ஷாஹி காளான் மசாலா

Posted By:
Subscribe to Boldsky

உங்களுக்கு காளான் ரொம்ப பிடிக்குமா? ஆனால் அதனை சுவையாக சமைத்து சாப்பிடத் தெரியாதா? அப்படியானால் தமிழ் போல்ட் ஸ்கை ஒரு அருமையான காளான் ரெசிபியை எப்படி செய்வதென்று படிப்படியாக கொடுத்துள்ளது. அந்த ரெசிபிக்கு பெயர் ஷாஹி காளான் மசாலா. இந்த ரெசிபி செய்வதென்பது மிகவும் ஈஸி.

அதிலும் இந்த ரெசிபியை வீட்டிற்கு விருந்தினர் வரும் போது செய்தால், அவர்களிடம் நல்ல பெயரை வாங்கலாம். சரி, இப்போது அந்த ஷாஹி காளான் மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

காளான் - 500 கிராம்

ஊற வைப்பதற்கு...

தயிர் - 1/2 கப்

உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன்

கிரேவிக்கு...

வெங்காயம் - 2 (நறுக்கியது)

இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

தக்காளி - 2 (நறுக்கியது)

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்

சீரகப் பொடி - 2 டீஸ்பூன்

மல்லி தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

உலர்ந்த வெந்தய இலை - 1 டீஸ்பூன்

சீரகம் - 1 டீஸ்பூன்

பிரியாணி இலை - 1

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
படி 1

படி 1

முதலில் காளானை சுடுநீரில் போட்டு நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். பின் அதனை ஒரு பௌலில் போட்டு அத்துடன் தயிர், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி சேர்த்து பிரட்டி 15-20 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

படி 2

படி 2

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை சேர்த்து தாளித்து, பின் வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு பொன்னறிமாக வதக்க வேண்டும்.

படி 3

படி 3

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சீரகப் பொடி, மல்லித் தூள் மற்றும் தக்காளி சேர்த்து 3-4 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

படி 4

படி 4

அடுத்து அதில் ஊற வைத்துள்ள காளான் மற்றும் உப்பு சேர்த்து, 3-4 நிமிடம் குறைவான தீயில் வேக வைக்க வேண்டும்.

படி 5

படி 5

பிறகு கரம் மசாலா மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.

படி 6

படி 6

பின் உலர்ந்த வெந்தய இலையை சேர்த்து பிரட்டி விட வேண்டும்.

படி 7

படி 7

இறுதியில் மூடி வைத்து குறைவான தீயில் 2-3 நிமிடம் காளானை வேக வைக்க வேண்டும்.

படி 8

படி 8

காளான் நன்கு வெந்துவிட்டால், அதனை இறக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

படி 9

படி 9

இறுதியில் ஷாஹி காளான் மசாலாவை சாதத்துடன் சேர்த்து பரிமாறினால் சுவையாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Step-by-Step Recipe For Shahi Mushroom Masala

Here is the step-by-step recipe for shahi mushroom masala. Take a look and enjoy this royal delight with family and friends.
Story first published: Saturday, October 18, 2014, 13:28 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter