப்போது எனது வயது 23. மாநிறம், 62 கிலோ, 5'1 உயரம்.

நாங்கள் இருவரும் ஒரு வருடமாக காதலித்து வருகிறோம். நான் ஃபேஸ்புக் பயன்படுத்துகிறேன். எனக்கு பிடித்த உடைகளை அணிகிறேன். என்னை நானே மிகவும் விரும்புகிறேன். சீக்கிரமாக நானும், எனது காதலனும் திருமணம் செய்துக் கொள்ளவிருக்கிறோம்.

சில மாதங்கள் கழித்து...

சில மாதங்கள் கழித்து...

சில மாதங்கள் கழிந்தன, எனது எக்ஸ் காதலன் கூறினான். அவனது அம்மா எனது படங்களை கண்டதாகவும். இப்போதும் என்னுடன் பேசுகிறாயா என கேட்டதாகவும். கூறினான். இப்போது வந்தால் எனது அம்மா உன்னை நிச்சயம் ஏற்றுக் கொள்வார் என கூறினான்.

நீ பேசாமா உன்னோட கருத்த A***ல கல்யாணம் பண்ணிக்க போ... என திட்டி, இம்முறை அழைப்பை நான் துண்டித்தேன்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

My Story: He Doubted Me Every Single time, and I broke up With Him!

My Story: He Doubted on Me Every Single time, and I broke up With Him!