For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகளிர் தினத்தில் மனைவிக்கு விலைமதிப்பற்ற பரிசளியுங்கள்..!

By Mayura Akilan
|

திருமணநாள், பிறந்தநாள், காதலர் தினம் என சிறப்பு வாய்ந்த நாட்களில் மனைவிக்கு பரிசளிக்கும் கணவர்கள் உண்டு. அதேபோல் பெண்மையை போற்றும் மகளிர் தினத்தில் மனைவிக்கு பரிசளிப்பது அவர்களைப் பெருமைப்படுத்தும். மனைவிக்கு சர்ப்ரைசாகவும் இருக்கும்.

சரிபாதி உரிமை

பெண்களின் எதிர்பார்ப்பு என்பது மிகவும் குறைவானதுதான். அவர்கள் கணவரிடம் எதிர்பார்ப்பது மதிப்பையும், சரிவிகித உரிமையையும் தான். எனவே வீட்டில் செய்யப்போகும் காரியங்களுக்கு மனைவியின் ஆலோசனையை பெற்றுச் செய்வது அவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்.

மருத்துவ பரிசோதனை

மனைவியின் உடல் நலத்திலும், மன நலத்திலும் அக்கறை காட்டுவது அவசியம். மகளிர் தினத்தில் மனைவியை முழு உடல் மருத்துவப் பரிசோதனை செய்ய அழைத்துச் செல்லலாம். பெரும்பாலான மருத்துவமனைகளில் மகளிர் தின சிறப்பு பேக்கேஜ்கள் போட்டிருக்கின்றனர்.

நாற்பதுக்கும் மேற்பட்டவரா?

மனைவி நாற்பது வயதிற்கு மேற்பட்டராக இருக்கும் பட்சத்தில் அவர்களின் உடல் நலனின் அதீத அக்கறை எடுத்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் அவர்களின் மெனோபாஸ் காலத்தில் மன உளைச்சல் ஏற்படும். மேமோகிராபி சோதனை, கர்ப்பப்பை பரிசோதனை போன்றவைகளை செய்யவேண்டும்.

மன அழுத்த பாதிப்பா?

பெண்களுக்கு சில சமயங்களில் மன அழுத்த பாதிப்பு ஏற்படுத்தும். எனவே பெண்களின் மனஅழுத்தத்தை போக்கும் வகையில் ஆறுதலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். இதன் மூலம் அவர்களின் உடலோடு மனமும் நலமடையும்.

காப்பீட்டு திட்டங்கள்

மனைவிக்கு இன்சூரன்ஸ் எடுத்திருக்கிறீர்களா? அது மிகவும் முக்கியமானது. அவர்களுக்கு மெடிக்ளெய்ம் பாலிசி எடுக்கவேண்டும். ஏனெனில் குறிப்பிட்ட வயதிற்குப் பின்னர் அவர்களின் நலத்தில் நாம் அக்கறை செலுத்துவது அவசியமாகிறது. இதுவரை எந்தவித காப்பீட்டு திட்டமும் மனைவியில் பெயரில் துவங்கவில்லை எனில் இந்த மகளிர் தினத்தில் காப்பீட்டு திட்டம் தொடங்கு மனைவிக்கு பரிசளியுங்கள்.

விலை மதிப்பில்லாத பரிசு

எந்த சூழ்நிலையிலும் தன் கணவர் தனக்கு ஆறுதலாக இருக்கிறார் என்ற நினைப்பே மனைவியை மகிழ்ச்சிப் படுத்தும். பணம், பரிசு இவைகளை தருவதைப் போல வீட்டில் சில மணிநேரங்கள் மனைவிக்காக செலவழியுங்கள். இது மனைவி விரும்பும் விலைமதிப்பில்லாத பரிசாகும். இது இருவருக்கும் இடையேயான உறவுகளை வலுப்படுத்தும்.

English summary

Care For Your Wife This Women's Day 2012 | மகளிர் தினத்தில் மனைவிக்கு விலைமதிப்பற்ற பரிசளியுங்கள்..!

Valentine's Day and anniversaries are there to surprise your wife with expensive gifts and exotic vacations. On Women's Day 2012 you should make a special gesture towards her if you really care for your wife. When we marry we promise to stay with each other forever but in the stress of your work life that important promise fades into oblivian.
Desktop Bottom Promotion