Latest Updates
-
செவ்வாய்-சந்திர சேர்க்கையால் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்: மார்ச் 16 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
18 மாதங்களுக்கு பின் உருவாகும் மங்களாதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிகளின் நீண்டகால ஆசைகள் நிறைவேறப்போகுதாம்...! -
1500 கிலோ தங்கத்தால் கட்டப்பட்ட தங்க கோயில் தமிழ்நாட்டில் எங்கு உள்ளது தெரியுமா? நீங்க இங்க போயிருக்கீங்களா? -
வெயிலால் உங்க முகம் கருமையாகாமல் இருக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க... -
1 முறுக்கு பாக்கெட் இருந்தா இந்த மாதிரி காரைக்குடி ஸ்டைலில் குழம்பு வையுங்க... வித்தியாசமா சூப்பரா இருக்கும்.. -
வெயில் காலத்தில் மாலை வேளையில் இத செஞ்சு சாப்பிடுங்க.. உடம்பு குளுகுளு-ன்னு இருக்கும்.. -
அழகான பெண்கள் இந்த 4 ராசி ஆண்களை தேடிப்போய் காதலிப்பார்களாம்... உங்க ராசி இதுல இருக்கா? -
மார்ச் இறுதியில் நடக்கும் சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு கூரைய பிச்சுக்கிட்டு பணம் கொட்டப்போகுது... -
கேஸ் அதிகம் தேவைப்படாத அட்டகாசமான சாம்பார் சாதம் ரெசிபி..இந்த மாறி செஞ்சு பாருங்க... டேஸ்ட் செமயா இருக்கும்... -
அடுப்பில்லாமல் செய்யக்கூடிய பச்சப்புளி ரசம் - செஃப் மாதம்பட்டி ரங்கராஜ் ஸ்டைலில் எப்படி செய்றதுன்னு பாருங்க..
வெண்டைக்காயை ஒருமுறை இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அப்புறம் பாருங்க அடிக்கடி செய்வீங்க...
Vendakkai Fry Recipe In Tamil: மதியம் சாதத்துக்கு என்ன சைடு டிஷ் செய்வதென்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? உங்கள் வீட்டில் வெண்டைக்காய் உள்ளதா? ஆனால் வெண்டைக்காய் செய்தால் வீட்டில் உள்ளோர் யாரும் சாப்பிடமாட்டார்களா? அவர்களை வெண்டைக்காய் சாப்பிட வைக்க வேண்டுமா?
அப்படியானால் வெண்டைக்காயை இந்த மாதிரி ப்ரை செய்து கொடுங்கள். இந்த வெண்டைக்காய் ப்ரை சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் என அனைத்திற்கும் அட்டகாசமான சைடு டிஷ்ஷாக இருக்கும். மேலும் இது செய்வதற்கு மிகவும் சுலபமாக இருக்கும். முக்கியமாக குழந்தைகள் கேட்டு விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் ருசியாக இருக்கும்.

உங்களுக்கு இந்த வெண்டைக்காய் ப்ரையை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வெண்டைக்காய் ப்ரை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* வெண்டைக்காய் - 15
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* கடலை மாவு - 1 டீஸ்பூன்
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன் + 1 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 1 (மெல்லியதாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 3/4 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* தண்ணீர் - 1 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* முதலில் வெண்டைக்காயை நன்கு நீரில் கழுவி, அதை துடைத்துவிட்டு,
மெல்லிய சிறு நீளத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* பின் நறுக்கிய அந்த வெண்டைக்காயுடன் மஞ்சள் தூள், கடலை மாவு
சேர்த்து பிரட்டிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் ஊற்றி சூடானதும், இந்த வெண்டைக்காயை கொஞ்சம் கொஞ்சமாக
சேர்த்து ப்ரை செய்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.
* பிறகு அதே வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும்,
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு சேர்த்து,
பொன்னிறமாக வதக்க வேண்டும்.
* பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள் சேர்த்து 1
நிமிடம் குறைவான தீயில் வைத்து வதக்கி, 1 டேபிள் ஸ்பூன் நீரை ஊற்றி,
பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் ப்ரை செய்து வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து நன்கு
ஒருசேர வதக்கி இறக்கினால், சுவையான வெண்டைக்காய் ப்ரை தயார்.
Image Courtesy: Spiceindiaonline



Click it and Unblock the Notifications











