Latest Updates
-
கேஸ் அதிகம் தேவைப்படாத காய்கறி கூட தேவைப்படாத கொத்தல்லி கார குழம்பு ரெசிபி... ஒரு தடவ ட்ரை பண்ணி பாருங்க...! -
1 கப் அரிசி மாவு இருந்தா.. காரடையான் நோன்பு இனிப்பு அடையை இப்படி சிம்பிளா செய்யுங்க.. -
Karadaiyan Nombu 2026: தேதி, சடங்குகள் மற்றும் எந்த நேரத்தில் மஞ்சள் சரடு கட்டுவது கணவரின் ஆயுளை அதிகரிக்கும்? -
Panguni Month 2026: பங்குனி மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது.. உங்க ராசி இதுல இருக்கா? -
120 ஆண்டுக்கு பின் ஏப்ரலில் உருவாகும் திரிகிரக யோகம் 2026: இந்த 3 ராசிகளை கோடீஸ்வரராக்குவது உறுதியாம்...! -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய தக்காளி வெங்காய பச்சடி - சூடான சாதத்துக்கு டக்கரா இருக்கும்.. ட்ரை பண்ணுங்க.. -
இந்தியாவில் முதலில் தொடங்கப்பட்ட வங்கி எது? அது தமிழ்நாட்டில் எந்த ஊரில் அந்த வங்கி தொடங்கப்பட்டது தெரியுமா? -
கோடையில் தினமும் ராகி ரொட்டி சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
சிங்கம் போல வலிமையும், தைரியமும் கொண்ட 4 பெண் ராசிகள் இவங்கதான்... உங்க ராசி இதுல இருக்கா? -
18 மாதம் கழித்து மீனம் செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது..
மழை நேரத்தில் இட்லி, தோசைக்கு வெங்காயத்தை சுட்டு இப்படி சட்னி செஞ்சு பாருங்க.. டேஸ்ட் சும்மா அள்ளும்..
Village Style Onion Chutney Recipe In Tamil: மழை பெய்யும் போது காலையில் இட்லி, தோசைக்கு நல்ல காரசாரமான சட்னியை செய்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும். ஆனால் உங்களுக்கு எப்போதும் ஒரே மாதிரியான சட்னியை செய்து போரடித்துவிட்டதா? அப்படியானால் வீட்டில் வெங்காயம் அதிகம் உள்ளதா?
அந்த வெங்காயத்தைக் கொண்டு ஒருமுறை கிராமத்து ஸ்டைலில் சட்னியை செய்யுங்கள். இந்த கிராமத்து ஸ்டைல் வெங்காய சட்னியானது ஸ்மோக்கி ப்ளேவருடன் இருப்பதால், இது நீங்கள் வழக்கமாக சாப்பிடும் சட்னியின் சுவையில் இருந்து வேறுபட்டிருக்கும். முக்கியமாக இந்த சட்னியை 10 நிமிடத்திற்கு உள்ளேயே செய்து விடலாம். அந்த அளவில் இது செய்வதற்கு ஈஸியாக இருக்கும்.

உங்களுக்கு கிராமத்து ஸ்டைல் வெங்காய சட்னியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கிராமத்து ஸ்டைல் வெங்காய சட்னி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* புளி - சிறிய எலுமிச்சை அளவு
* வரமிளகாய் - 7
* தண்ணீர் - 1/2 கப்
* வெங்காயம் - 5
* பூண்டு - 6 பல்
* கறிவேப்பிலை - 1 கைப்பிடி
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* உப்பு - சிறிது
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிய எலுமிச்சை அளவு புளி
மற்றும் 6-7 வரமிளகாயை எடுத்து, அதில் 1/2 கப் நீரை ஊற்றி, 5 நிமிடம்
ஊற வைக்க வேண்டும்.
* பின்பு ஒரு நீளமான கம்பியை எடுத்து, அதில் பெரிய வெங்காயத்தை சொருகி
அடுப்பில் மிதமான தீயில் வைத்து சுட்டு எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் பூண்டு பற்களையும் அப்படி நெருப்பில் சுட்டு எடுத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு வெங்காயத்தின் தோலை நீக்கிவிட்டு, அவற்றை துண்டுகளாக்கிக்
கொள்ள வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் துண்டுகளாக்கப்பட்ட வெங்காயம், பூண்டு, ஊற
வைத்த புளி மற்றும் வரமிளகாயை நீருடன் அப்படியே ஜாரில் ஊற்ற
வேண்டும்.
* பின் அதில் கறிவேப்பிலை, சீரகம், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, சற்று
கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு கிண்ணத்தில் அரைத்த சட்னியை எடுத்துக் கொண்டு, அதில் 1
டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி கலந்து பரிமாறினால், சுவையான வெங்காய
சட்னி தயார்.



Click it and Unblock the Notifications











